வியாழன், 21 நவம்பர், 2013

ATM இல் ஜோதி வெட்டப்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க அச்சம்!

பெங்களூரு : பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில், வங்கி பெண் அதிகாரி, மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே, அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரை பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 'ஏ.டி.எம்., மையங்களுக்கு பாதுகாவலர்களை நியமியுங்கள் அல்லது, ஏ.டி.எம்.,களை மூடுங்கள்' என, வங்கிகளுக்கு, கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  ஏ.டி.எம்., ஷட்டரை மூடினால்) அலாரம் அடிக்கும்படி செய்யலாம் ( சர்விஸ் செய்ய தனி ஸ்விட்ச்சை ஏ.டி.எம்., மெஷினில் பாஸ்வேர்டுடன் வைக்கலாம் ) 2) ஒரு ஆளுக்கு மேல் உள்ளே நுழைந்தால் ஏ.டி.எம்.,லாக் செய்வது போல செய்யலாம் 3) சி சி டி வி கேமராவை பார்த்து அலறினால் ( ஒரு குறிப்பிட்ட டெசிபல் சத்தத்துக்கு மேல் அலறல் சத்தம் அல்லது அருகில் ஒரு அலாரம் செயின் ரயிலில் இருப்பது போல செட் செய்யலாம்
மாநகராட்சி அலுவலகம்:
பெங்களூரு, மிஷன் ரோட்டில் உள்ள, கார்ப்பரேஷன் வங்கியில், மேலாளராக பணியாற்றுபவர், ஜோதி உதய், 38. இவர், நேற்று முன்தினம் காலை, 7:10 மணிக்கு, பெங்களூரு, மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள, ஏ.டி.எம்., மையத்துக்கு, பணம் எடுக்கச் சென்றார்.அப்போது, அவரை, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென, ஏ.டி.எம்., மையத்துக்குள் புகுந்து, வெளிப்புற ஷட்டரை மூடினான். மிரண்டு போன ஜோதி உதய், அங்கிருந்து, வெளியில் செல்ல முயன்றார்.அந்த மர்ம நபர், துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி, ஜோதியை மிரட்டினான். ஜோதி, சத்தம் போட முயற்சித்ததால், அந்த கொடூரன், அரிவாளால், அந்தப் பெண்ணின் தலையில், பல முறை வெட்டினான்.பின், ஜோதியிடமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, வெளியில் வந்து, மீண்டும், ஷட்டரை, வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.ரத்த வெள்ளத்தில், மயங்கி கிடந்த ஜோதியை, மூன்று மணி நேரம் கழித்து, அந்த வழியாக சென்ற சிலர், மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த காட்சி முழுவதும், ஏ.டி.எம்.,மில் பொருத்தப்பட்டிருந்த, ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.


பொதுமக்கள் அதிர்ச்சி:

இந்த காட்சிகள், 'டிவி' சேனல்களில் நேற்று ஒளிபரப்பானதை பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்தனர்.படுகாயமடைந்த, ஜோதி, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, 'நிமான்ஸ்' மருத்துவமனைக்கும், ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள, பி.ஜி.எஸ்., மருத்துவமனைக்கும் எடுத்து செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர் வெங்கட் ரமணா கூறியதாவது:தலையில் வெட்டுபட்டு, நீண்ட நேரம் கவனிப்பார் இல்லாமல் கிடந்ததால், ரத்தம் அதிகமாக வீணாகி விட்டது. தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதன் ஒரு சிதறல், மூளைப் பகுதியில் சென்று விட்டது.இதனால், அவர் உடலின் வலதுபக்கம் முழுவதும், செயல் இழந்து விட்டது. ஆபரேஷன் செய்துள்ளோம். அவர் குணமடைய, ஆறு மாதங்கள் ஆகலாம். அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. மெல்லிய குரலில் பேசுகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

யாரென்று தெரியாது:

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர், ராகவேந்திரா அவுரத்கர், மருத்துவமனைக்கு சென்று, ஜோதி உதயை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது, கமிஷனரிடம், 'என்னை தாக்கியவன் யாரென்று தெரியாது' என, ஜோதி உதய் கூறியுள்ளார்.

கமிஷனர், ராகவேந்திரா அவுரத்கர் கூறியதாவது:ஜோதி, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நிறைய ரத்தம் வெளியேறியதால், பலவீனமாக உள்ளார். ஆபரேஷன் நடந்துள்ளது. ஏ.டி.எம்., மையத்தில் உள்ள, கேமராவில் பதிவான காட்சிகள், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை செய்து, குற்றவாளியை பிடிக்க, மூன்று தனி படை அமைக்கப்பட்டுள்ளது.

28 வழக்குகள்:

கர்நாடகாவில் மட்டுமல்ல, வெளி மாநிலத்திற்கும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். வங்கிகளில் பாதுகாப்பு அமைப்பு சரியாக இல்லை. 38 ஏ.டி.எம்., வழக்குகளில், இது வரை, 28 வழக்குகள் துப்பு துலக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.,மில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, உள்துறை செயலர் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கர்நாடக உள்துறை அமைச்சர், ஜார்ஜ், போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார்.

இதன் பின், அவர் கூறியதாவது:இந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. பெங்களூரில், 2,580 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 600க்கும் மேற்பட்ட மையங்களில், பாதுகாவலர்கள் இல்லை. இது தான், பிரச்னைக்கு காரணம். வங்கி அதிகாரி தாக்கப்பட்ட ஏ.டி.எம்.,மிலும், பாதுகாவலர் இல்லை.எனவே, 'ஏ.டி.எம்., மையங்களுக்கு பாதுகாவலர்களை நியமியுங்கள் அல்லது ஏ.டி.எம்., மையங்களை மூடுங்கள்' என, வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

பாதிப்பு ஏற்படும்:

இதுகுறித்து, பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:அதிகாலை, இரவு நேரங்களில், பெண்கள் மற்றும் வயதானோர், ஏ.டி.எம்., மையங்களுக்கு செல்வது, ஆபத்தான காரியமாகி விட்டது. பல, ஏ.டி.எம்., மையங்களில், பாதுகாவலர்கள் இல்லை. இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிடா விட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: