புதன், 20 நவம்பர், 2013

சுகாதாரமற்ற கழிவறைகளால் மரணிக்கும் குழந்தைகள்!

டெல்லி: திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்துவதன் மூலமும், சுகாதாரமற்ற கழிவறைகளின் மூலம் தினசரி 2000 குழந்தைகள் மரணிக்கின்றனர் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தை பேணுவது இல்லை. 1.1 பில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகளை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற ஐக்கிய நாடு பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய ஐ.நா தூதர் மார்க் நியோ கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நவம்பர் 19ம் தேதியை உலக கழிவறை தினமாக கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்டது. விவாதத்தை தொடர்ந்து 193 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்

 இந்தியாவில் 61 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை. தமிழகத்தை பொறுத்த வரையில் 57 சதவீதம் பேருக்கு இந்த வசதி இல்லை. `மை டாய்லட் கிளீனர்' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
 மேலும் நகர்ப்புறங்களில் 40 சதவீதம் மேற்கத்திய கழிவறைகள் பயன் படுத்தப்படுவதால் சுகாதாரம் நன்றாக காக்கப் படுகிறது. மீதமுள்ள கழிவறைகள் டாய்லட் கிளீனர் பயன்படுத்தப்படாததால் கிருமிகள் இருக்கும் பகுதியாக உள்ளது.

கருத்துகள் இல்லை: