திங்கள், 18 நவம்பர், 2013

சரத்குமார் பேட்டி: எதிர்க்கட்சிகள் தேவையில்லை ! அப்படி போடு சரத்து ! இனி பன்னிர்செல்வதிற்கு சான்ஸ் கிடைக்காது !

நிர்வாகத் திறன் கொண்ட முதல்வர் இருக்கும்போது எதிர்க்கட்சிகள்
தேவையில்லை என்றார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
  அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வருகிறது. எனவே, மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடுகளுக்கு சமத்துவ மக்கள் கட்சியும் உடன்படும். கூட்டணித் தலைமை போட்டியிடக் கேட்டால் சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடும். கூட்டணி தலைமையில் முடிவுக்கு கட்டுப்படுவோம்  அட வேறென்னதான் பண்ணுவீங்க   மாற்றுக் கருத்து இல்லை.
  அதேநேரத்தில் முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்தும், முள்ளிவாய்க்கால் முற்றம் குறித்தும் தொடர்ந்து கவனித்து வருகிறார். அனைத்துக் கோப்புகளும் முதல்வரின் பார்வையில் இருந்து வருகின்றன. எனவே, அவர் நல்ல முடிவை எடுப்பார். தமிழர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக அரசு இருந்து வருகிறது.
  நிர்வாகத்தில் திறமையான அரசு மாநிலத்தில் இருக்கிறது. எனவே, எதிர்க்கட்சிகள் தேவையில்லை. கேள்வியைத் தானே கேட்டு, பதிலையும் சொல்லும் கருணாநிதி தலைமையிலான திமுகவும் வேண்டாம், தேமுதிக வேண்டவே வேண்டாம்.

  தேமுதிகவில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதற்கு அக்கட்சியின் தலைமைதான் காரணம். காமன்வெல்த் மாநாடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் முக்கிய கூட்டத்துக்குக் கூட அக்கட்சியின் தலைவர் வருவதில்லை.
   தொலைநோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததுதான் மின்வெட்டுக்கான காரணம். இதுவரை அண்டைமாநிலங்களில் மின்சாரத்தை வாங்கியே சமாளித்துவிட்டனர். மின்தட்டுப்பாட்டை முதல்வர் ஜெயலலிதா விரைவில் சீர்செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
  முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவரது முயற்சிகளை தொடர்ந்து ஆதரிக்கிறோம், பாராட்டுகிறோம்.
  கள் இறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமத்துவ மக்கள் கட்சியும் ஆதரிக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சமூகத்தை மரம் ஏறவிடலாமா? என்றும் ஒரு பிரிவினர் கேட்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும்போது கள் குறித்து மீண்டும் பேசுவோம். நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையும், வாய்ப்பும் இருக்கிறது என்றார் சரத்குமார். தினமணி.com

கருத்துகள் இல்லை: