செவ்வாய், 19 நவம்பர், 2013

36,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஈமு கோழிகள் 50 ரூபாய்க்கு ஏலம்

36,000 ரூபாய் விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட  ஈமுகோழி 50,ரூபாய்க்கு ஏலம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுசி ஈமு பார்ம் இந்தியா பிரைவேட் லிட்., நிறுவனத்தில், பணத்தை முதலீடு செய்தவர்கள் 2012 ஆகஸ்ட், 6-ம் தேதி, பணத்தை திருப்பிக்கேட்டு முற்றுகையிட்டனர்.இதை தொடர்ந்து, அதன் உரிமையாளர் குருமூர்த்தி என்ற குரு தலைமறைவானதால், அந்நிறுவனம் மூடப்பட்டது. தொடர்ந்து, ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம் என பல இடங்களில் இயங்கி வந்த 42 ஈமு கோழி நிறுவனங்கள் மூடப்பட்டது.ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 225 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார் தெரிவித்தனர். 154 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 76 பேர் கைது செய்யப்பட்டனர்.மோசடி நிறுவனங்களின் கட்டிடங்கள், பண்ணைகள், 163 வாகனங்களுடன், ஈமு கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கால்நடை துறை மூலம் ஈமு கோழிகள் பராமரிக்கப்பட்ட்டு வருகிறது..


கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவுபடி, ஈமு கோழிகளை, மாவட்ட வருவாய்த்துறை ஏலம் நடத்தி விற்பனை செய்து வருகிறது. சுசி ஈமு நிறுவனத்தில் பறிமுதல் செய்த, ஈமு கோழிகளுக்கான ஏலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்நிறுவனத்தின் பறிமுதல் செய்த, 4,600 ஈமு கோழிகளுக்கு, டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமையில் நேற்று ஏலம் நடந்தது.


பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஜெகன்நாதன், கால்நடை துறை அதிகாரிகள், அரசு வக்கீல் உள்ளிட்டோர் முன்னிலையில் ஏலம் துவங்கியது. திண்டுக்கல் "விஆர்3' கால்நடை தீவன தொழிற்சாலை உரிமையாளர் ராம்ராஜ், பெருந்துறை, சீனாபுரம், பட்டக்காரன்பாளையம் நல்லசாமி ஆகிய இருவரும் ஏலத்தில் பங்கேற்றனர்.


"விஆர்3' நிறுவனம் சார்பில், ஈமு கோழியை தலா, 10 ரூபாய்க்கும், நல்லசாமி தரப்பில், தலா, 36 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்திருந்தனர்.


கடந்த, 2011-12-ல் சுசி ஈமு நிருவனத்தின் சார்பில் ஒரு கோழி, 36,000 ரூபாய்க்கு பொதுமக்களிடம் விற்பனை செய்த நிலையில், நேற்று, 10 ரூபாய்க்கு விலை நிர்ணயித்தது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.


மாலை, 7 மணி வரையிலும் கோழியின் விலையை உயர்த்தும்படி, டி.ஆர்.ஓ., கோரியதால், ஒரு கோழி, 50 ரூபாய் என்ற விலைக்கு, நல்லசாமி, 800 கோழியையும், "விஆர்3' ராமராஜ், 3,696 கோழியையும் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தோடு, அரசு பராமரித்து வந்த கோழிகள் முழுமையாக விற்கப்பட்டுள்ளது.


இந் நிறுவனத்தின் சார்பில் வளர்க்கப்பட்ட மீது- 3,430 முதலீட்டாளர்கள், 94 கோடியே, 70 லட்சத்து, 82 ஆயிரத்து, 722 ரூபாய் மோசடி புகார் தெரிவித்துள்ளனர்nakkheeran.in

கருத்துகள் இல்லை: