‘நிசப்த்’
படத்தில் நடிகர் அமிதாப்பச்சனுடன் ஜோடியாக நடித்த 25 வயது இளம்
நடிகை ஜியாகான் மும்பையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கஜினி இந்திப்படத்தில் அமீர்கானுடனும், ‘ஹவுஸ்புல்’ படத்தில் அக்ஷய் குமாருடனும் நடித்தார். வளர்ந்து வரும் நடிகை தற்கொலை செய்ததால் மும்பை சினிமா உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது சாவுக்கான காரணம் பற்றி மும்பை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் மன அழுத்தம் ஏன் உருவானது என்ற கேள்வி எழுந்ததுஅப்போது நடிகை ஜியாகான் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்தது. சூரஜ் பிரபல நட்சத்திர தம்பதியான ஆதித்ய பாஞ்சோலி- ஜரினா வகாப் தம்பதியின் மகன் ஆவார். ஜியாகான் மரணத்துக்கு முன் கடைசியாக இவர்தான் செல்போனில் பேசி இருக்கிறார்.

அன்றைய
தினம் மட்டும் 63 முறை பேசிய அவர் கடைசியாக 30 நிமிடங்கள் நீண்ட நேரம்
பேசி இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடு ஏற்பட்டதாகவும் போனில் இருவரும் காரசாரமாக பேசி வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். அந்த கோபத்தில்தான் ஜியாகான் தனது வீட்டில் இருந்த காதலர்
கொடுத்த பூச்செண்டை வெளியில் தூக்கி வீசி விட்டு உடனே தற்கொலை செய்து
கொண்டார் என்பது தெரிய வந்தது.நடிகைகளின் வாழ்வில் எதோ சொல்ல முடியாத சோகம் இருக்கிறது
மேலும்
ஜியாகானின் லேப் டாப்பையும் போலீசார் கைப்பற்றி சைபர் பிரிவு மூலம் ஆய்வு
செய்தனர். அதில் காதலர் சூரஜ் படங்கள் இருந்தன. இருவருக்கும் இடையேயான பேஸ்
புக் உரையாடல்களும் இடம்பெற்று இருந்தன. இதுதொடர்பாக மும்பை போலீசார்
சூரஜை அழைத்து விசாரித்தனர். பின்னர் விட்டு விட்டனர்.ஆனால் அவர் மீது எந்த
வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஜியாகான்
மரணம் எதிர்பாராமல் நடந்த விபத்து என்று வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
தற்கொலைக்கான ஆதாரம் கிடைக்குமா என்று ஜியாகான் வீட்டில் போலீசார் சோதனை
நடத்தினர். ஆனால் ஆதாரம் சிக்கவில்லை.
இந்த
நிலையில் ஒரு வாரம் கழித்து ஜியாகான் எழுதிய கடிதத்தை அவரது
குடும்பத்தினர் நேற்று கண்டுபிடித்ததாக போலீசில் தெரிவித்தனர். அந்த
கடிதத்தில் 6 பக்கங்களில் காதல் விவகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டு
இருந்தது. கடிதத்தில் கூறப்பட்ட முழு விவரங்களையும் ஜியாகான்
குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
எனவே
இந்த கடிதம் குறித்து தடயவியல் சோதனை நடத்த வேண்டும் என்று போலீசார்
தெரிவித்தனர். அந்த கடிதத்தில் ஜியாகான் தனது காதலர் பற்றி
குறிப்பிடுகையில், நான் உன்னுடனான நட்பின் மீது நம்பிக்கை வைத்து
இருந்தேன். ஆனால் நீ என்னை மோசம் செய்து விட்டாய். நம் இருவர் இடையேயான
நட்பை நீ பொருட்படுத்தவில்லை. எனவே இந்த கடிதத்தை நீ படிக்கும் போதுநான்
இந்த உலகத்தை விட்டே போய் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது
ஜியாகான் எழுதிய கடிதம் சிக்கியிருப்பதால் வழக்கில் திருப்பம்
ஏற்பட்டுள்ளது. கடிதம் உண்மையா? ஜியாகான் கைப்பட எழுதியதா என சோதனை நடத்த
போலீசார் முடிவு செய்துள்ளனர். அது உண்மை என தெரிய வந்தால் காதலன் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சூரஜ் மீதான குற்றச்சாட்டுகளை அவரது தந்தை ஆதித்ய பாஞ்சோலி மறுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக