வெள்ளி, 29 மார்ச், 2013

தி.மு.க., வெளியேறியதால் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டதா

சென்னை: ""தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்து விட்டது? இலங்கை தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற்பட்டு விட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்து விட்டதா? பார்லிமென்டில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா? மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேறியது மட்டும் தான் நடந்தது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விரக்தி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றால், சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா? தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்து விட்டது? இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவு ஏற்பட்டு விட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்து விட்டதா? பார்லிமென்டில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா? மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேறியது மட்டும் தான் நடந்தது.
ஆனால், அதற்காக தி.மு.க., சிறிதும் கவலைப்படவில்லை.

கடந்த, 2009ல் தி.மு.க., மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும், இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வர். அப்போதே வெளியேறியிருந்தால், இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.க.,வின் மீது பழியைப் போடுகின்ற, ஒரு செயலே தவிர வேறல்ல. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகிய போதிலும், மத்திய ஆட்சியைப் கவிழ்ப்பதற்கான முயற்சியில், யாராவது ஈடுபட்டால், அதற்கு தி.மு.க., துணைப் போகாது என, அன்பழகன் பேசியதை எடுத்துக்காட்டி, அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ளார். எதற்கெடுத்தாலும், நான் இரட்டை வேடம் போடுவதாக, ஜெயலலிதா அடிக்கடி கூறுகிறார். சேது சமுத்திரம் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு, தற்போது அதை வேண்டாமென்று ஜெயலலிதா கூறுகிறாரே அதற்குப் பெயர் தானே, இரட்டை வேடம். காவிரி ஆணையத்தை பல் இல்லாத வாரியம், செயல்படாத வாரியம் என்றல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்கு பெயர்தானே, இரட்டை வேடம். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: