வெள்ளி, 26 அக்டோபர், 2012

விஜய் மல்லையாவின் நரிதந்திரம்! கார் பந்தயத்தில் தலை உருளாமல் தப்பித்தார்!


Viruvirupu
கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, ட்ரிக்கியாக ஒரு காரியம் செய்திருக்கிறார். அதையடுத்து, கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு வந்தது. நிர்வாகத்திற்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வேலைநிறுத்தத்தை கைவிட ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், சஹாரா ஃபோர்ஸ் கார் பந்தய டீம் உரிமையாளர் விஜய் மல்லையாவின், மற்றொரு உரிமை நிறுவனம் கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள் நரி வேலைநிறுத்தத்தை கைவிட முடிவு செய்திருப்பது, (அல்லது முடிவு செய்ய வைத்திருப்பது) விஜய் மல்லையாவுக்கு, சந்தேகத்துக்கு இடமில்லாத வெற்றி.

வேலை நிறுத்தம் எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது?
கிங் பிஷர் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒன்றாம் தேதி விமான சேவைகள் நிறுத்தப்படுவதாக கிங் பிஷர் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, கிங்பிஷர் விமானங்களின் பறக்கும் உரிமமும் சஸ்பென்ட் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்குள் 4 மாத சம்பள பாக்கியை வழங்க ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றன.
தற்போது கிங்பிஷர் நிர்வாகம், மார்ச் மாத ஊதியத்தை  24 மணிநேரத்திற்குள்ளும், ஏப்ரல் மாத ஊதியத்தை  இம்மாத இறுதிக்குள்ளும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. மே மாத ஊதியம் தீபாவளிக்குள் வழங்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கிராண்ட் ப்ரீ கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில், சஹாரா ஃபோர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவருமான விஜய் மல்லையா, பார்முலா ஒன் பந்தயத்தின்போது எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இந்த பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார் என்பதை யாரும் சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.
பார்முலா ஒன் பந்தயத்தின்போது போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள்ஈ அதை திரும்பபெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: