வெள்ளி, 26 அக்டோபர், 2012

மறுபடியும் மாளவிகா! மஞ்சள் புடவைக்கு ரெடி!

வாளமீனுக்கும் வெளாங்குமீனுக்கும் பாடலை விட மாளவிகாவின் மஞ்சள் புடவை தான் பெரிய ஹிட்டானது. மஞ்சள் புடவை கட்டி ஆடிய மாளவிகாவிற்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்தன.  ‘திருட்டுப் பயலே’படத்தில் மாளவிகாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன. 
வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடாததால், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் குத்து பாடல்களுக்கு நடனமாடிய மாளவிகா திருமணமானதும் மும்பையில் செட்டில் ஆனார். இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட மாளவிகா இப்போது மறுபடியும் தமிழ் படங்களின் மூலம் திரைக்கு வரும் ஐடியாவில் இருக்கிறார்.
 ஸ்ரீதேவி, சோனியா அகர்வால் மாதிரி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளுக்குத் தான் முன்னுரிமை என்றும், ஆபாச நடனமும், பாடல் வரிகளும் இல்லாத குத்துப் பாடல்களுக்கு நடனமாடுவது பிரச்சனை அல்ல என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: