பப்பாளி இலைச் சாறு மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பருக்குவதன் மூலம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குருதிச் சிறுதட்டுக்களின் அளவினை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று இந்த முறையின் மூலம் 20 டெங்கு நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளதாகவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
வெலிபிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் எஸ்.எம்.என்.அமீன் என்பவரே பப்பாளி இலைச் சாறு சிகிச்சை மூலம் 20 நோயாளிகளைக் குணப்படுத்தியவராவார்.
இச்சிகிச்சையின் விஞ்ஞான ரீதியான விளக்கம் தெரியாத போதிலும் திரவ உணவுகளுக்கிடையே இந்த பப்பாளி சாற்றை வழங்குவதால் பாதிப்பு ஏற்படாது என்று மாத்தறை பொது வைத்தியசாலை வைத்தியரான பிரதீப் குமார தெரிவித்தார். இதேவேளை, குறித்த பப்பாளி குறித்திலைச் சாறானது, மனித உடலிலுள்ள குருதிச் சிறுதட்டுக்களின் அளவினை அதிகரிக்கச் செய்யும் என்று அபருக்க ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் டபிள்யூ.கே.எம்.அபேசேகர கூறினார்.
http://www.tamil.dailymirror.lk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக