வெள்ளி, 30 ஏப்ரல், 2010

சுவாமி நித்யானந்தா தான் ஒரு ஆண் இல்லை என்று தெரிவித்துள்ளார்.ஆண்மை பரிசோதனைக்கு தான் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

சுவாமி நித்யானந்தா தான் ஒரு ஆண் இல்லை என்று தெரிவித்துள்ளார்.ஆண்மை பரிசோதனைக்கு தான் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

விசாரணையில் நித்யானந்தா சாமியார் கூறுகையில், நான் ஆண் பிறவி அல்ல. பின்னர் நான் எப்படி பெண்களிடம் உடலுறவு கொள்ள முடியும் என்று கூறினார். மேலும் அவர் என் ஆண்மைத் தன்மையை சோதியுங்கள் என்று கூறியதை அடுத்து போலீசார் அதிர்ச்சியுற்றனர்.

நித்தியானந்தா

பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார்கள் தொடர்பாக நித்யானந்தா ஏப்.21ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். பெங்களூர் அழைத்து வரப்பட்ட அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று (ஏப்.30) நித்யானந்தாவின் போலீஸ் காவல் முடிகிறது. எனவே இன்று 8-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

இன்று மாலை நித்யானந்தாவை ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனு கொடுப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் மீண்டும் போலீஸ் காவல் கிடைப்பது அரிது.

நித்யானந்தாவை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவார். இதையடுத்து ராம்நகர் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுவார் என்று தெரிகிறது. நித்யானந்தாவிடம் போலீசார் நடத்தி வரும் விசாரணை இன்னும் முடியவில்லை.

ஒத்துழைப்பு

நேற்றும், இன்றும் போலீசார் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நித்யானந்தா சமர்த்தாக, ஒழுங்காக பதில் சொன்னதாக தெரிய வந்துள்ளது. முதல் 5 நாட்கள் நித்யானந்தா எந்த பதிலையும் ஒழுங்காக சொல்ல வில்லை. எந்த கேள்வி கேட்டாலும், ஏதாவது மந்திரம் சொல்லி சமாளித்தப்படி இருந்தார். ஆனாலும் போலீசார் மனம் தளராமல் விசாரித்து சில தகவல்களை பெற்றுள்ளனர். அந்த தகவல்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

அதிர்ச்சி

இதற்கிடையே நேற்று போலீஸ் விசாரணையின் போது யாரும் யோசிக்காத புது குண்டு ஒன்றை நித்யானந்தா தூக்கிப் போட்டது தெரிய வந்துள்ளது. நேற்று விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரி, இதுவரை எத்தனை பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நித்யானந்தா, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அந்த விஷயம் தவறு. ஏனெனில் நான் ஆண் கிடையாது. ஆணே இல்லாத ஒரு நபர் எப்படி ஆசைக்கு அடி பணிந்து பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டிருக்க முடியும். அதற்கு வழியே இல்லை. நான் கடவுள் மாதிரி. வேண்டுமானால் நீங்கள் எனது ஆண்மையை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நித்யானந்தாவின் இந்த பதிலால் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் ஒரு நிமிடம் அரண்டு போய்விட்டனர். நித்யானந்தா ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத திருநங்கையாக இருக்குமோ என்று குழப்பம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்தே விசாரணையை திசை திருப்ப நித்யானந்தா செய்யும் நாடகம் என்று தெளிவான நிலைக்கு வந்தனர்.

ஆண்மை பரிசோதனை

முன்னதாக ஒரு கட்டத்தில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று பெங்களூர் போலீசார் தீர்மானத்துக்கு வந்தனர். இதற்காக பெங்களூரில் உள்ள 4 அரசு ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

இந்த நிலையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டில் அவர் ஆண் என்று குறிப்பிட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் நித்யானந்தா தான் ஆண் இல்லை என்று சொன்னதை போலீசார் கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையே தடயவியல் சோதனையிலும் அவர் ஆண் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தும் முடிவை போலீசார் கைவிட்டு விட்டனர்.

தங்க செருப்பு


நித்யானந்தா தினமும் பூஜைக்கு பயன்படுத்தும் கமண்டலம் தங்கத்தால் தயாரிக்கப்பட்டது. அது போல அவர் அணியும் செருப்பும் தங்கத்தால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு செல்லும் போது அவர் தங்க செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி வருமான வரித்துறையினரும், சுங்க இலாகா அதிகாரிகளும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

உதவியாளர்..?


இதற்கிடையே நித்யானந்தாவின் உதவியாளர் கோபிகா எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது? அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதும் புரியாத புதிராக உள்ளது. நித்யானந்தாவின் நிழல் போல அவர் உலா வந்தார். நித்யானந்தா எந்த நாட்டுக்கு சென்றாலும் கூடவே கோபிகாவும் செல்லும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார்.

ரஞ்சிதா பிடதி ஆசிரமத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கியதும், அவருடன் நித்யானந்தா தீவிரமாக பழகத் தொடங்கியதும் கோபிகா கோபம் அடைந்து, சீடர் லெனினை தூண்டி விட்டு நித்யானந்தா செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கோபிகா..

அமெரிக்காவை சேர்ந்த ஒரு இந்திய பெண், தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு நித்யானந்தாவுக்கு பணிவிடைகள் செய்து வந்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அந்த பெண் தான் கோபிகாவாக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்துள்ளது. கோபிகா அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

நித்தியானந்தாதான் - சிடி உறுதி


நித்யானந்தா சாமியாரிடம் விசாரணை நடத்தி வரும் பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் பிடதி ஆசிரமத்தில் இருந்து 36 வீடியோ காட்சிகளை பறிமுதல் செய்திருந்தனர். அந்த சி.டி. காட்சிகளில் 5 பெண்களுடன் நித்யானந்தா சாமியார் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

விசாரணையின்போது, நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சி திரிக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பது நான் அல்ல என்று நித்யானந்தா கூறினார்.

இதைத் தொடர்ந்து சி.டி.க்களில் இருப்பது நித்யானந்தாவா? அல்லது வேறு யாருமா? என்பதை உறுதி செய்து கொள்ள பெங்களூர் போலீசார் தீர்மானித்தனர். நித்யானந்தா ஆசிரமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 35 வீடியோ கிளிப்பிங்ஸ், செல்போன், லேப்- டாப் கம்ப்யூட்டர், மற்றும் ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சிகள் கொண்ட சி.டி. ஆகியவற்றை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 நாட்களாக அங்கு தீவிர சோதனை நடந்தது. அதன் அடிப்படையில் தடயவியல் நிபுணர்கள் ஒரு அறிக்கை தயாரித்துள்ளனர். அந்த அறிக்கை இன்று பெங்களூர் போலீசார் கைக்கு வந்தது.

பிடதி ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட 35 வீடியோ காட்சிகளில் இருப்பது நித்யானந்தாதான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற காட்சியில் தோன்றுவதும் நித்யானந்தா சாமியார்தான் என்று ஆய்வகம் அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதனால் நித்யானந்தா மீதான போலீஸ் பிடி இறுகி உள்ளது. (டிஎன்எஸ்
நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவாகி கண்ணாமூச்சி ஆடி வந்த ரஞ்சிதா இப்போது போலீஸாரின் பிடியில் சிக்கியுள்ளார். அவர் பதுங்கியுள்ள இடத்தை நித்தியானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கு போட்டுக்கொடுத்து விட்டார். அவரது செல்போன் எண்களையும் கொடுத்து விட்டார்.

இதையடுத்து அதில் தொடர்பு கொண்ட போலீஸார், விசாரணைக்காக ஆஜராகிறீர்களா அல்லது நாங்கள் வரட்டுமே என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சிதா ,நானே வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளாராம்.

மேலும் தன்னிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர் யோகப்பாவிடம், நான் தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன் என்று கூறினாராம் ரஞ்சிதா

கருத்துகள் இல்லை: