வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி இரவு இடம்பெற்ற மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீரில் மூழ்கி மரணமான சம்பவம் குறித்து வவுனியா மாவட்ட நீதிவான் ஏ-ஜி லெக்ஸ்ராசா சம்பவ இடத்திற்கு நேற்றுமாலை (செவ்வாய்) சென்று விசாரணைகளை நடத்தினார்.
சந்தேகநபர் வழங்கிய தகவலின்பேரில் புதைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை காண்பிக்கும் பொருட்டு கல்மடுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கைவிலங்குடன் தப்பியோடும் முகமாக கல்மடு குளத்தில் குதித்தபோது நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார் என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
திங்கள் இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டு வவுனியா பொதுவைத்தியசாலை சவச்சாலைக்கு பொலிஸாரினால் எடுத்துவரப்பட்டுள்ளது. மாணவியின் கொலை தொடர்பாக மேலும் இருவர் கைதாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக