யாழ்குடாநாட்டில் பாதுகாப்பு படையினர் தாம் தங்கியுள்ள தனியார் காணிகளிலிருந்து படிப்படியாக வெளியேறுவார்கள் என பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் யாழ்குடாநாடு மற்றும் ஆணையிறவுக்கான தனது விஜயத்தின்போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார் நேற்றுக்காலை ஆணையிறவில் யுத்த நினைவுத்தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டவேளையிலேளேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகளுடனான தீவிர யுத்தகாலத்தில் படையினர் யாழ்குடாநாட்டில் தாம் பயன்படுத்துவதற்காக எடுத்துக்கொண்ட காணிகளிலிருந்த படிப்படியாக வெயேறுவர் என அவர் தெரிவித்துள்ளார் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியில் படையினர் முக்கிய பங்களிப்பை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதேநேரம் மே12ம் திகதி முதல் 18ம் திகதி வரையிலான ஒருவாரகாலப்பகுதியில் யுத்தவீரர்கள் வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்தள்ளதாகவும் பாதுகாப்பச்செயலாளர் தெரிவித்துள்ளார் ஒருவார நிகழ்வுகள் கொழும்பில் வெற்றித்தினக்கொண்டாட்டங்களுடன் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வியாழன் வெள்ளிக்கிழமைகளில் யுத்தத்திற்கு பிந்திய சூழல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக வடபகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிரு;ந்ததும் சுட்டிக்காட்டதக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக