செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பொது மன்னிப்புப் பெறும் தகுதி நளினிக்குக் கிடையாது

சென்னை: பொது மன்னிப்புப் பெறும் தகுதி நளினிக்குக் கிடையாது. எனவே அவருக்கு பொது மன்னிப்பு அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 19 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார் நளினி. தன்னை விடுதலை  FPRIVATE "TYPE=PICT;ALT=[^]" செய்யுமாறு கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தமிழக அரசும், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டது. அக்குழுவும் நளினியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் தனது அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது.

இந்த அறிக்கை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், நளினியை விடுதலை செய்வது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கடந்த வாரம் நீதிபதிகள் எலிபே தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விவாதம் நடந்த்து.

அப்போது வாதாடிய நளினியின் வக்கீல், கடந்த சில ஆண்டுகளில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 1000 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே நளினியையும் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்.

அதற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்கையில், நளினியின் வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. எனவே பொது மன்னிப்பு பெறும் தகுதி அவருக்குக் கிடையாது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்போது நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

பின்னர் நீதிபதிகள் கூறுகையில், ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர் நளினி. பின்னர் இது கருணை ரீதியில் பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

எனவே சராசரி ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போல முன்கூட்டியே விடுதலை செய்வது உள்ளிட்ட எந்த சலுகைகையும் எதிர்பார்க்க முடியாது.

சிபிஐ வழக்குகளில் மாநில அரசால் தனித்த எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது, பொது மன்னிப்பு கோரவும் முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதை இந்த கோர்ட் ஏற்கிறது. அதேபோல சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரை மற்றும் அது தெரிவித்துள்ள காரணங்களையும் கோர்ட் ஏற்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை முன்கூட்டியே திட்டமிட்டு சதி செய்து கொலை செய்த செயலில் சம்பந்தப்பட்டுள்ள நளினி முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யவுள்ளதாக நளினியின் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: