திங்கள், 12 செப்டம்பர், 2011

இந்திய அரசு புலிகள் மீது சந்தேகம்

புதுடில்லியில் அண்மையில் இடம்பெற்றக் குண்டுத்தாக்குதல் குறித்து இந்திய அரசு புலிகள் மீது சந்தேகம் கொண்டுள்ளது. இந் நிலையிலேயே பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளது என த ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை இந்திய உள் விவகார அமைச்சு, பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலி மற்றும் பாபார் கல்சா எனப்படும் தீவிரவாத அமைப்பு ஆகியவை தொடர்பாக அதிகளவில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சு சகல பாதுகாப்பு அதிகாரி களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தல் சகல பிராந்திய பொலிஸ் பொறுப்பாளர்களுக்கும் உள்ளக பாதுகாப்புச் செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உரிய வகையில் பேணும் நோக்கில் பாது காப்பு கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: