திங்கள், 25 அக்டோபர், 2010

Rahul:மராட்டியத்தின் வளர்ச்சிகாக பீகார் மக்கள் பாடுபடுகிறார்கள்

ராகுல் காந்திக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்திக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை சிவசேனைக் கட்சி துவங்கியுள்ளது.​
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் ராகுல்காந்தி எம்.பி. பீகாரில் சுற்றுப்பயணம் செய்தபோது, "மராட்டியத்தின் வளர்ச்சிகாக பீகார் மக்கள் பாடுபடுகிறார்கள். ஆனால் அவர்களை அங்கிருந்து விரட்டுகிறார்கள் என்று பேசினார்.
இதற்கு சிவசேனா கட்சியின் நிர்வாக தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்தார். மும்பை டோம்பிவலியில் அவர், ராகுல்காந்திக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். 20 அடி உயர பேனரில்
அவர் முதல் கையெழுத்திட்டார். அவரைத்தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பேசுகையில், பீகார் மக்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தி பேசட்டும். ஆனால் அவர் மராட்டியர்களை ஏன் தாழ்த்தி பேச வேண்டும்? இது​போன்ற கருத்துகளை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்.​ மாநிலம் முழுவதும் இது​போன்ற போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
உத்தவ் தாக்கரே கையெழுத்திட்ட பிறகு ஏராளமான மக்களும்,​​ சிவசேனைத் தொண்டர்களும் அந்தப் பலகையில் கையெழுத்திட்டனர்.​ பின்னர் ராகுலுக்கு எதிராக அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை: