திங்கள், 1 நவம்பர், 2010

இந்தியில் 'கில்லி' ரீமேக்!



        நயன்தாராவுடன் காதல், மனைவி போட்ட வழக்கு என இப்போதைய ஹாட் டாக் பிரபுதேவாதான். திருமணம் செய்யக் கூடாது, சொத்து விற்க கூடாது என்று மனைவி ஆயிரத்தி எட்டு கண்டிஷன்கள் போட, அதைப் பற்றி எல்லாம் பிரபு தேவா கண்டுகொள்ளாத நிலையில்... பாலிவுட்டில் சல்மான் கானுடன் ’வாண்டட்’ (போக்கிரி ரீமெக்) படத்திற்கு பிறகு அபிஷேக் பச்சன் நடிக்கும் படத்தை இயக்க போகிறாராம். 

 

இது கில்லி ரீமேக் எனவும் சொல்லப்படுகிறது. பொதுவாக அதிகமான மாசாலாவை இந்தி ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். பிரபு தேவாவின் போக்கிரியின் இந்தி ரீமேக்கில் இதே போல் சொல்லப்பட்டது. தமிழ் தெலுங்கை விட அதிகமான ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தும் வாண்டட் செம ஹிட். இப்போது தமிழ் தெலுங்கு என சக்கப்போடு போட்ட கில்லியை இந்தில் இயக்க முடிவெடுத்திருக்கிறார் பிரபு தேவா. 

இதை அபிஷேக் பச்சானின் சொந்த நிறுவனமான ஏ.பி.சி.எல் தயாரிக்க இருக்கிறது என்பது  இன்னொரு செய்தி. கொஞ்ச நாட்களாகவே தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது இந்தி சினிமா. ரஜினியின் ரோபோ கலக்கிக் கொண்டிருக்க, கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க என தமிழ் படங்கள் இந்தியில் விரைவில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(அவங்க பாட்டுக்கு வழக்கு போடட்டும், நம்ம பாட்டுக்கு ஆட்டத்த போடுவோம்).

கருத்துகள் இல்லை: