ஞாயிறு, 24 அக்டோபர், 2010

காங்., நடைபயணம்...: தி.மு.க., அட்டாக்கிற்கு அமோக வரவேற்பு

மாட்டு வண்டி செல்ல முடியாத குக்கிராமங்களிலும் மத்திய அரசின் அருமை, பெருமைகளையும், சாதனைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில், தமிழக இளைஞர் காங்கிரசார் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் உத்தரவிட்டார்.இளைஞர் காங்கிரசார் தங்களது நடைபயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்தனர். அதாவது, 1,350 கி.மீ., தூரம் வரை நடைபயணம் செல்லவும், 125 சட்டசபை தொகுதிகளையும், 22 லோக்சபா தொகுதிகளையும் சுற்றி வருவதற்குரிய பயணத் திட்டத்தை அதிரடியாக வகுத்தனர்.

ஊர், ஊராக நடந்து செல்லும் இளைஞர் காங்கிரசாருக்கு தங்குவற்கு இட வசதி, உணவு வசதி, பொதுக்கூட்டம் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த தொகுதி எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத் தலைவர்கள் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்தார்.கடந்த 2ம் தேதி கன்னியாகுமரியில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தலைமையில், "சோனியா வாழ்க, ராகுல் வாழ்க' என்ற கோஷங்களுடன் துவக்கப்பட்ட நடைபயணத்தில் இளைஞர்கள் பலர் உற்சாகமாக பங்கேற்றனர்.குறைந்தபட்சமாக 300 பேர் தொடர் நடைபயணத்தில் பயணிக்கின்றனர். இளைஞர்கள் 54 பேர், இளம் பெண்கள் 12 பேர்  மட்டும் நிரந்தமாக நடந்து செல்லும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கிச் சென்ற நடைபயணம் போக, போக "பாதை' மாற ஆரம்பித்தது. அதாவது, ஆளுங்கட்சியை விமர்சித்தும், குறைகளை சுட்டிக்காட்டும் பயணமாக அமைந்து வருகிறது.தி.மு.க., அமைச்சர்கள் 16 பேர் நடத்தும் கல்லூரி, பள்ளிகளில் கல்வி கட்டணம் ஏன் குறைக்கவில்லை என்ற கேள்வியை இளைஞர் காங்கிரசார் பகிரங்கமாக கிராம மக்களிடம் எழுப்புகின்றனர். தி.மு.க., அரசு இயக்கிய பஸ்கள் மத்திய அரசின் ஜவகர்லால் நேரு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது குறித்தும், மாநில அரசின் வீடு கட்டும் திட்டமும் மத்திய அரசின் திட்டம் என இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்து வருகின்றனர்.காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள், திறக்கப்பட்ட பள்ளிக் கட்டங்கள் பட்டியலையும் அவர்கள் அடுக்குகின்றனர். ஆளுங்கட்சியில் பூட்டப்பட்டு கிடக்கும் பள்ளிகளின் பட்டியலையும் அடுக்கி  தி.மு.க., வினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.நடைபயணத்தில் இளைஞர் காங்கிரசுக்குள் இருக்கிற கோஷ்டி பூசல் வெடிக்கவும் தவறவில்லை.

அதாவது "மாநில தலைவர் யுவராஜா வாழ்க' என மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்களும், "துணை தலைவர் வரதராஜன் வாழ்க' என அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பி தங்களது தலைமையின் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.  மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் யாரும் பாதயாத்திரையை பார்வையிடவில்லை என்ற குறையும் நீடிக்கிறது. பாதயாத்திரையில் நடந்து வரும் இளைஞர்கள் இரவில் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இளம் பெண்கள் தனியாக தங்குகின்றனர்.மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மட்டும் வழிநெடுக பொதுமக்களிடம் வழங்குகின்றனர். கூட்டம் கூடுகிற இடங்களில் தெருமுனைக் கூட்டமாக பேசி விடுகின்றனரே தவிர பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த வில்லை என்ற குறையும் எழுந்துள்ளது.பாதயாத்திரை ஒருங்கிணைப்புக்குழுவில் சென்னையை சேர்ந்த கதிரவன், மதுரையை சேர்ந்த பரத்நாச்சியப்பன், கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் உட்பட 5 பேர் நியமிக்கப்ட்டுள்ளனர். தங்கும் இடம், உணவு சப்ளை, குடிநீர் வசதி, வாகன ஏற்பாடு உள்ளிட்ட முக்கிய பணிகளை ஒருங்கிணைப்புக் குழுவினர் கவனித்து வருகின்றனர்.

விருந்து உபசரிப்பில் நெல்லை மாவட்டம் பிரதானமாக திகழ்ந்துள்ளது. நெல்லை தொகுதி எம்.பி., ராமசுப்பு ஏற்பாட்டில் சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதேபோல் வசந்தகுமார் ஏற்பாட்டில் வாட்ச், சூட்கேஸ், தொப்பி, மழை கோர்ட்டுகளுடன்  அசைவ விருந்தும் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் ஏற்பாட்டில் நடந்து வந்தவர்களுக்கு தீபாவளி பரிசாக சிவகாசி பட்டாசு பெட்டிகளும் வழங்கியுள்ளார்.

நடைபயணம் குறித்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி வருகிறோம். பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.  கோஷ்டி பூசல் எங்களிடம் ஏற்படவில்லை. ராகுலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நடைபயணத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். நவம்பர் 19ம் தேதி பாதயாத்திரை நிறைவு பெறுகிறது. சென்னை தீவுத்திடலில் நடக்கும் இறுதி நாள் பொதுக்கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார்.  கூட்டணி குறித்து நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை. மத்திய அரசின் சாதனைகளை சொல்லும் போது ஆளுங்கட்சியின் குறைகளையும் சொல்கிறோம். ஆளுங்கட்சியின் குறைகளை சொல்லும் போது மக்கள் வரவேற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
2010-10-24 07:25:32 IST
"மாறியது நெஞ்சம்; மாற்றியவர் யாரோ" என்பது பழைய சினிமா பாடல். கூட்டணி என்ற போர்வையில் நோகாமல் நொங்கு எடுத்து பல ஆயிரம் கோடிகளை கொள்ளை அடித்து, அடித்த பணத்தை காப்பாற்ற மத்திய அரசின் கூட்டணியை நாடும் திமுகவின் நாற்றம் ஆல் இந்தியா வரை பரவி உள்ளது. அமைதியாக, எதிர்த்து பேசாமல் சென்ட் பூசி கொண்டு இவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலை எல்லாம் ராகுலிடம் எடுபடவில்லை. இவரே இந்த மாற்றத்துக்கு காரணம். மேலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் திமுகவுக்கும் ஏழரை நாட்டு சனி பொருத்தம். வாசன், பசி, தங்கபாலு, பீட்டர் போன்றோர்களுக்கு சரியாக தீனி போடுவதால் அவர்களும் பூம் பூம் மாடு போல தலையை ஆட்டுகிறார்கள். திமுக செய்யும் எல்லா மக்கள் விரோத போக்கிற்கு காங்கிரஸ் மேலிடம் எதிர் மறை நடவடிக்கை எடுத்தால் திமுக தூள் தூள் ஆகும்....
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-24 04:05:41 IST
விட்டால குத்து,போட்டான பத்து,கச்சேரி ஆரம்பம்,பாவம் ஒனேந்தேரியா பசங்க,எங்கே போகப்போவுதோ....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-24 03:46:36 IST
அடடா போதாத காலம் என்பார்களே அது இதுதானோ? கடைசி காலத்தில் நிம்மதியாய் இருக்க விடுகின்றார்களா? இந்த முறையோடு ஒழிந்தது திமுக என்று தமிழகமே கொண்டாடலாம் போல..அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய கட்சிதான் திமுக என்பதை இப்போதாவது "இளைஞர்கள்" உள்ள காங்கிரஸ் "சிந்திக்க" ஆரம்பித்ததே அதுவரையில் சந்தோசமே..ராகுல் மீதான "கோபம்" மஞ்ச துண்டாரின் வாயிலிருந்து எப்போது "வசவாய்" வெளிப்படுமோ தெரியவில்லை..காங்கிரஸ் தனது திமுக எதிர்ப்பை "பிள்ளையார்" சுழிபோட்டு துவக்கிவிட்டது.."மானம்" ரோஷம்"வெட்கம்" ஹ்ம்ம் "சுயமரியாதை" தன்மானம்" இதுவெல்லாம் உள்ளதாக கூறிவரும் மஞ்ச துண்டாரே அழையுங்கள் சோனியா அம்மையாரை "இந்திரா அம்மையாருக்கு" அளித்த வசவாம்..இலவச திருமணமோ எதுவோ சொல்வீர்களே..எடுங்கள் உங்கள் பேனாவை..கொட்டுங்கள் உங்கள் "இரட்டை" அர்த்தம் தரும் வசுவுகளை..யாரென்று காட்டுங்கள்..!! ஆனாலும் உங்களால் இனி எப்போதுமே முடியாது..ஏனென்றால் நீங்கள் அடித்த பல்லாயிரம் கோடிகளுக்கு புழலில் நிரந்தர வாசம் செய்ய நேரிடும்..இருக்கவே இருக்கு டெல்லி பயணம்..சென்று கெஞ்சி காலில் விழுந்தேனும் கூட்டணியை தக்க வைப்பீர்கள் என்றே உங்கள் தொண்டர்களை போன்றே நானும் நம்புகின்றேன்.!! கிடக்குது இளைஞர் காங்கிரஸ்..உங்களுக்காகவே குரல் கொடுக்க பீட்டர் அல்போன்ஸ் போன்றோரிடம் முறையிடுங்கள்..அவர்கள் நிச்சயம் ஆறுதலாய் ஏதாச்சும் சொல்வார்கள்.....
sssaa - dubai,இந்தியா
2010-10-24 01:52:34 IST
indira rajiv -------now raghul and sonia they try to captuer the tamilnadu it is imposible...
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-24 01:23:15 IST
பாதை மாறும் இளைஞர் காங்., நடைபயணம் காங்கிரசின் கொடி எப்பொழுது "சிகப்பாக"மாறியது,மாற்றியது யார்?-----...
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-24 00:35:58 IST
காங்கிரஸூக்கு தேவை மத்தியஅரசு. மாநிலத்தில் தி மு க வெற்றி பெற்றாலும் ஆட்சியில் பங்கு கிடைக்காது. ஆகவே தி மு க தோற்றாலும் காங்கிரசுக்கு வருத்தம் கிடையாது. கடந்த நாலரை வருடங்களாக காங்கிரசை மதிக்காத தி மு க வை விமர்சிப்பது நியாயம் தான்....

கருத்துகள் இல்லை: