ஞாயிறு, 24 அக்டோபர், 2010

தீபாவளிக்கு "சரக்கு' விற்பனைக்கு அரசு இலக்கு: அதிக ஸ்டாக் வைக்க டாஸ்மாக் கடைகளில் ஏ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக "டாஸ்மாக்' கடைகளில் தட்டுப்பாடு இன்றி சரக்கு விற்பனை செய்யும் வகையில், 10 நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சரக்கு சப்ளை பணி, அக்டோபர் 29ம் தேதி முதல் துவங்குகிறது. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் நிர்ணயம் செய்த இலக்கை விட, 50 கோடி ரூபாய் கூடுதல் விற்பனை நடந்ததால், நடப்பாண்டுக்கான, "டாஸ்மாக்' சரக்கு விற்பனை இலக்கு 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2003 நவம்பர் மாதத்தில் இருந்து தமிழகத்தில், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனையை அரசு துவக்கியது. மது விற்பனை துவக்கப்பட்ட ஓர் ஆண்டில் 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. அதுவும் நடப்பாண்டு சாரசரி மது விற்பனை, 18 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 25 சதவீதம் உயர்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 7,434 கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள, "டாஸ்மாக்' கடைகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இரு மண்டலங்கள் என செயல்பட்டு வருகிறது.ஒரு மண்டலத்திற்கு விற்பனை அடிப்படையில், சராசரியாக ஐந்து முதல் ஆறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து, "டாஸ்மாக்' கடைகளிலும் அக்டோபர் 29 முதல் மூன்று நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 1 முதல் 10 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக, "டாஸ்மாக்' கடைகளுக்கு வழக்கமாக தினந்தோறும் சப்ளை செய்யப்படும் 50 லட்சம் பாட்டில் சரக்குகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, ஒரு கோடியே 50 லட்சம் பாட்டில் சரக்குகளை அக்டோபர் 28 முதல் கடைகளின் விற்பனைக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தீபாவளி பண்டிகைக்கு தேவையான சரக்குகள் குறித்து நேற்று முதல் (இன்டன்) வாங்கப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்ட, "டாஸ்மாக்' கடைகளுக்கு பிராந்தி, விஸ்கி, பீர், ஒயின் என தேவைக்கு தக்கபடி சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது.கடைகளில் தட்டுப்பாடின்றி மதுபானங்கள் கிடைக்கும் வகையில், விற்பனையை பொருத்து, கடைகளுக்கு சரக்கு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நாளில் சரக்கு தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாவட்டத்துக்கு, 10 லாரிகளில் சரக்குளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கு எல்லாம் மேலாக நவம்பர் 1 முதல் நவம்பர் 7ம் தேதி வரை, அனைத்து பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சரக்கு விலை ஏற்றம் செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்காணிக்க, பறக்கும் படை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 "டாஸ்மாக்' அதிகாரி கூறியதாவது:கடந்த ஆண்டு தீபாவளி நாளில் 200 கோடிக்கு சரக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருந்தோம். ஆனால், 250 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனை ஆனது. இலக்கை விட அதிகளவில் சரக்கு விற்பனை செய்யப்பட்டதால், நடப்பாண்டு சரக்கு விற்பனையின் இலக்கு 300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இலக்கு உயர்வுக்கு ஏற்றபடி சரக்குகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு தேவையான சரக்குகளில் வேகமாக விற்பனையாகும் சரக்கு, முடங்கி கிடக்கும் சரக்கு, விலை உயர்ந்த சரக்கு, புதிய அறிமுக சரக்கு என, பிரித்து சப்ளை செய்யப்படுகிறது. இதில் வேகமாக விற்பனையாகும் சரக்குகளின் சப்ளை 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளி நாளில் பல கடைகளில் சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் சரக்குகள் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக, தமிழகம் முழுவதும் உள்ள "டாஸ்மாக்' கடைகளுக்கு சப்ளை செய்யவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் அந்தந்த மாவட்ட குடோனுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சரக்குகளை கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.இந்த ஆண்டு தீபாவளி தினத்தில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு "டாஸ்மாக்' அதிகாரி கூறினார்.
Shakeel - Seoul,தென் கொரியா
2010-10-24 17:05:28 IST
இலக்கு வைத்து இயங்கும் ஒரே அரசாங்க துறை டாஸ்மாக். இதில் முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையுடன் இரவும் பகலும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து ஒரு சிறந்த திட்டம் வைத்திருக்கிறார். அதாவது தீபாவளி அன்று விற்கும் சரக்கில் குடும்ப கட்டுப்பாடு மருந்து கலந்து விற்றால் பெருகி வரும் ஜனத்தொகையை கட்டுபடுத்துவதன் மூலம் தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் இந்தியாவின் முதன்மாநிலமாக மாற்ற முடியும் என்பது தான். இது புரியாமல் என்ன மக்களோ. இலவசங்கள் தர தேவையில்லை இது தான் திட்டம்....
விஜய் - சென்னை,இந்தியா
2010-10-24 16:48:36 IST
இது ஒரு பொழப்பு....இப்படி ஒரு வருமானம் அரசுக்கு தேவையா??...
komarasamy - chennai,இந்தியா
2010-10-24 16:23:10 IST
எங்கள் தலைவர் கருணாநிதி வாழ்க. ஸ்டாலின் வாழ்க....
பாவப்பட்ட தமிழன் - Therukkodi,இந்தியா
2010-10-24 15:48:29 IST
என்ன கொடுமை இது சிந்தியுங்கள் thamilarkale...
akb - Chennai,இந்தியா
2010-10-24 15:17:30 IST
ரொம்ப சந்தோசம்! ஐயோ ஐயோ....,...
விடாது கருப்பு - ABUDhabi,இந்தியா
2010-10-24 15:15:20 IST
நம்ம மக்கள் தீவாளி அன்றைக்கு பட்டாசு வெடித்தால் காச கரி ஆக்குறான் பாரு என்பார்கள்.. ஆனா இப்போ நம்ம அரசே மக்களை சாராயம் குடிக்கவச்சி கரி கட்டயாக்குது. நம் மக்கள் குடிப்பதால் அவர்களின் ஞாபாக சக்தி குறைந்து எதிர்காலமே பாதிக்கப்படுகிறது.சிந்திப்போம், செய்வதை அறிவோம், செயல்படுவோம்...
ஜான் பிரபாகரன் - tirunelveli,இந்தியா
2010-10-24 15:08:55 IST
தண்ணி அடிங்க ஆனால் பொது மக்களுக்கு பிரச்சனை தர வேண்டாம்.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் ....
குண்டலகேசி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-24 14:31:41 IST
ஒவ்வொருத்தன் எதெதிலோ சாதனை பண்ணீட்டு இருக்கான் . ஆனா 5 அறிவு தமிழன் கழகங்களுக்கு ஓட்ட போட்டுட்டு சீம சாராயம் குடிக்கறதுல சாதன பண்ணீட்டு இருக்கான். மானக்கேடு .இந்த லட்சணத்தில இந்தியா வல்லரசு ஆக போகுதாம் .மொதல்ல இந்தியா அரசு ஆனாலே போதும். இந்த குடியினால் இந்த தலை முறையை அழித்த பெருமை ,கழகங்களுக்கு தான் சேரும் .5 அறிவு தமிழா இந்த தேர்தலிலாவது கழகங்களுக்கு வாக்களிக்காமல் ,எவனுக்கும்(எந்த திருடனுக்கும் ) மெஜாரிட்டி கிடைக்காமல் செய்து ,கவர்னர் ஆட்சி வர முயற்சி செய் . தயவு செய்து படித்த கூமட்டைகள் தேர்தலன்று வீட்டில் சோம்பேறித்தனமாக இருக்காமல்,தனது ஜனநாயக கடமையை உணர்ந்து ,கழகங்களை தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து கவர்னர் ஆட்சி மலர உதவுங்கள் .வருங்காலம் வாழ்த்தும் உங்களை ....
ஷம்கீன் துபாய் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-24 14:14:57 IST
CM சார், தமிழனுக்கு தண்ணி பிரச்சனை வந்துரக்கூடாதுன்னு வரிஞ்சு கட்டிட்டு நிக்கற வுங்க டீல் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இலவசம், டாஸ்மாக், சினிமா குத்தாட்டம் - இந்த மூணு அம்ச திட்டத்தோட பட்டய கெளப்புறீங்க. கீப் இட் அப். அப்பப்ப நம்மளை தோற்கடிச்சு வீட்ல உட்கார்ந்து கதை எழுத வுட்டானுகள்லே. அவனுகள இப்படித்தான் எப்பவுமே மப்புலேயே வச்சிருக்கணும். தெளிய தெளிய வூத்தி வுடனும். ஆனா வெளிநாடுகள்ள எஸ்கேப் ஆகி ஒரு குரூப் தப்பிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்களையும் ஒரு வழி பண்ணனுமே. என்ன செய்யலாம்? நீங்கதான் பயங்கர ஐடியாகாரராச்சே. சீக்கிரமா யோசிச்சு பட்டுன்னு கவுத்துருங்க. இல்லேன்னா மக்கள உசிப்பேத்தி உசிப்பேத்தி உங்க ஆட்சிய புன்னாக்கிடுவாங்க. அம்புட்டுதேன் சொல்வேன்....
raj - karur,இந்தியா
2010-10-24 14:08:31 IST
முன்பெல்லாம் கல்வி நிறுவனங்களை அரசும் மதுகடைகளை தனியாரும் நடத்தினர். ஆனால் இன்றைய கலியுகத்தில் கல்வி நிறுவனங்கள் தனியார் வசமும் மதுக்கடைகள் அரசிடமும் இருக்கிறது. வாழ்க தமிழ்நாடு வளார்க தமிழரது புகழ்... இதுல வர வருமானத்தை எடுத்து தான், இவன் இலவசமே கொடுக்கிறான்....
எஸ் குப்புசாமி - சென்னை,இந்தியா
2010-10-24 14:00:14 IST
யப்பா, நல்ல திருடர்களே. நீங்கள் இந்த மாதிரி இடங்களில் திருட மாட்டீர்களா? நிறைய கிடைக்கும். போங்கள், தீபாவளி இனாம் கிடைக்கும். நல்ல வாய்ப்பு நழுவ விடாதீர்கள்...
கே.சுகவனம் - சேலம்,இந்தியா
2010-10-24 13:55:09 IST
வ!!!!குவாட்டர் கட்டிங்!!!!!இது போன்ற பல "குடும்ப" படங்கள் ரிலீஸ் ஆக நல்ல கட்டிங் கிடைக்கும்.பலே!!பலே!!!!...
murthi - dubai,இந்தியா
2010-10-24 13:36:22 IST
வாழ்க தமிழ்நாடு தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா...
Arumugam - muscat,ஓமன்
2010-10-24 13:32:47 IST
வெரி குட்...
krish - uk,இந்தியா
2010-10-24 13:20:33 IST
ஸ்கூல் எக்ஸாம் ல பறக்கும் படை பார்துருக்கன் ... இப்பாத்தான்...டாஸ்மாக் பறக்கும் படைய பார்க்க போறேன் ....ரூம் போட்டு யோசிப்பாரோ !! !!!!!!!!!!!!!!! நம்ம தலைவர் .......
நல்லவன் - chennai,இந்தியா
2010-10-24 13:16:50 IST
வாழ்க தமிழ்நாடு ! வாழ்க தமிழ்நாட்டுமக்கள் ! 2011 தேர்தல்ல வெற்றி பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்ட்ல இதையும் செர்த்துவீடு....
குடிகாரன் - மப்புனயகன்பாளையம்,இந்தியா
2010-10-24 13:09:40 IST
சந்தோசமா இருங்க மக்களே! மப்பு போட்டுட்டு ராசே பண்ண கூடாது. குடிகாரன் பேச்சு விடிஞ்ச போச்சு. மப்பு போட்டுட்டு பட்டாசு வேடிக கூடாது. பப்ளிக் problem பண்ண கூடாது. தீபாவளி அன்னைக்கு மப்பு போடாம என்னைக்கு போடா முடியும்.. வாழ்க மப்பு! வளர்க மப்பு கடைகள்!...
மொக்கை - மதுரை,இந்தியா
2010-10-24 13:02:21 IST
காவிரி, முல்லை பெரியாறு,பாலாறுன்னு எங்க பார்த்தாலும் தண்ணிக்கு சண்டை நடக்குது..இந்த தண்ணியெல்லாம் நமக்கு கிடைக்காததுக்கு கருணாநிதிதான் காரணம்னு எதிர்கட்சிகலேல்லாம் கூடி கும்மியடிக்கிராய்ங்க..ஆனா டாஸ்மாக்கு தண்ணியில நமக்கு எந்த குறையுமில்லாம கருணாநிதி பார்த்துக்கிறாரு..இவரோட பேரன் குவாட்டர் கட்டிங் னு படம் வேற எடுக்குராப்ல...ஒரு தண்ணியில கோட்ட விட்டாலும் இன்னொரு தண்ணியில உங்க பேரை காப்பாத்திட்டீங்க...இதுக்கு பேருதான் ராஜதந்திரமோ...கருணாநிதி ஆட்சியில தண்ணி பஞ்சம் இருந்துச்சுன்னு ஒரு பய கருத்து சொல்ல முடியாது......
KARNAN - pattukkottai,இந்தியா
2010-10-24 12:45:59 IST
தமிழ்நாடு உருப்படாது,குடிகாரர்கள் அதிகரிக்கும் மாநிலம் என்ற பெயரை பெறும் முதல் மாநிலம் நம் தமிழ்நாடு.'இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்' என்ற குறள் நம் முதல்வருக்கு தெரியாதோ!...
SATHYA - chennai,இந்தியா
2010-10-24 12:45:11 IST
அது சரி முன்னெல்லாம் தீபாவளி வந்தா ரேசன் கடைகள்ல எக்ஸ்ட்ரா சர்க்கரை போடுவாங்களே இப்ப கேட்டா இருப்பு இல்லன்னு சொல்றாங்களே??? சரி அத விடுங்க டாஸ்மாக் கடைல இருப்பு (சரக்கு) இருக்குல்ல அது போதும்.நமக்கு இலவசம் வந்தா போதும். (தீபாவளி அன்னைக்கு எத்தனை வீட்டுல சண்டை நடக்க போகுதோ? எத்தனை பேர் மதப்புல பட்டாச தூக்கி வண்டில போறவங்க மேல போட்டு சண்டைக்கு நிக்க போராங்களோ?)...
கமல் - சேலம்,இந்தியா
2010-10-24 12:44:14 IST
அய்யா தமிழ் நாட்டை பத்தி கவலைபடுவோரே உண்மையா நாட்ட பத்தி கவலைபடுபவராக இருந்தால் இப்படி இண்டர்நெட்டுல கமன்ட் கொடுக்கறதா விட்டுட்டு வேற எதாவது உருப்படியா செய்வான். இத தவிர நீங்க எல்லாம் வேற எதாவது செய்து இருக்கறீங்களா?...
SULAIMAN - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-24 11:57:50 IST
விலைவாசி ஏற்றம்,மின் தட்டுபாடு, இலவசங்களால் சோம்பேரிகளான மக்கள், வறுமை கோட்டுக்குகீழ் இன்னும் மக்கள், கல்விக்கட்டன உயர்வு, பள்ளி செல்லும் மாணவர்களையும் குடிக்க வைத்த பெருமை,இது போதாதென்று சிறப்பு வருமானம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளகிறேன் ....................என்ன கொடும சார் இது....
tamilan - துபாய்,இந்தியா
2010-10-24 11:47:24 IST
வெட்கம் மானம் சூடு சுரணை we do not have any thing.we lost before 40 years. we really deserve for this kind of rule....
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-24 11:27:22 IST
ஹெலோ இப்ப எங்க போய்ட்டான் அந்த ராமதாஸ்.................................
கார்த்தி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-24 11:22:46 IST
போர்க்கால அடிப்படையில்னு சொல்லுங்க...
Raman - Chennai,இந்தியா
2010-10-24 11:16:17 IST
I really shame about this kind of activities. Why Selvi JJ is keeping quiet. Government is only focusing on the revenue and no developments at all. Whatever the people earning, 75 % they are spending only on drinks. Atleast people should think and stop drinking. Anyway whoever is coming next in Rule, please stop this and free issues. This is my request....
bala - Palayamkottai,இந்தியா
2010-10-24 10:53:16 IST
தமிழ்நாட்டு மக்களை போதையில் தள்ளாட வைக்க கருணாநிதி போடும் அனைத்து திட்டங்களுக்கும் ஆப்பு தயார். நீயும் உன்குடும்பமும் சேர்ந்து போடும் ஆட்டங்களுக்கு இறைவன் ஒருபோதும் மன்னிக்கமாட்டான். இது குடியினால் குடும்ப வாழ்கையை தொலைத்து நிம்மதியின்றி தவிக்கும் தமிழர்களின் சாபம்....
shaikfareeth - tirpur,இந்தியா
2010-10-24 10:46:18 IST
நாட்டுக்கே மது வழங்கும் நமது முதல்வர் மிகவும் போற்றத்தக்கவர். இந்த போர்க்கால நடவடிக்கைகள் மேலும் தொடர்ந்தால் குடிமகன்களின் மனது மிகவும் மகிழ்ச்சியடையும். தமிழ்நாடும் செழிப்படையும்,. இந்த மாதிரி நடவடிக்கைகளினால் உலகளவில் நமது புகழ் வாழ்வாங்கு நிலைத்து நிற்கும்....
சா. பெரியசாமி - திருப்பூர்,இந்தியா
2010-10-24 10:41:45 IST
இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாளி சொம்பெரியகிய தமிழக அரசுக்கு இது ஒரு கேடுகெட்ட " இலக்கு "...
Muthukumar Elangovan - PudukottaiPanduvakkottai.,இந்தியா
2010-10-24 10:37:49 IST
அரசங்கத்தின் நோக்கம் மக்களிடம் உள்ள பணத்தை வசூல் செய்வது என்றால் ................... தீபாவளி பண்டிகைக்கு நீங்கள் தவணை முறையில் விற்பனை செய்து பணம் வசூல் செய்து கொள்ளுங்கள் ........... இது நாட்டுக்கு ரொம்ப அவசியமா?............
அருள் செல்வம் - அபுதாபி,இந்தியா
2010-10-24 10:31:20 IST
"டாஸ்மாக்' கடைகளில் தட்டுப்பாடு இன்றி சரக்கு விற்பனை செய்யும் வகையில், 10 நாள் சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்ன ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!!!!!!!!!???? அரசு நிர்வாகம் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேறு வேண்டுமா உடன்பிறப்பே!!! மின் உற்பத்தியில், நாட்டு வளர்ச்சியில், சட்டம் & ஒழுங்கு பிரச்சனையில், முல்லை பெரியார் பிரச்சனையில், ஒக்கேனக்கல் பிரச்சனையில், இலங்கை பிரச்சனையில், மக்களின் வருமானத்தை உயர்த்தும் பிரச்சனையில், உணவு உற்பத்தி தன்னிறைவு பிரச்சனையில், நெசவு தொழில் நசுங்கும் பிரச்சனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்காத பிரச்சனையில், இன்னும் எத்தனயோ பிரச்சனைகளில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தோமா உடன்ப்பிறப்பே?!!!!!!!! என் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று எத்துனை எத்துனை விழாக்கள், பாராட்டு கூட்டங்கள், எத்தனை விருதுகள் (எனக்கு நானே வழங்கியது (அ) வழங்கசொன்னது), காலை 5 மணிக்கே சினிமா காண சென்றது என இத்தனை செய்தும் எனது ஆட்சியை பொற்கால ஆட்சி என ஒத்துக்கொள்ளாத எதிர் கட்ட்சிகள் ஏளனம் செய்கின்றன. எத்தனை இலவசங்கள் வழங்கி மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறேன்? டாஸ்மாக்கை திறந்து வைத்து குடிகாரர்களாக மாற்றி இருக்கிறேன்? இன்னும் என்ன செய்து நாட்டை குட்டிசுவர் ஆக்கவேண்டும் உடன்பிறப்பே?!!!!!!!...
பழனிமுருகன் - திருப்பூர்,இந்தியா
2010-10-24 10:23:44 IST
கருணாநிதி அய்யா செய்ரருள அதை பாருங்க சார்...
arivu - dubai,இந்தியா
2010-10-24 10:18:18 IST
நாம் உண்ணும் பொருட்களின் விலைவாசி ஏறிவிட்டது ஆனால் மதுபாட்டில்களின் விலை மட்டும் அளவாகவே உள்ளது இதுதான் தமிழர்களை குடிகாரர்களாக வளர்க்கும் திட்டமா?முதல்வர் அவர்களே?...
சதீஷ் கே - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-24 10:15:57 IST
இப்பவே கண்ண கட்டுதே....
நண்டு முருகன் - திருச்சி,இந்தியா
2010-10-24 10:05:50 IST
சரி எதாவுது தள்ளுபடி கொடுங்க .ஒன்னு வாங்கினால் ஒன்னு ப்ரீ அப்படி எப்படி என்று கொடுத்தல் 300 உடனே 600 ஆகிவிடும் .எவளவு வருமானம் வருது கொடுத்த கொறஞ்ச போய்விடும் .வேலை செய்யாத அரசு உழியர் எல்லாம் அள்ளி தரிங்க எங்களுக்கும் கொஞ்சம் தாங்க....
சரக்கு மாஸ்டர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-24 09:59:54 IST
தீபாவளிக்கு குவார்ட்டர் அடிக்காம வேற என்ன காந்தி ஜெயந்திகா அடிக்க முடியும். இந்த அரசாங்கம் எது செஞ்சாலும் கரெக்டாவே செய்யும்....
Ashok - மலேசியா,இந்தியா
2010-10-24 09:56:53 IST
what a fantastic future plan for our Tamil nadu people , Why Our C.M can't thing the same plan for other developement activity like electricty and water and infracture,...
abdullah - sharjah,இந்தியா
2010-10-24 09:54:28 IST
சத்தியமா தமிழ் நாடு உரிப்புடாது...
வெங்கி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-24 09:54:01 IST
அடுத்த தேர்தல் அறிக்கையில் ரேசன் கார்டில் விஸ்கி ப்ரண்ட்யும் சேர்த்து இலவசமாக வழங்கப்படும் என்று அர்விவிப்பீர்கள் என்று நம் குடிமக்கள் ஆவலுடன் உள்ளனர் எமாற்றிவிடாதீரிகள்...
கோபால் - Chennai,இந்தியா
2010-10-24 09:47:13 IST
மது விர்பனையை அரசு எற்றபின் தமிழ்நாடு சாலைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் அருவருக்கதக்கதாக மாறி விட்டன. சாலைகளில் சிறுநீர், பேருந்து நிறுத்தங்களில் குடி, பொதுமக்களுக்கு இடையுறு என மாநிலத்தின் அழகு சிதைந்து விட்டது. மாரட்டும் நம் தமிழ்நாடு...
கருத்து கே..பு.. - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-10-24 09:46:46 IST
இந்த நல்ல முன் ஏற்பாடு திட்டத்திற்காக, மதுபானம் விற்பனை டிபார்ட்மெண்டுக்கு இந்த குடிகார கோவிந்தனின் முதல் வணக்கம்.நம்ம தமிழ் நாட்டில் இந்த டிபார்ட்மென்ட்டை பாருங்க ரொம்ப உசாராகா இருக்கிறது. இந்த மானம் கெட்ட டிபார்ட்மெண்டு,வெட்கம் இல்லாமல் சொல்லுறானுக பாருங்கோ, என்னாமோ தீபாவளி அன்றைக்கு தமிழ் நாட்டில் குடிபோதை போர் நடக்க போவதுபோல் போர் வண்டியில் துப்பாக்கி தயாராகா இருப்பதுபோல் விஸ்க்கி பாட்டில்கள் வண்டி நிறையா நிறுத்தி தயராகா வைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது இந்த மதுபான டிபார்ட்மெண்டு. நீங்க இப்படி முன் ஏற்பாடு செய்வதற்கு பதில் நம்ம தலைவி மற்றும் தலைவன்கிட்டை சொல்லி ஒவ்வெரு வீடாக சென்று ஒரு டசன் பீரும்,இரண்டு புல் பாட்டிலும் கொடுத்து விட்டால் குடிக்கிற சில குடிகார குடும்பங்கள் நன்றாக் குடித்து விட்டு, அவர்கள் ஓட்டு எல்லாத்தையும் உங்களுக்கே குத்து குத்துன்னு குத்திவிடுவார்கள்.இது ஆட்சி பிடிப்பதற்கு நல்ல ஒரு மறு மலர்ச்சி திட்டமாகும்.இன்றே செயல் படுவீர் அடுத்த ஆச்சியை அமைப்பீர்.நம்ம அரசாங்கம் நம்ம குடிகார மக்களை நாற்றாக புரிந்து கொண்டு பணம் சம்பாரிக்கும் வழியை கண்டு பிடித்து வைத்து உள்ளது.இந்த ஐந்து சரக்கு வண்டி கூட ஒரு இருபது 108 நிறுத்திவைத்தால் இந்த குடிகார மகன்கள் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறி தரையில் தலை சுற்றி விழும் நபர்களை,அவர்களின் வீட்டில் விடுவதற்கு சவுரியமாக இருக்கும்..கி..கி..கி..கி..கி.கி..கி..கி..கி.....
vit - chennai,இந்தியா
2010-10-24 09:43:43 IST
god! save people! see the state of our state? the rulers are making the people drink and die.........
பஷீர் அஹம்மத் - DINDIGUL,இந்தியா
2010-10-24 09:41:12 IST
ரேசன் கடைகளில் ஸ்டாக் வைத்தால் நட்டம். டாஸ்மாக்கில் வைத்தால் லாபம்ல.... அதான் மக்களே.. இதெல்லாம் யாருக்கு? உங்களுக்கு தான் இலவசமா தரப்போறோம்.. என்ஜாய் பண்ணுங்க.. அரசுக்கு வருமானத்த ஏற்படுத்துங்க... வாழ்க தமிழ்....
chandra - singapore,இந்தியா
2010-10-24 09:33:17 IST
எலேய் லொடுக்கு தாஸு எங்கடா போனே இப்ப மட்டும்.... அப்புறம் ஏலே சுப்பா... குப்பா... கதிர்வேலு.... அய்யனாரே.... அம்சவல்லி.... மற்றும் அனைத்து குடிமகன்களுக்கும்.... இப்போ தெரியுதா உன்னோட இலவசமெல்லாம் எங்கேயிருந்து வருது என்று.... அண்ணாவின்... பெரியாரின் ஆட்சிதேன் தமிழ்நாட்டுலே நடக்குது......
dharmaraj - singapore,இந்தியா
2010-10-24 09:29:46 IST
namma naattukku romba avasiama...?...
கருத்துகன்சாமி - திண்டுக்கல்,இந்தியா
2010-10-24 09:24:58 IST
காற்றுள்ள போதே தூற்றி கொள்.இந்த தீபாவளிக்கு செமே கலசன் தாமோ ....இது அரசுக்கு...ஜனங்களே தீபாவளிக்கு பட்டய கிளப்புங்க...குடிச்சி எக்கேடோ கெட்டு நாசமா போங்க...இது காசையும் குடுத்து உடம்பையும் கெடுத்துகொள்ளும் குடிகார பெருமக்களுக்கு.......
venkat - singapore,இந்தியா
2010-10-24 09:24:18 IST
இதை எண்ணி எல்லா தமிழர்களும் தலை குனியவேண்டும் .நாம் எங்கே சென்று கொண்டுஇருக்கிறோம் .நம்மை ஆட்சி செய்பவர்கள் நம்மை எங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள் என புரிந்து இனியாவது அனைவரும் திருந்த ஆண்டவனை வேண்டுகிறேன் ....
தமிழன் - மறைமலைநகர்,இந்தியா
2010-10-24 09:23:08 IST
மக்கள் வயித்திலே அடிச்சி வந்த இந்த காசுல தானே பாலம் கட்டி பணத்த மஞ்ச துண்டு குடும்பமும் ரத்தத்தின் ரத்தங்களும் கொள்ளை அடிக்குது .இவங்களுக்கு எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன .தன் பரம்பரை நல்லா இருந்தா போதும்...
இசாக் Benjamin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-24 09:16:27 IST
Tamilnadu public are happy about free issues from Goverment,but they should also think the DMK goverment has made TN as a Alcholic state to get the Revenue for free issues. Jaihind...
nandhakumar - Vellore,இந்தியா
2010-10-24 09:00:45 IST
அரசு உழியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள். தீபாவளி இனாம் ஆக ஒரு குடும்பத்திற்கு 3 புல் ப்ரண்ட்யும் 3 பீர் பாட்டில் வழங்கலாம்....
geemuu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-24 08:37:09 IST
இதை எல்லா ரேஷன் கடைகளிலும் இருப்பு வைத்துகொண்டு விநியோகித்தால் இலக்கை 10 மடங்கு அதிகபடுத்தலாம். மேலும் கட்சி தொண்டர்களை வைத்து வீடு வீடாக சென்று கட்டாயபடுத்தி விற்கலாம். ஒரு குடும்பதிக்கு இவ்வளவு என்று இலக்கு வைத்து விற்கலாம். அதிகமாக குடிக்க குடிக்க அதிகமாக அதிகமாக இலவசங்களை பெறலாம் இலவசமாக கருமாதி செலவுகளையும் பெறலாம் மேலும் குடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ஓய்வுதியம் வழங்கப்படும்....
sam - Adelaide,ஆஸ்திரேலியா
2010-10-24 08:15:52 IST
தமிழ்நாட்டு அரசு மக்களின் புத்தியை மழுங்க வைத்து ஆட்சி நடத்திக்கொண்டு உள்ளது.இது போன்ற அரசியல் கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாட்டு மக்கள் உருப்படவே முடியாது....

கருத்துகள் இல்லை: