ஞாயிறு, 24 அக்டோபர், 2010

பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்:



 

திருச்சி இந்தியன் பாங்க் காலனியில் உள்ள புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பிளாரன்ஸ்மேரி(31). இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சவூரான்சாவடி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

2005-ம் ஆண்டு பிளாரன்ஸ்மேரி கன்னியாஸ்திரி ஆனார்.  அவர், மியூசிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். இதற்காக தினமும் கான்வென்டில் இருந்து செல்வது வழக்கம்.
 
பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.
இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.
 
இதற்கிடையே 4 ஆண்டுகளாக மூடிமறைத்து வந்த கருக்கலைப்பு விவகாரம் கசிய தொடங்கியது. புனித அன்னாள் சபை நிர்வாகிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.

பிளாரன்சுமேரியிடம் விளக்க கடிதம் கேட்டனர். கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி கடிதம் கொடுத்தார். அன்றே சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

பாதிரியார் ராஜரத்தினம் ஏசு சபையை சேர்ந்தவர். இதன் தலைமையிடம் திண்டுக்கல்லில் உள்ளது. அங்குள்ள சபை நிர்வாகிகளுக்கு கல்லூரி அதிபர் சூசை தகவல் தெரிவித்தார். பிளாரன்சுமேரி உடனே புறப்பட்டு வரும்படி அழைப்பு விடப்பட்டது.

உறவினர்கள் 2 பேருடன் அவர் சென்றார். அங்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் பாதிரியார்கள் அனைவரும் சேர்ந்த மிரட்டியதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.

அதன்பிறகு தான் அவர் போலீஸ் உதவியை நாடினார். இதனால் பாதிரியார் ராஜரத்தினம் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன்மீது விசாரணை நடந்து வருகிறது. பிளாரன்சுமேரிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

தற்போது அவர் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர்,

’’துறவறம் என்பது புனிதமான ஒன்று. சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் என்னைப்போல் வரும் பெண்கள் ராஜரத்தினம் போன்ற சில பாதிரியார்கள் வலையில் எங்களை அறியாமலேயே சிக்கி விடுகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சத்தம் இல்லாமல் சபையை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

நான் அப்படிபட்டவர் அல்ல. சட்டத்தின் மூலம் பாதிரியாருக்கு சரியான தண்டனை வாங்கித்தரும் வரை எனக்கு தூக்கம் கிடையாது. அவர் முகமூடியை கிழிக்காமல் விடமாட்டேன்.

என்னை நீக்கியது போல் அவரையும் சபையில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை எதிர்கால சிந்தனை பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்’’என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: