திங்கள், 11 அக்டோபர், 2010

யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்கள் தாம் இப்பிரதேசத்தில் வாழ்ந்ததை ஆதாரப்படுத்தும்

யாழ். சிங்கள மக்கள் விவகாரம் தீர்வுக்கு 3 மாத கால அவகாசம் தேவை; அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்துக்கு மீளகுடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வ தற்கு மூன்று மாத கால அவகாசம் தேவையென அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தா தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் நிலவி வரும் காணிப்பிரச்சினைகள் மற்றும் காணிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு காணிக் கச்சேரியொன்றை விரைவில் நடத்துவது அவசியமாகவுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுக் காலை நேரில் சென்று சந்தித்தார்.
அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித் துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர், மீள குடியேறும் நோக்கில் யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்கள் தாம் இப்பிரதேசத்தில் வாழ்ந்ததை ஆதாரப்படுத்தும் வகையிலான ஆவணங்களை யாழ். அரச அதிபரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அது தொடர்பிலான நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் இது தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு குறைந்தது மூன்று மாதகால அவகாசம் தமக்குத் தேவையென குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் குடாநாட்டில் சிங்கள மக்களின் பிரச்சினைகளை குறுகிய சுயலாப அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்தக் கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அம்மக்கள் தமது நிலைப்பாடு பற்றி அமைச்சரிடம் தெரிவிக்கையில், நாம் 50 வருடத்திற்கு மேல் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்ததாகவும் தாம் தனிச் சிங்கள மக்கள் அல்ல என்றும் தங்களுள் தமிழ் மக்களும் உறவுகளாகக் கலந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அவர்கள் வாடகை அடிப்படை யில் குடியேற விரும்புபவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்ததுடன் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக்குடியேறி சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் தமதும் எதிர்பார்ப்பாகுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: