வியாழன், 12 அக்டோபர், 2017

ஒரு ஊழியருக்கு சம்பளம் ரூ 13000 / இன்னொருத்தருக்கு 225000 எந்த வகை சமூக நீதி ?


Damodaran : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு -- ஒரு அநீதி அக்கிரமம். தமிழ் நாட்டில் பாதி பேருக்கு மேல் வேலை இன்றி திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கும் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் வாடுகிறார்கள்
விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நெசவாளர்கள் நாளும் அரைப்பட்டினி , ஏழை நடுத்தர குடும்பங்கள் பற்றாக்குறையால் நரகவேதனை அனுபவிக்கும் இந்த காலகட்டத்தில் .... எம்.எல்.ஏ./எம்.பி.க்களுக்கு மந்திரிகளுக்கு ஊழலுக்கு உதவி செய்யும் அரசு உயர் அதிகாரிகளுக்கு
மாதம் ஒன்றுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் .....
இது ஒரு பெரிய பகல் கொள்ளை அல்லவா ?
ஆசிரியர் அரசு ஊழிழர்களுக்கு
அளவுக்கு அதிகமான சம்பளம் படிகள் வழங்குவது
அநீதி, மனிதாபிமானமற்ற ,இரக்கமற்ற செயல்.
இதுவும் போதாது இன்னமும் பல மடங்கு ஊதியம் கேட்டு நடத்தும் போராட்டங்கள் நியாயமா ?
இவர்களின் சம்பளத்துக்கு ஒரு உச்ச வரம்பே இல்லையா ?

லைக்கா நிறுவனத்தில் வருமான வரி சோதனை ...

தினமலர் : மத்திய, ஜி.எஸ்.டி., புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 'லைக்கா' திரைப்பட நிறுவனம், இரண்டு கோடி ரூபாய் வரி செலுத்தாமல் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை, அண்ணா சாலையில், இலங்கையைச் சேர்ந்த, திரைப்பட நிறுவனமான, 'லைக்கா' செயல்படுகிறது. இது, விஜய் நடித்த, கத்தி உட்பட, பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. கமலின், சபாஷ் நாயுடு மற்றும் ரஜினியின், 2.0 உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தில், அக்., 7ல், சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர். இது பற்றி, அதிகாரிகள் கூறியதாவது: லைக்கா நிறுவனம், திரைப்பட வினியோக உரிமை உள்ளிட்டவற்றுக்கு, உரிய அளவில், சேவை வரி செலுத்தாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து, அங்கு சோதனை நடத்தியதில், இரண்டு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின. அதில், 50 லட்சம் ரூபாயை, அவர்கள் உடனடியாக செலுத்தினர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சரத்குமாரிடம் கைப்பற்றிய 9 லட்சம்.. திருப்பி புதிய நோட்டு கொடுக்க மறுக்கும் வருமானவரி துறை

Vijay Bhaskarvijay : சமத்துவக் கட்சித் தலைவருக்கு
( என்ன சமத்துவம் என்றுதான் தெரியவில்லை )
வந்த விநோதமான பிரச்சனை என்று ஒரு செய்தியை தினத்தந்தி DT NEXT யில் படித்தேன்.
தேர்தல் சமயத்தில் அவரிடம் இருந்து 9 லட்ச ரூபாயை அரசாங்கம்(?) கணக்கில்லாத பணம் என்று எடுத்துக் கொண்டு விட்டது.
இல்லை கணக்கிருக்கிறது என்று நிருபித்து பணத்தை வாங்குவதற்கு முன் புதிய ருபாய் திட்டத்தை அறிவித்து விடுகிறார்கள்.
கேஸில் ஜெயித்து பணத்தை வாங்கும் போது “ இந்தாங்க உங்க பணம்” என்று சரத்குமாரிடம் நீட்டும் போது
“அப்போது என் பணம் செல்லம். இப்போது இது செல்லுமா” என்று கேட்டு, செக்காகவோ டிடியாகவோ அல்லது அக்கவுண்டில் டெப்பாஸிட் செய்யவும் என்று கேட்டிருக்கிறார்.
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ரைடில் எடுத்துப் போன பணத்தை கொடுத்து விட்டோம் என்று எடுத்தவர்கள் சொல்ல சரத்குமார் கோர்ட்டுக்கு போகிறார்.

கடனில் மூழ்கும் இந்திய வங்கிகள்!

மின்னம்பலம் : ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு 4.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.9.5 லட்சம் கோடியாக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகளிடம் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடனாளிகள் பலர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாவதும் வாடிக்கையாகிவிட்டது. கடனை வசூலிக்க அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், வங்கிக் கடன் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 2017ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு 4.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் வாராக் கடன் அளவு 5.8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புதன், 11 அக்டோபர், 2017

பசுமதி பயிரிட இந்தி பேசாத மாநிலங்களுக்கு தடை .. விவசாயத்தில் இந்தி காலனித்துவம்


உ.பி., உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாசுமதி பயிரிட அனுமதி
பரேலி:சுவை மற்றும் நறுமணத்தால், தனி இடம் பிடித்த, நம் நாட்டின், பாசுமதியை பயிரிட, ம.பி., தமிழகம் உள்ளிட்ட, 22 மாநிலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர், மஹாபாத்ரா கூறியதாவது: இந்திய பாசுமதி அரிசிக்கு, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தேவை அதிகமாக உள்ளது. 100 நாடுகளுக்கு, பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.சமீபகாலமாக, ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டதாக பொய்யான பிரசாரத்தை பரப்புகிறார்கள் , இந்தி பேசாத மாநிலங்களின்  பாசுமதி அரிசியின் தரம் பாதிக்கப்பட்டதாம் . . இதையடுத்து, பாசுமதி பயிரிட்டு வந்த, ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், பீஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட, 22 மாநிலங்களில் பாசுமதி பயிரிட, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தடை விதித்துள்ளது. உ.பி., உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாசுமதி பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.ஏஜென்சி செய்திகள்

டெல்லியில் செல்லா காசான பன்னீர்செல்வம்... ? சீந்துவார் யாருமில்லை ...எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? .

Raj : Oneindia Tamil அதிகாரம் மனிதர்களை எப்படி பாடாய்படுத்தும் என்பதை நிச்சயம் அந்த தமிழகத்து பெருந்தலை கடந்த வாரம் உணர்ந்திருப்பார். என்னாதான் அதிகாரம் கிடைத்தாலும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்கிற மனக்குறை. பிக்பாஸை சந்திக்க லாபியிஸ்டாக இருந்து வந்தவரும் இப்போது அதிருப்தியில் இருக்கிறார். புதியதாக ஒரு தொடர்பு கிடைக்கிறது.
நம்பிக்கையோடு தலைநகரில் தரையிறங்கினார். அங்கு தொடங்கியது சோதனை. எங்கே போவது என தெரியாமல் புதிய தொடர்பை அழைக்கிறார். அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். இதையடுத்து சகாக்கள் குழுமியிருந்த இடத்துக்குப் போனார்..அங்கேயும் யாருமே கண்டுகொள்ளவில்லை..

BBC :18 வயதை எட்டாத `மனைவி'யுடனான பாலுறவு குற்றம்...

திருமண வயதை அடையாத மனைவிகளுடன் பாலுறவு கொள்ள ஆண்களை அனுமதிக்கும் சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் படி 18 வயதை விட குறைவான வயதுடைய பெண்ணுடன் பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும். ஆனால், 15 வயதைவிட அதிகமான மனைவியிடம் உறவு கொள்வது குற்றமல்ல என்று அதில் ஒரு விதிவிலக்கு இருந்தது. ஓர் அரசு சாரா அமைப்பு தொடுத்த வழக்கில், புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்த விதிவிலக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின்படி 18 வயது நிறைவடையாத, திருமண உறவில் உள்ள பெண்கள், கட்டாயமாக பாலுறவு வைத்துக்கொள்ள தங்கள் கணவன்மார்கள் வற்புறுத்தியதாக, சம்பவம் நடந்த ஓராண்டுக்குள், புகார் தெரிவிக்க முடியும். ஆனால், இந்த உத்தரவை அமல் படுத்துவது கடினம் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்தாலும், திருமண உறவில் நிகழும் பாலியல் வல்லுறவு குற்றமாகக் கருதப்படவில்லை.

தெலுங்கான அரசு காஞ்ச இலையாவிற்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும்

thetimestamil : புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது என பேராசிரியர் காஞ்ச இலையாவுக்கு எதிரான போராட்டங்களை கண்டித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தெலுங்கானாவைச் சார்ந்த தலீத்திய சிந்தனையாளர் பேராசிரியர் காஞ்ச இலையாவை தூக்கிலிடப்போவதாக பகிரங்கமாக கொலை மிரட்டலை சில சக்திகள் கொடுத்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கண்டிக்கிறது.
அவர் எழுதிய நூலை எதிர்த்து ஆந்திராவிலும் , தெலுங்கானாவிலும் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
அவர் எழுதிய நூல் 2011 ல் ஆங்கிலத்தில் வெளியானது ; அதிலிருந்த சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டு சிறு புத்தக வடிவில் சமீபத்தில் வெளிவந்துள்ள து. அதில் சாதியத்தின் பிரிவுகளை ஆராய்ந்து , வாணிய குலம் எப்படி வியாபாரத்திலும், தொழிலிலும் கோலாச்சியுள்ளது என எழுதியுள்ளார்.அதில் யாருக்கேனும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ; அது குறித்து விவாதிக்கலாம்;கண்டிக்கலாம் ;விமர்சனம் செய்யலாம்; அதற்கு மாற்றாக எழுதலாம்.

புத்தகம் எழுதியதற்காக யாரையும் தூக்கிலிட முடியாது.

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி

மாலைமலர் :சென்னை மெட்ரோ ரெயில் பயணிகள் அலுவலகங்கள் செல்ல வசதியாக இலவச சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் வசதி சென்னை: சென்னை விமான நிலையம் முதல் நேரு பூங்கா வரை ஒரு மார்க்கமாகவும் மற்றும் விமான நிலையம் முதல் சின்னமலை வரை இரண்டாவது மார்க்கமாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு - முதல்வர் அறிவிப்பு

மாலைமலர்:   ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் 2.57 மடங்கு உயர்வு - முதல்வர் அறிவிப்பு சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியது. இன்று கூடிய தமிழக அமைச்சரவையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமித்ஷா மகன் ஊழலை கண்டுகொள்ளத நிதீஷ்குமார் லாலுவை ஊழல் என்பது ..... சாதிக்கொரு நீதி!

ஆறு ஆண்டுகளுக்கு முன் மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் ஊழல் என்பது பெரிது படுத்தப்பட்டு ஒருவரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கொண்டு வருவதும், மற்றொரு பக்கம் அது ஒரு விசயமே இல்லையே என்பது போல் பேசுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த அரசியல்வாதிகளின் சாதி. உதாரணமாக லாலு, மாயாவதி போன்றவர்களை மோசமானவர்களாகவும் ஜெயலலிதா, சுரேஷ் கல்மாதி, சுக்ராம் போன்றவர்களை வேறு மாதிரி சித்தரிப்பதற்கும் தொடர்பு இருக்கிறது. பாஜகவை சேர்ந்த பங்காரு லட்சுமணன் ஒரு லட்ச ரூபாய் ஊழலுக்காக தூக்கியெறியப்பட்டார், ஆனால் அதே கட்சியை சேர்ந்த உயர்சாதி திலீப் சிங் பல லட்ச ரூபாய் ஊழல் செய்தபோதும் அவரை கட்சி காப்பாற்றியது என்று சேகர்குப்தா குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய நிலவரத்தை நாம் பார்ப்போம், கோடிக்கணக்கான ரூபாய் ஊழலுக்காக மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட கேதான் தேசாய் குஜராத் மெடிக்கல் கவுன்சில் தலைவராக மோடி காலத்தில் நியமிக்கப்பட்டார். இப்போது சர்வதேச பொறுப்பில் இருக்கிறார், அதற்கு காரணம் உயர்சாதி பின்புலம். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் ரங்கராஜ் பாண்டே சசிகலா என்றவுடன் ஓங்கி அடிக்கிறார். அதானி தனது நிறுவனங்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததை பத்திரிக்கையில் எழுதிய பரஞ்சாய் குஹா தாக்கூர்த்தா EPW பத்திரிக்கையில் இருந்து வெளியேற்றபட்டார். அதானிக்கு 10,000 கோடி லோன் கொடுத்த அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு ஸ்டேட் பேங்க் சேர்மனாக பதவி நீட்டிப்பு கிடைத்தது.

சசிகலா நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும் ...விடுப்பு இன்றுடன் நிறைவு

தினத்தந்தி :சசிகலாவுக்கு வழங்கப்பட்ட ஐந்து நாட்கள் பரோல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவர் நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை காண கர்நாடக சிறைத்துறையிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அவரது பரோல் மனுவை ஏற்ற சிறைத்துறை சசிகலாவை ஐந்து நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. மேலும், தனது பரோல் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. 6 ஆம் தேதி பரோலில் வெளியே வந்த சசிகலா, தனது கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களிடமும் பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜாதிபெயர்கள் கிடையாது


பெயர்களில் உள்ள ஜாதி  குறியீடுகளை தமிழகத்தில் மட்டுமல்லாது  கடல் கடந்தது    ஈழத்தமிழர்களின் பெயர்களிலும் இருந்த ஜாதி  பெயர்களை அறவே ஒழித்து விட்டது என்பது வியப்புக்கு உரிய செய்திதான்!
அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்றுஎந்த   காலத்திலும் பேசியதாக   தெரியவில்ல.
ஆனால் அந்த மக்கள் தங்கள்  ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.   
தமிழக திரைப்படங்கள் பாடல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் மூலம் தமிழகத்தை பற்றிய அறிவு இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு இருந்திருக்கிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை தமிழர் பற்றி யுத்ததிற்கு முன்பு வரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகிறார்கள் என்றது தமிழகம் துடித்து எழுந்தது வரலாற்று உண்மை.
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் எம்மவரே என்று கொதித்து எழுந்த  தமிழகத்துக்கு யாழ் மையவாதிகள் பற்றி தெரிந்திருக்கவில்லை.
தமிழ் தேசியவாதிகளான புலிகளுக்கு திராவிட பகுத்தறிவு சுயமரியாதை போன்ற சொற்களே வேப்பங்காயாக கசந்ததில் வியப்பில்லை .
 கம்யுனிசம் என்றால் பிறவி எதிரிதான் .அதைவிட மோசமான எதிரியாக திராவிட கோட்பாட்டை வெறுத்தார்கள் . அதற்கு முக்கயமான ஒரு காரணமாக சாதி மறுப்பு என்று மட்டும் கூறிவிடமுடியாது ,
பார்ப்பனீயத்தின் அசல் வாரிசுகளாக யாழ்மையவாதிகள் இருக்கிறார்கள்.
பெரியாரின் தாக்கம் ஈழத்திலும் இருந்திருக்கிறது.
பராசக்தி படமும் அதன் வழி ஒட்டி வந்த ஏராளமான திரைப்படங்கள் சுயமரியாதை கருத்துக்களை ஓரளவு மக்கள் மனதில் விதைத்திருந்தன.
இவற்றின் காரணமாக சாதி பெயர்களை மக்கள் பயன்படுத்துவதில்லை. அது அநாகரீகம் என்ற கருத்தை ஈழத்தில் பதித்தது நிச்சயமாக திராவிட இயக்கங்கள்தான். இன்று பலரும் மறந்து விட்ட வரலாற்று உண்மை இதுவாகும்.
திரைப்படங்கள் மாத்திரம் அல்லாது தமிழக பத்திரிகைகளும்  திராவிட கருத்துக்களை ஓங்கி ஒலித்தமையையும் கருத்தில் கொள்ளத்தக்கது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சமுக அரசியல் களத்தில் வேகமாக எழுச்சி பெற்று கொண்டு வந்த நிகழ்வுகளை  சிங்கள ஆட்சியாளர்கள் அதை மிகுந்த சந்தேகத்துடனும் கொஞ்சம் திகிலுடனும் நோக்கினர்,

சிங்களர்களின் கவனத்தை  திமுக கவர தொடங்கியது தமிழ் தலைவர்களுக்கு ஒரு நம்பிகையை கொடுத்தது . ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு திமுகவின் பக்கக் பலம் தேவை என்ற எண்ணம் உருவானது.

வைகோ "வேலுநாச்சியார்" திரைப்படம் தயாரிக்கிறார் - கதை வசனம் வைகோ - இயக்கம் ஸ்ரீ ராம் சர்மா


tamilthehindu :வேலுநாச்சியார் நாடகத்தில் இடம்பெற்ற காட்சிகள். ;படங்கள்: எல்.சீனிவாசன் குள.சண்முகசுந்தரம் ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ நாட்டிய நாடகம் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கண்ணகி ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இத்திரைப்படத்துக்கு முதல் முறையாக கதை - வசனம் எழுதுகிறார் வைகோ.
18-ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 16 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். ஜான்சி ராணியின் வீரத்தை மெச்சிய வெள்ளையர்கள், வேலுநாச்சியாரின் வீரத்தை முழுமையாகச் சொல்லாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.< திருள்ளுவரின் திருவுருவத்தை வரைந்த கே.கே.வேணுகோபால் சர்மாவின் புதல்வர் வே.ஸ்ரீராம் சர்மா. இவர், மறைக்கப்பட்ட வேலுநாச்சியாரின் வரலாற்றை ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ எனும் நாட்டிய நாடகமாக கடந்த 2011-ல் வடிவமைத்தார். இதை அரங்கேற்றும் வாய்ப்புக்காக காத்திருந்தபோது, தனது செலவில் நாட்டிய நாடகத்தை தயாரித்து அரங்கேற்ற முன்வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

கருவறைகளின் பூட்டை உடைத்த கேரளா முற்போக்கு அரசு


சிறப்புக் கட்டுரை: சாதிச் சுவர் மீது ஓர் உளி வீச்சு!
தீக்கதிர் :அ.குமரேசன்
“எப்பப் பார்த்தாலும் சாதிப் பிரச்னை பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்களே, எப்பத்தான் அதை நிறுத்துவீங்க?”
“சாதிப் பிரச்னை ஒழிகிறபோது...”
“அது ஒழிஞ்சிருச்சுன்னு எப்ப முடிவுக்கு வருவீங்க?”
“சாதியால் பாதிக்கப்பட்டவராக ஒரே ஒருவர் இருந்து, அவருக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு வருகிறபோது...”
“இல்லாத ஒண்ணைப் பெரிசுபடுத்திக்கிட்டே இருக்கீங்க... இருந்தாலும் ஆல் தி பெஸ்ட்.”
தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் இடையே சாதியம் பற்றி நான் பேச, வாக்குவாதம் சூடாக, நிகழ்ச்சி முடிந்தபின் வந்த தேநீரைப் பருகியபடி, எதிர்வாதம் செய்தவருக்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல் இது.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பாகுபாட்டு இழிவுகளிலேயே இந்தியாவின் அவமானமாகத் தொடர்வது சாதி. இந்தியாவின் அரசியல், சமூகம், ஆன்மிகம், மேல்மட்டம், கீழ்மட்டம் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சாதி. எவ்வளவுக்கு எவ்வளவு இந்தச் சாதியக் கட்டமைப்பு வன்மம் மிக்கதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நுட்பமானது. தான் மேலிருந்து நீளும் காலுக்குக் கீழே மிதிபடுவதில் ஆவேசப்படுவதற்கு மாறாக, தன் காலுக்குக் கீழே யாரோ மிதிபடுவதில் மனநிறைவு கொள்ளும் வக்கிரமான பின்னலமைப்பு இது.

சட்டம் மீறிய சாமானியன் ... சலூட் அடித்த போலீஸ் !

வாகன ஓட்டியைக் கையெடுத்துக் கும்பிட்ட காவல்துறை அதிகாரி!
மின்னம்பலம் :குடும்பத்தோடு இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்துக் காவல்துறை அதிகாரி ஒருவர் கையெடுத்து கும்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் வாகன ஓட்டி ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஐதராபாத் அருகில் உள்ள ஆனந்த்பூர் மாவட்டத்தில் மடகாசிரா பகுதியில் உள்ள சாலையில் செல்கிறார். அதில் தனது இரண்டு மகன்களை பெட்ரோல் டேங்க் மீது உட்காரவைத்தும், மனைவி மற்றும் உறவினர் ஒருவரை தனக்குப் பின்னால் அமரச் செய்தும் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்.

உ.பியில் ரசாயனக் கசிவு ..300 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி .

ரசாயனக் கசிவு: குழந்தைகள் பாதிப்பு!மின்னம்பலம் : உ.பியில் சர்க்கரை ஆலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டதால் 300 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லியில் சர்க்கரை ஆலை உள்ளது. நேற்று (அக்டோபர் 10) காலை ஆலையில் உள்ள வாயு எரிகலனில் இருந்து ரசாயனம் கசிந்தது. இந்த வாயுக்கசிவால் ஆலைக்கு அருகில் உள்ள சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவ, மாணவியருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு வயிற்று வலி, மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் பெரும்பாலான மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், 36 மாணவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The_Wire இணைய தளத்தை முடங்கச் செய்த கட்டுரை ! ... செல்லாத நோட்டுக்களால் பிரமாண்ட லாபம் கண்ட அமித் ஷா மற்றும் ,,,,

AThi Asuran  : #The_Wire இணைய தளத்தை
முடங்கச் செய்த கட்டுரை[இது ஒரு copy paste பதிவு ]
Thewire.in இணைய தளம் இன்று ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரை வெளியானவுடன், அதைப் படிக்கப் பலரும் முண்டியடித்ததில் தளமே சிறிது நேரத்திற்கு ட்ராஃபிக் தாங்காமல் முடங்கியது.
இந்தக் கட்டுரை, பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா பற்றியது. அவருடைய நிறுவனத்தின் வரவு - செலவு எப்படி சில ஆயிரங்களில் இருந்து பல கோடிகளாக உயர்ந்தது என்பது பற்றியது.
#ஜெய்_அமித்ஷா (இனிமேல் ஜெய் என்று செல்லமாக அழைப்போம்) டெம்பிள் என்டர்பிரைசஸ் என்று ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம் 2004ல் ஜெய், ஜிதேந்திர ஷா என்ற அவர்களுடைய குடும்ப நண்பர் ஆகியோரை இயக்குனர்களாக வைத்துத் துவங்கப்பட்டது.
#அமித்ஷாவின் மனைவி சோனல் ஷாவும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்.
2013ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் இழப்பு 6, 230 ரூபாய். 2014ஆம் ஆண்டில் இழப்பு 1,724 ரூபாய். 2014-15ல் கம்பெனியின் விற்பனை 50,000 ரூபாய். இதில் லாபமாக 18,728 ரூபாய் கிடைத்தது என கணக்குக் காட்டப்படுகிறது.
இதற்குப் பிறகுதான் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. 2015-16ல் நிறுவனத்தின் விற்றுமுதல் திடீரென 80.5 கோடி ரூபாயாக உயர்கிறது. இதில் 51 கோடி ரூபாய் வெளிநாட்டில் செய்யப்பட்ட வர்த்தகத்தின் மூலமாகக் கிடைத்ததாம். ஆனால், 2016ல் நிறுவனத்திற்கு 1.4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்குக் காட்டி நிறுவனமே மூடப்படுகிறது. அதாவது முதல் ஆண்டில் ஏகப்பட்ட வருவாய். அடுத்த ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பனியே மூடப்படுகிறது.

‘மூன்று நாள் அமைதிக்குப் பின் எகிறிப்பாய்ந்த சசிகலா!’ – குடும்ப உறவுகளுக்கு எச்சரிக்கை

சசிகலா விகடன் : எஸ்.மகேஷ்< Chennai:மூன்று நாள்கள் அமைதிக்குப் பிறகு,  குடும்ப உறவுகளிடம் மனம்திறந்து பேசியுள்ளார் சசிகலா. அப்போது, சில காரணங்களைக் குறிப்பிட்ட  அவர், குடும்ப உறவுகளில் இரண்டு பேரை கடுமையாக எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 5 நாள்கள் பரோலில் வந்தார். அவர், சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனைச் சந்திக்க மட்டும் சென்றார். மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் அவர் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார். சிறைத்துறையின் நிபந்தனைகளை முழுமையாக சசிகலா கடைபிடித்துவருவதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.

சந்தானம் மல்ட்டிப்ளக்ஸ் பஞ்சாயத்து! சமரசப் படலம் ஆரம்பம்

விகடன் : எஸ்.மகேஷ் Chennai: நடிகர் சந்தானத்துக்கும் பில்டர்
சண்முகசுந்தரத்துக்கும் இடையே நடந்த வாக்குவாதம் அடிதடியில் முடிந்துள்ளது. இதனால், இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீஸார், விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், நடிகர் சந்தானம் தரப்பிலிருந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் போனில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.மகேஷ்சென்னை வளசரவாக்கம், சௌத்ரி நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், கட்டுமான நிறுவனத்தை நடத்திவருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு, குன்றத்தூர் அருகிலுள்ள கோவூர் பகுதியில், ‘மல்ட்டிப்ளக்ஸ் காம்ப்ளக்ஸ்’ கட்டுவது தொடர்பாக சண்முகசுந்தரத்தை அணுகியுள்ளார்,  நடிகர் சந்தானம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அந்த காம்ப்ளக்ஸின் பணிகள் நடந்துவந்தபோது, திடீரென இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால், கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து நடிகர் சந்தானம், கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் திரும்பக் கேட்டார். அதில், குறிப்பிட்ட தொகையை சண்முகசுந்தரம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மீதிப் பணத்தை சண்முகசுந்தரம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக நடிகர் சந்தானத்தின் போன் அழைப்புக்கு சண்முகசுந்தரம் பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நடிகர் சந்தானம், நேற்று வளசரவாக்கத்திலுள்ள அலுவலகத்துக்கு வந்துள்ளார். அவருடன் சந்தானத்தின் மேலாளர் ரமேஷும் வந்துள்ளார்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

காமெடின்னாவே வடிவேலுன்னுதான் ஒரு புது அகராதியை ... ! 10/10/2017 பொறந்த நாளாமாம்.

Lulu Deva Jamla : வடிவேலு காமெடிங்கிறது, Charlie Chaplin comedy மாதிரி Slapstick or Physical Comedy மட்டுமில்ல “comedy of manners”உம் கூட தான்னு சொல்லுவேன்.
அதாவது தன் உடல் மொழியால் (Body language) சிரிக்க வைக்கிறது மட்டுமில்ல, self insult செஞ்சுகிட்டு மத்தவங்கள சிரிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில சந்திரபாபு முதல் சந்தானம் வரை மத்த லீட் காமெடியன்கள் எல்லாரும் அடுத்தவங்களை தாக்கி தான் சிரிக்க வைப்பாங்க. ஆனா வடிவேலு தன்னையே தாக்கிக்குவாரு. மத்தவங்களையும் நீக்கு போக்கு பாக்காம தன்னை தாக்க அனுமதிப்பாரு.
ஆனா நம்ம யாருக்குமே அவர் மேல பரிதாப உணர்ச்சியே வராது. சிரிப்பு தான் வரும். நாங்க திருப்பூர்ல வாழ்ந்தப்ப, வெற்றிக்கொடி கட்டு படம் தியேட்டர்ல வந்திருந்திச்சி. சன்னுவும் நானும் புது தம்பதிகள் அப்போ. சோடியா போனோம். திடீர்னு பார்த்திபனுக்கு பயந்து வடிவேலு பஸ்ஸ பிடிக்க துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடுற சீன்ல, அதான்பா அந்த ங்கோ... கெட்டவார்த்தைல ஒருத்தன் திட்டுவானே அதான்... அப்ப எங்களை சுத்தி இருந்தவுங்க எல்லாருமே வலது பக்கம் சுவர்ல தன் மண்டைய மோதி மோதி சிரிச்சுகிட்டு நின்ன ஒருத்தர பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் பக்கத்து சீட்ல இருந்த சன்னுவ ஏப்பா ஏப்பான்னு கூப்பிட்டா சத்தத்தையே காணோம். திரும்பி பார்த்தா ஆளயே காணோம். அப்பறம் தான் நா ரியலைஸ் பண்ணினேன், அங்க சுவத்துல முட்டிகிட்டு நின்னு கெக்கபிக்கேன்னு சிரிச்சுகிட்டு நின்னது எங்கூட்டுகாரரு தான்னு. மானம் போவுது. சீட்ல வந்து ஒக்காருங்கன்னு அவர புடிச்சிட்டு வந்து ஒக்கார வைக்கிறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்திரிச்சி. 😷😷😷 அந்தளவுக்கு வடிவேலு செண்டிமெண்ட் உண்டு என்னோட லைஃப்ல.

டெங்கு மரணங்களும் ஹீலர்களின் உல்டா பிரசாரங்களும்.. எய்ட்ஸ் உடபட All நோய்கள் .. ... ???


R.S.Prabhu: தமிழகத்தில் தினமும் பத்துக்கும் குறையாத டெங்கு மரணங்கள் கொள்ளைநோய் கணக்காக நிகழ்ந்து கொண்டிருக்கையில் தடுப்பூசி போட்டதால் மரணம் நிகழ்கிறது, கொசு மருந்து தெளிப்பதால் கொசுக்கள் பெருகிறது, மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் கொசுக்களைக் கொல்லக்கூடாது, அலோபதி மருத்துவத்தில் டெங்குவுக்கு மருந்தில்லை என்றெல்லாம் பேசிவரும் ஹீலர் கும்பல்கள், மரபு/பாரம்பரிய ஆர்வலர்கள்தான் இன்றைய merchants of death. பப்பாளி இலைச்சாறு பருகினால், நிலவேம்பு கசாயம் பருகினால் டெங்கு குணமாகும் என்று நம்பி மருத்துவர்களிடம் போகாமல் குடும்பத்தினரின் உயிரைக் கொன்று கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு இந்த ஹீலர்கள் கடவுளாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை.
பஞ்சகவ்யம் குடித்தால் எய்ட்ஸ் உட்பட எல்லா நோயும் குணமாகும், கண்ணாடி போட தேவையிருக்காது, காசுக்கு ஆசைப்பட்டு அலோபதி மருத்துவர்கள் சிசேரியன் செய்துவிடுகிறார்கள், நாற்காலியில் உட்கார்ந்ததால்தான் வியாதிகள் வருகிறது, கலப்பின விதைகள் என்றால் மறுபடியும் முளைக்காது என சகட்டுமேனிக்கு பொய்களைப் பரப்பிய நம்மாழ்வார்தான் இந்த ஹீலர் கும்பல்களின் பிதாமகன்.

போலி சமுக ஆர்வலர்கள் அரசியல் விபசாரம் செய்ய Room கொடுக்கும் ஊடகங்கள்!

-Ganesh Babu :இதுப்போன்ற ஓரிரு பதிவுகளை பா.ஜ.கவுக்கு எதிராகப் போடும் சுமன்.சி.ராமன், டீமானிட்டைசேசன், நீட் தேர்வு போன்ற மிக முக்கியமான ஊடக விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் சார்பாகத்தான் பேசுவார். அதுவும் 'சமூக ஆர்வலர்', 'அரசியல் விமர்சகர்' என்றப் போர்வையில்.
இதைப்போல சிலநேரங்களில் தன்னை நடுநிலையாளனாக நிலைநிறுத்திக்கொள்வதன் மூலம் சமூகத்தின் நம்பகத்தன்மையை பெருவதும்கூட பார்ப்பனீயத்தின் நுண்ணரசியல்தான்.
திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், தேவைப்பட்டால் இழவு வீட்டில் பிணமாகவும் எப்போதும் தன்னை வெளிச்சத்தில் வைத்துக்கொள்ளும் தந்திரம்.
அருன் ஹோரி, அன்னா ஹஜாரே, குருமூர்த்தி, சோ, சு.சாமி என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது.

பாஜக ஒரு மன்னார் அன் கம்பனி ... அமித் ஷா + மோடி மற்றும் RSS கமிஷன் ஏஜெண்டுகள் ..

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம்: மன்னார் அண்ட் கம்பெனியும் மேக்சிமம்  கவர்னன்சும்
அமித் ஷா – பாரதிய ஜனதா தலைவர். பிரதமர் மோடியின் வலது கரம்.
ஜே ஷா – அமித் ஷாவின் மகன்.
இவர் டெம்பிள் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கம்பெனி, மார்ச் 2013 கணக்கின்படி 6230 ரூபாய் நஷ்டம் அடைந்தது. மார்ச் 2014 கணக்கின் படி 1724 ரூபாய் நஷ்டம் அடைந்தது. 2013-14இல் இந்தக் கம்பெனிக்கு அசையாச் சொத்துகள் ஏதும் இல்லை. கையிருப்போ, ஸ்டாக்கோ ஏதும் இல்லை.
சுண்டல், சோயா பீன், கொத்தமல்லி, அரிசி, கோதுமை, சோளம் போன்ற உணவுப் பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதுதான் அந்தக் கம்பெனியின் வேலையாம்.
(இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்... அதாவது ஏற்றுமதி இறக்குமதி... மன்னார் அண்ட் கம்பெனி யாருக்கெல்லாம் ஞாபகம் வருது?)
2014-15இல் இந்தக் கம்பெனி 50 ஆயிரம் ரூபாய் புழக்கம் காண்கிறது.
அதற்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்.
2015-16இல் 80.5 கோடி ரூபாய் டர்ன்ஓவர் காட்டுகிறது.
2013-14இல் 6230 ரூபாய் நஷ்டம் காட்டி, அதில் 5796 ரூபாய் வருமான வரி திருப்பி வாங்கிய கம்பெனி...

க்மெர் ரூஜ் ( போல்போட்) ஏன் ஒரு சிறுமியின் தந்தையைக் கொன்றார்கள்?


கலையகம் : கம்போடியாவில், க்மெர் ரூஜ் கால கொடுமைகளை கூறுவதற்காக, பிரச்சார நோக்கில் எடுக்கப் பட்ட ஹாலிவூட் திரைப்படங்களுக்கு மத்தியில் First They Killed My Father ஒரு மாறுபட்ட படைப்பு எனலாம். நிச்சயமாக, இந்தப் படமும் க்மெர் ரூஜை வில்லன்களாக தான் சித்தரிக்கிறது. இருப்பினும் மிகைப்படுத்தல்கள் இல்லாமல், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டும் படமாக்கியுள்ளனர்.
எண்பதுகளில் வெளியாகி, உலகம் முழுவதும் பிரபலமாக்கப் பட்ட, The Killing Fields என்ற, ஹாலிவூட்டின் அரசியல் பிரச்சாரப் படத்துடன் ஒப்பிடும் பொழுது, இது எவ்வளவோ மேல் என்று சொல்லலாம். இதுவும் அடிப்படையில் ஒரு க்மெர் ரூஜ் எதிர்ப்புப் படமாக இருந்தாலும், அன்று நடந்த சம்பவங்களை உள்ளதை உள்ளபடியே காட்டியிருக்கும் நேர்மையை பாராட்டலாம்.
இரண்டு திரைப்படங்களுக்கும் என்ன வித்தியாசம்? குறிப்பாக சொல்வதென்றால், The Killing Fields படத்தில் "க்மெர் ரூஜ் எனப்படுவோர் மனநோய் பிடித்த கொலைகாரர்கள்" என்பதைப் போல காட்டி இருப்பார்கள். ஏன் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எதுவும் கேட்கப் படாது. அதற்கான பதிலும் கிடைக்காது. க்மெர் ரூஜ் என்றால் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை பார்ப்பவர் மனதில் பதிய வைக்க வேண்டும். அது தான் நோக்கம்.