நக்கீரன் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வெறும் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கி, பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அப்போது, துயரத்தில் வாடும் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், இந்த மனிதத்தன்மையற்ற கொடூரச் செயலை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீது சட்டத்தின் உச்சபட்ச தண்டனை உறுதி செய்யப்படும் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக என்றும் நிற்கும் என்றும் உறுதியளித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக