வியாழன், 25 செப்டம்பர், 2025

சகோதர படுகொலைகளில் திலீபனுக்கே முதலிடம்

Denzil Leo:  டெலோ ஈ.பிஆர்.எல் எப் புலிகள் ஈரோஸ் ஆகிய நான்கு இயக்கங்கள் ஓரு கூட்டுமுன்னணியாக இயங்கிய காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இந்த இயக்கங்களின் இரண்டாம் கட்டத்தலைமைகளின் சந்திப்பு நடைபெற்று வந்தது. 
அப்போது புலிகள் இயக்கத்தின் சார்பில் திலீபன் கலந்துகொண்டு ஏனைய சிறிய இயக்கங்களை செயல்படாமல் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். 
மற்றைய இயக்கங்கள் தீலீபனின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்துவிட்டன. 
அப்போது திலீபன்; கூறினார் உங்களால் முடியாவிடடடால் சொல்லுங்கள் நாங்கள் செய்கின்றோம் என்றார். அதன்பின்னர் செயலில் டெலி ஜெகன்  அகிம்சாவாதி திலீபன். 

டெலி என்ற இயக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ளவெளியான கல்லுண்டாய் வெளியில் கடற்படையினர் ரோந்து செல்லும் பாதையில் பல கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு இரண்டு நாட்களாக காத்திருந்தனர். 
இதனைக்கேள்விப்பட்ட திலீபன் அந்த இடத்திற்கு சென்று டெலி இயக்கத்தலைவரான ஜெகனுடன் இங்கு கண்ணிவெடி வைக்கவேண்டாம் என சச்சரவில் ஈடுபட்டார். 
இது மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி என் டெலி இயக்க ஜெகன் கூறவும் தீலீபன் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ,
,

 இயக்கதலைவன் ஜெகனை களத்தில் வைத்தே சுட்டுப்படுகொலை செய்தது மட்டுமல்ல தனது கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எல்லாக்கண்ணி வெடிகளையும் வெடிக்கவையுங்கடா என்று ஜெகனின் உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டார் திலீபன். 

இத்தாக்குதல் வெற்றிகரமாக நடந்திருந்தால் முதலாவது பெரிய கண்ணிவெடித்தாக்குதலாக இருந்திருக்கும். டெலி இயக்கத்தலைவர் இராணுவரீதியில் தாக்குதல்களை திட்டமிட்டு செய்வதில கைதேர்ந்தவராவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டார். 

என்ன செய்வது புத்திஜீவிகளைத்தான் புலிகள் அழித்தார்கள் என்றால் தமக்கு போட்டியாக இராணுவரீதியாக டெலி ஜெகன் வளர்ந்து வருகின்றார் என்பதால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஆனால்புலிகள் இயக்கம் 1983ம் ஆண்டு பலாலி முகாமில் இருந்து வந்த இராணுவத்தை எவ்வளவோ தோட்டவெளிகள் இருக்கும்போது,
 மக்கள் குடியிருப்புகள் பகுதியை தேர்ந்து திருநெல்வேலியில்,
  அதுவும் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திற்கு அருகில் கண்ணிவெடியை வெடிக்கவைத்து 13 இராணுவத்தை கொன்றனர். 
இந்த தாக்குதலால் படையினர் திருப்பித்தாக்கியதால் தமிழ் மக்களுக்கு பெரும் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டது மட்டுமல்ல நாட்டில் வன்முறை பரவி இனக்கலவரமாக மாறியது

கருத்துகள் இல்லை: