புதன், 24 செப்டம்பர், 2025

காவ்யா மாறன் 1094 கோடிக்கு நார்தேன் சூப்பர் சார்ஜஸ் அணியை சன் நெட்வெர்க் சார்பில் வாங்கி உள்ளார்.

 காவ்யா மாறன் 1094 கோடிக்கு நார்தேன் சூப்பர் சார்ஜஸ் அணியை சன் நெட்வெர்க் சார்பில்  வாங்கி உள்ளார். 
இது பற்றி ஒரு துரோகிஸ்தானியர்  படு பயங்கரமாக பொங்கி பொரிந்துள்ளார்!
தமிழர்களை உறிஞ்சி விட்டார்களாம்.  
துரோகிஸ்தானியர்கள் புதிதாக ஒன்றும் சங்கிகளாக மாறவில்லை.
துரோகிஸ்தானே ஒரு சங்கிஸ்தான் என்பதுதான் உண்மை!
அந்த சங்கிக்கு என் பதில் :  
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொழில் துறையையும் திட்டமிட்டு களவாடுகிறார்கள் மார்வாடிகள் 
சங்கிகள் சத்தம் போடாமல் செயலாற்றுகிறார்கள் 
தமிழ்நாடு மட்டுமல்ல இதர தென்னிந்திய முதலாளிகளையும் அழித்து ஒழிக்கும் வேலையை பாஜக அரசு செய்து கொண்டுவருகிறது 
ஆனாலும் இவற்றை எல்லாம் கண்டுகொள்ள மாட்டீர்கள் 
நீங்கள் எல்லாம்   தப்பி தவறியும் அதிமுக கொள்ளைகள் கொலைகள் பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டீர்கள் 
சங்கிகளின் ஏவல் பேய்களாக தெரிந்தோ அல்லது தெரியாமலோ உங்களை போன்றவர்கள் துணை போகிறார்கள் 
திமுகவுக்கு எதிராக என்றால் உடனே போதும் .. உங்களின் நியாய உணர்ச்சி கொழுந்து விட்டு எரியுமே?
கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.

 zeenews.india.com  Sun TV Network: பிரபல கிரிக்கெட் உரிமையாளர்களில் ஒருவராக திகழ்பவர் சன் டிவி நிறுவன தலைவரின் மகள் காவ்யா மாறன். இவர் தற்போது தனது சாம்ராஜ்யத்தை இங்கிலாந்து வரை விரிவுபடுத்தி உள்ளார். ஒரு புதிய கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம். 
இந்த பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் லிமிடெட் மற்றும் நைட் ரைடர்ஸ் குழுமம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. தற்போது, இந்த பட்டியலில் சன் நெட்வொர்க்கும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 சன் டிவி நெட்வொர்க் நார்தர்ன் சூப்பர்சார்ஜஸ் அணியை வாங்கிய நிலையில், உலகின் பல்வேறு லீக் தொடர்களில் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக மாறி உள்ளது. 
இந்த நிலையில், தற்போது 3வது கிரிக்கெட் அணியாக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை வாங்கி உள்ளனர். இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விதமான பணிகளும் வரும் டிசம்பர் 2025க்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது. 

    சன் டிவி நெட்வொர்க் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும், தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் நிர்வகித்து வருகிறது. இதனை காவ்யா மாறன் வழிநடத்தி வருகிறார். 

    அதாவது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை சன் டிவி நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக வாங்கி உள்ளது. இதனை சன் டிவி நெட்வொர்க் சுமார் 100.5 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,161 கோடி ஆகும். 
IPL: ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளர் காவ்யா மாறன் தற்போது இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளார். 

கருத்துகள் இல்லை: