ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

திலீபன் - சகோதர படுகொலைகளை கொடூரமாக நிகழ்த்திய கொடூரன்

  Suhan Kanagasabai  :   நேற்று முழுதும் தியாக தீபம் ,தியாகத் திருவுரு, அஹிம்சாமூர்த்தி என நினைவுகூரப்பட்ட திலீபன் குறித்த மறுபக்கம் இது.
திலீபனை நெஞ்சில் இருத்துபவர்கள் இந்தக் கசப்பான உண்மைகளையும் அறிந்திருப்பது நல்லது.
 " உண்மைகளில் இருந்து உண்மையைத் தேடுங்கள் " 实事求是 என்றொரு சீனப் பழமொழி இருக்கிறது.
பொதுவாக இன்று திலீபனை நினைவுகூர்பவர்கள் 1987 உண்ணாவிரதத்துடன் திலீபனை அறிந்தவர்கள்.
1985 இற்கு முன் மாற்று இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட போராளிகளிற்கு இந்தத் திலீபனை பெரும்பாலும் சொல்ல அறிமுகப்படுத்தத் தேவையில்லை.
1980 -1983 காலப்பகுதியில் படித்துக்கொண்டிருந்த யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு திலீபனும் கிட்டுவும் 
எப்படி கண்காணிப்பிலும் மாணவர்களிடையே உளவுச் செய்திகளுக்காகவும் வந்துபோபவர்கள் எனத் தெரியும். 
யாழ் மாவட்டத்தில் புலிகளின் அனைத்து முடிவெடுக்கும்  அதிகாரங்களையும் கொண்டிருந்த கிட்டுவும் திலீபனும் நிகழ்த்திய ,பரவலாக அறியப்பட்ட  கடும் விமர்சனத்திற்குள்ளான படுகொலை  ரெலி இயக்கத் தலைவரான ஜெகன் மீதானது.
ஜெகன் குழுவினர் வட்டுக்கோட்டைச் சந்திக்கும் பொன்னாலைக்குமிடையே கொத்தித்துறை எனுமிடத்தில் , காரைநகர் கடற்படைக்கு  கண்ணிவெடி புதைத்துக் காத்திருந்தபோது இதை அறிந்த திலீபன் நிகழ்த்தியது.
அப்போது புலிகளுக்கு வட்டுக்கோட்டையில் ஒரு தலைமறைவு முகாம் இருந்தது.
இதற்கான விமர்சனத்திற்கு முகம் கொடுக்கமுடியாமல் "இனம் தெரியாமல் சுட்டுவிட்டோம் ! "என புலிகள் அதிகாரபூர்வமாக விடுத்த அறிக்கையை படித்து இன்றும் நினைவில் வைத்திருப்பவர்கள் பாக்கியவான்கள்.பரலோக இராச்சியம் அவர்களுக்கானது ! 
ஆளை அடையாளம் தெரியவில்லையாம் ! ஆனால் வட்டுக்கோட்டையை பின்னணியாகக் கொண்ட என்போன்றவர்களுக்கு சுட்டது திலீபன் எனத் தெரியும்! 
இன்று உண்ணாவிரத மேடையில் படுத்திருந்தபடி காட்சி கொடுக்கும் திலீபன் முகம் எனக்கு எப்போதும் ஒரு கொலைகாரனையே நினைவிற்கொண்டுவரும்.
இதே வட்டுக்கோட்டையில் இந்தத் திலீபன் கும்பல்  ரெலோ இயக்கச் சிறுவர் போராளிகள் 32 பேர் மீது நிகழ்த்திய கூட்டுப் படுகொலை இன்னும் பிரசித்தமானது.
ரெலோ படுகொலைகளின் தொடர்ச்சியாக நடந்த கொலைகள்இவை.
யாழ் மாவட்டமெங்கும் பரவலாக ரெலோ போராளிகள் கொல்லப்பட்டபோது வட்டுக்கோட்டையில் ரெலோவுக்கு அறியப்பட்ட முகாம் இருந்தது. மாவடி முகாம் என அறியப்பட்டது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரெலோ  போராளிகளின் தொடர்பில் இளம் சிறுவர்களாக யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை முகாமில் இருந்தவர்கள் பலர் கண் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
   வட்டுக்கோட்டை முகாமில் இருந்தவர்களை கொன்றழிக்க வந்த புலிகளின் முதல் குழு இவர்கள் சிறுவர்கள் என்பதால் கொல்லாமல் திரும்பி வந்துவிட்ட்டனர். அப்போது வட்டுக்கோட்டை முழுதும் திலீபனின் கட்டுப்பாட்டில் இருந்தது. 
திலீபன் நிச்சாமத்தை சேர்ந்த 
 ரஷ்யன்  என்பவரின் மனைவியான "சங்கானை அம்மா "என்பவர் வீட்டில் நிற்கிறார். அங்கே வந்து வட்டுக்கோட்டை சங்கரத்தை முகாமில் இருந்த சிறுவர்களை கொல்லாமல் திரும்பி வந்த விடுதலைப் புலிகள் விசயத்தைச் சொல்ல "அவங்களை ஏன் விட்டுவைத்தீர்கள் ! "என சங்கானை அம்மா உளற ,இந்த அஹிம்சைப் போராளி  வாகனத்தை எடுத்துச் சென்று கொல்லாமல் விட்ட புலிகளையும் சுட்டு தப்பியோடாமல் மிச்சமிருந்தவர்களையும்  சுட்டுதள்ளினான்.
ரெலோவை அழிப்பதில் துவக்குடன் வெறி பிடித்த மிருகமாக அலைந்ததை நான் நேரில் கண்டேன். அதுவும் சிறீசபாரத்தினம் கட்டைப்பிராயில் இருந்து தப்பி தபால் பெட்டி ஒழுங்கையில் உள்ள குச்சுஒழுங்கையிற்குள் இருந்த கடைசி வீட்டில் (இது யாழ் மருத்துவ பீடத்தின் பின்புறம்)வைகுந்தம் (சண் இன் அண்ணர் வீட்டில்) உதவி கேட்டபோது அவர்களை தொடர்ந்து துரத்திவந்த சிறிய ஏகே குழுவிற்கு தலைவன் இந்த என் மாணவன் திலீபன். இதுபற்றி பெரிய வரலாறே எழுதலாம் இப்போது வேண்டாம். அவரின்...? கோரிக்கையை முன்வைத்து திலீபனை புனிதர் ஆக்கி கங்கையில் குளிப்பாட்டாதீர்கள் கருணாகரனே. ஹிட்லரை புனிதராக்கியது போல் ஆக்கி நடுவீட்டில் இருத்தியது போல் ஆகிவிடும். 
(சிவா முருகுப்பிள்ளை )
உரும்பிராயில் சிவகுமாரன் சிலைக்கு முன்பாக கோவிந்தசாமி என்ற முதியவருக்கும் மனோன்மணிக்கும் மரணதண்டனை வழங்கிய அகிம்சாவாதி யார்? 
(ரகு கதிரவேலு )
தியாக தீபம் திலீபன் என்ற ஒப்பாரி ஆரம்பமாகிவிட்டது. திலீபனுடன் சேர்ந்து இயங்கியவர்களுக்குத் தெரியும் அந்த தியாக தீபம்  உயிரோடு எரித்த போது எழுந்த தீபத்தை. 
நல்லூர் கோவிலுக்கு முன் உயிரோடு ரயர் போட்டு எரித்தபோது எழுந்த தீபம் உங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கும். 
(புதியவன் ராசய்யா )
மீள்

கருத்துகள் இல்லை: