BBC Tamil : பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் ஞாயிற்றுக்கிழமை அந்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.
பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிக்கும் அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகர்வு பிரிட்டன் வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், இஸ்ரேல் போர் நிறுத்தம், அமைதி ஒப்பந்தம் மற்றும் காஸாவில் இருநாட்டு தீர்வுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் செப்டம்பர் மாதத்தில் பாலத்தீன் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றப்போவதாக பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது.
பிரிட்டனின் இந்த முடிவு இஸ்ரேல் அரசு, பணயக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் சில கன்சர்வேடிவ் கட்சி தலைவர்களாலும் விமர்சிக்கப்பட்டது.
இத்தகைய நகர்வு "தீவிரவாதத்தை பரிசளிப்பது" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
எனினும் நீடித்த அமைதி ஒப்பந்தத்திற்கான நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தார்மீக கடமை இருப்பதாக பிரிட்டன் அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களில் நிலைமை மேலும் மோசமடைந்துவிட்டதாக பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக