tamil.goodreturns.in- .Prasanna Venkatesh : அமெரிக்க டிரம்ப் அரசின் சமீபத்திய H-1B விசா தொடர்பான அறிவிப்பு, டெக் துறையை தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த அறிவிப்பு வெளியான உடன் மைக்ரோசாப்ட் உடன் பல பெரும் டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அடுத்த 24 மணிநேரத்திற்குள் அமெரிக்க வரவும் உத்தரவிடப்பட்டதால் உலக நாடுகளில் இருக்கும் விமான நிலையங்கள் பரப்பரப்பானது.
செப்டம்பர் 19ஆம் தேதியன்று டிரம்ப் கையெழுத்திட்டு வெளியான உத்தரவில், ஹெச்1பி விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிப்பதாகத் தெரிவித்தது.
இதற்குப் பின்னர் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் குழப்பம் இருந்தது.
H1B Visa குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி, வந்தது முக்கிய அப்டேட்! IT ஊழியர்கள், IT நிறுவனங்கள் நிம்மதி
இந்த நிலையில் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெள்ளை மாளிகை அதிகாரியான (Press Secretary) கரோலின் லீவிட் (Karoline Leavitt), 4 முக்கிய விளக்கம் கொண்டு ஒரு factsheet-ஐ வெளியிட்டார். இதில் புதிய கட்டணத்தின் உண்மை தன்மை, யார் பாதிக்கப்படுவர் மற்றும் யார் பாதுகாக்கப்படுவர் என்பதை தெளிவுபடுத்துகின்றன.
கட்டணம்: ஆண்டு வருவாய் அல்ல, ஒரே முறை செலவு
வெள்ளை மாளிகையின் factsheet-ல், இந்த 1 லட்சம் டாலர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியது அல்ல என்று முதல் முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளது. இது ஒரு முறை கட்டணமாகும், அது விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது மட்டுமே வசூலிக்கப்படும்.
இதனால், நிறுவனங்கள் இந்தத் தொகையை ஒரு தொடர்ச்சியான செலவாகக் கருத வேண்டியதில்லை, ஆனால் புதிய விண்ணப்பங்களுக்கு இது கட்டாயமாகும். இந்த விளக்கம், வருடாந்திர சுமை என்ற குழப்பத்தை தீர்த்துள்ளது.
தற்போதைய விசா ஊழியர்கள் நிலை:
இந்த உத்தரவு, தற்போதைய H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அமெரிக்காவுக்கு வெளியே தற்போது இருக்கும் ஹெச்1பி விசா ஊழியர்கள், 1 லட்சம் டாலர் செலுத்தாமல் அமெரிக்காவுக்கு திரும்பலாம்.
H-1B விசா ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவது என்பது அவர்களின் உரிமை, நேற்றைய உத்தரவால் இது பாதிக்கப்படாது. இது, ஏற்கனவே அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிம்மதி அளிக்கிறது. இதனால் அவசர அவசரமாக அமெரிக்காவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
புதிய விசாக்களுக்கு மட்டுமே கட்டணம்:
மூன்றாவது முக்கிய விளக்கம், இந்தக் கட்டணம் புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. விசா ரினிவல் அல்லது தற்போதைய விசா ஊழியர்களுக்கு இது எந்த அளவிலும் பாதிப்பு இல்லை. இதனால், ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் விசா காலத்தை அமைதியாகத் தொடரலாம்.
ஆனால் புதிதாக ஊழியர்களை ஈர்க்க விரும்பும் நிறுவனங்கள், 1 லட்சம் டாலர் கூடுதல் செலவை சந்திக்க வேண்டியிருக்கும்.
அடுத்த லாட்டரி சுழற்சியில் முதல் அமல்:
வெள்ளை மாளிகையின் factsheet, இந்தக் கட்டணம் அடுத்து வரும் H-1B லாட்டரி சுழற்சியில் தான் அமல்படுத்தப்படும் என்று நான்காவது உண்மையை விளக்கியுள்ளது. இதனால், நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தயார் செய்ய போதுமான நேரம் கிடைக்கும்.
H-1B விசாக்கள் ஆண்டுக்கு ஒரு முறை லாட்டரி மூலம் விநியோகிக்கப்படுவதால், இந்த மாற்றம் 2026 சுழற்சியில் இருந்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த 4 விளக்கத்தை பார்க்கும் போதும் இந்திய ஊழியர்களும், இந்திய ஐடி ஊழியர்களுக்கும் முன்பு கணிக்கப்பட்ட பாதிப்பை விட மிகவும் குறைவு தான். தற்போதைய நிலையில் புதிய விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே 1 லட்சம் டாலர் கட்டணம், இதை எளிதாக சரி செய்துவிட முடியும்.
English summary
Trump H1B Visa Fee Clarified: White House Factsheet Eases Fears—One-Time Charge Hits Only New Applicants
White House Press Secretary Karoline Leavitt unveiled a five-point factsheet on September 20, 2025, demystifying President Trump's H-1B visa proclamation effective today. The $100,000 levy is a one-off petition fee, exempting current holders, renewals, and re-entries—even for those abroad. Targeting solely fresh visas in the next 2026 lottery cycle, it aims to curb program abuse without disrupting ongoing skilled worker flows, offering relief to tech firms amid initial backlash.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக