வியாழன், 11 செப்டம்பர், 2025

அன்புமணி நீக்கம் ராமதாஸ் அதிரடி! மகள் ஶ்ரீ காந்தி உட்பட பாமக நிர்வாக குழு உறுப்பினர்கள் 15 பேரும் எதிர்ப்பு!

 மின்னம்பலம் -vanangamudi  : பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கிய டாக்டர் ராமதாஸ் முடிவுக்கு அவரது மகள் ஶ்ரீ காந்தியை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவினர் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடவில்லை என்பதால் அன்புமணியை ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது சரியா?    என்கிற சலசலப்பு எழுந்துள்ளது.
பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவரான டாக்டர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) அறிவித்தார். 


பாமகவுக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டதாகவும் அவரிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டும் பதிலளிக்கவில்லை; 
அதனால் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என ஏற்கப்பட்டு அவர் பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதனிடையே, அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கும் ராமதாஸ் முடிவுக்கு பாமகவின் நிர்வாகக் குழுவில் உள்ள 22 பேரும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை; அவர்கள் 22 பேரும் இந்த முடிவுக்கு ஆதரவாக கையெழுத்திட தயக்கம் காட்டியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பாமகவின் நிர்வாகக் குழுவில் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஶ்ரீ காந்தியும் ஒரு உறுப்பினராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்கவே ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் காந்தி.

அதே நேரத்தில் பாமகவில் இன்னொரு தரப்பினர், பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழுதான் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பியது; அதற்கு அன்புமணி பதில் தரவில்லை. ஒரு முறைக்கு 2 முறை அவகாசம் கொடுத்தனர்; அதற்கும் அன்புமணி பதில் தரவிலை.. இதனால் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என ஏற்றுக் கொண்டு அவரை நீக்குவதாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இதுவே போதுமான நடவ்டிக்கைதான்.. நிர்வாக குழு ஒப்புதல் எல்லாம் தேவையில்லை என்கின்றனர்.

கருத்துகள் இல்லை: