சனி, 13 செப்டம்பர், 2025

இலங்கையின் இறக்குமதி கொள்கைதான் மிகப்பெரிய ஊழல்! அள்ளிக்கோ அள்ளிக்கோ அள்ளிக்கோ

  ராதா மனோகர் :  212,302 Sri Lankan migrant workers brought $5.11 billion in the first eight months of 2025!
2025 முதல் எட்டு மாதங்களில் 212,302 புலம் பெயர் இலங்கையர்கள் குறிப்பாக மத்திய கிழக்கு பணியாளர்கள் 5.11 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்!
இதைவிட புலம் பெயர் இலங்கை மக்கள் நாட்டுக்கு வந்து போய்க்கொண்டு இறைக்கும் அந்நிய செலாவணியின் கணக்கு இதைவிட பல மடங்கு இருக்க கூடும். 
இப்படி பெரும் தொகையாக  வரும் அந்நிய செலாவணியை அரசு எப்படி செலவு செய்கிறது?
 சொகுசு வாகனங்கள் போன்ற வெறும் ஆடம்பர  பொருட்களின் இறக்குமதிக்கு  பெருவாரியாக வழங்குகிறார்கள் 
மறுபுறத்தில் உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய கோழி முட்டை கருவாடு உப்பு போன்ற பொருட்களையு இறக்குமதி செய்வதிலும் வீண் விரயமாக்குகிறார்கள்!
இறக்குமதியாளர்களும் உள்ளூர் உற்பத்தியை பாதிக்க கூடிய அளவு வகை தொகை இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளை இலாபம் ஈட்டுகிறார்கள்


இறக்குமதி அனுமதி என்பது இலகுவாக கிடைப்பதில்லை
கொடுக்க வேண்டியர்களுக்கு கொடுத்துதான் இந்த மாபியாக்கள் காரியமாற்றுகிறார்கள்!

பிற்சேர்க்கை 
உதாரணமாக - கனடாவில் பால்மா தடை செய்யப்பட பொருள். ஏனெனில் உள்ளூர் பால் பண்ணைகளின் நலன் கருதி இந்த தடை நீண்ட காலமாக உள்ளது 
நமது தமிழ் கடைக்காரர்கள் மட்டும் வழமை போல அங்கோர் நிடோ லக்ஸ்பியரே போன்ற பால்மா வகைகளை இலங்கையில் இருந்து கடத்தி கொண்டுவந்து விற்கிறார்கள் 
புலம்பெயர் கடைக்காரர்கள் இது போல வேறு பல தடை செய்யப்பட்ட பொருட்களையும் கடத்தி கொண்டுவந்து விற்கிறார்கள் (உதாரணம் இலங்கை சாரயம்)
வேறு பொருட்களுக்குள் மறைத்து வைத்து இந்த கடத்தல் வியாபாரம் நடக்கிறது 
இலங்கையில் உள்ளூர் பால் உற்பத்தியாவது புடலங்கையாவது.
இலகுவாக கிடைக்கும்  அந்நிய செலாவணியை இறக்குமதியாளர்களுக்கு  வாரி வாரி வழங்கி பால் பவுடர்களை  இறக்குமதி செய்கிறார்கள். கமிஷன் கமிஷன் கமிஷன்    

கருத்துகள் இல்லை: