வெள்ளி, 12 செப்டம்பர், 2025

7 முறை அபார்ஷன்.. சீமான் மீது விஜயலட்சுமி தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை.. ஒரே பரபரப்பு

 tamil.oneindia.com - Hemavandhana : சென்னை: நடிகை விஜயலட்சுமி கூறிய புகாருக்கு எதிராக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கானது, இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.. மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற விஜயலட்சுமி  கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இன்றைய தினம் இந்த விசாரணையை நடத்த உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், பிறகு தன்னுடைய கர்ப்பத்தை 7 முறை கலைத்து ஏமாற்றியதாக பிரபல நடிகை விஜயலட்சுமி , சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகை விஜயலட்சுமி தந்த புகார்



கடந்த 2011ல் போலீசில் இந்த புகாரை நடிகை விஜயலட்சுமி தந்திருந்தார்.. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கிற்கு எதிராக, சென்னை ஹைகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் மீது, 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, கடந்த பிப்ரவரி 21ம் தேதி அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
சீமான் அப்பீல்

இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் சீமான் அப்பீல் செய்தார். இதை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அமர்ந்து பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது. மேலும், அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சமரசத்துக்கு தயாராக இல்லை என்று நடிகை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்குப் பிடித்த இடைக்காலத் தடையை 4 வாரங்களுக்கு நீடித்து உத்தரவிட்டிருந்தார்.

சுப்ரீம் கோர்ட்

இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை கோரிக்கை விடுத்திருந்தார்.. அதன்பிறகு இந்த வழக்கின் விசாரணையும் நடக்கவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கை பட்டியலிட்டு விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, சீமான் தரப்பு வழக்கறிஞர் சுப்ரீம்கோர்ட்டில் கோரிக்கை வைத்தார்.. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செப்டம்பர் 12ல் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். எனவே இன்றைய தினம் சீமான்- விஜயலட்சுமி  வழக்கு விசாரணை நடக்க உள்ளதாக தெரிகிறது.
விரைவில் தேர்தல்

விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சீமான் மீது விஜயலட்சுமி   தொடரப்பட்ட வழக்கு இந்த வழக்கானது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வழக்கின் தீர்ப்பு நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் அரசியல் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவதால், அரசியல் தரப்பிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணிவருகிறது.

கருத்துகள் இல்லை: