திங்கள், 8 ஜனவரி, 2024

கலைஞர் நூற்றாண்டு விழாவில் சொதப்பல்.. காலியான சேர்களை பார்த்து பேசிய ரஜினி:

 தினமலர் : சென்னை: கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ‛கலைஞர் 100' நிகழ்ச்சியில் ரசிகர்கள் குறைவாகவே பங்கேற்றனர்.
 குறிப்பாக முக்கிய நடிகரான ரஜினி பேசும்போது கூட காலி இருக்கைகளே தென்பட்டன. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர்.



நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், கன்னட நடிகர் சிவராஜ் குமார் தவிர யாருமே வரவில்லை. முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு மக்களும், திரைப்பிரபலங்களும் வராமல் சொதப்பல் நிகழ்ச்சியாக மாறியதற்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் எனக் சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் பொறுமை இழக்கும் அளவிற்கு நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுவாக நடிகர் ரஜினி பேசும்போது ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள். ஆனால் இம்முறை ரஜினி பேசும்போது முழுவதும் நிசப்தமே நீடித்தது. காலி இருக்கைகளுக்கு முன்பு மேடையில் ரஜினி பேசுகையில் சொற்ப எண்ணிக்கையிலான ரசிகர்களே கவனித்தனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் வருகையும் குறைவாக இருந்தது. ‛கலைஞர் 100' நிகழ்ச்சி சிறப்பாக அமையவில்லை என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை: