vikatan.com : தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முறையாவது அங்கே வென்று டெல்லிக்குப் போய்விட வேண்டுமென துடியாய்த் துடிக்கிறாராம். யாருடன் களம் கண்டால் டெல்லி விஜயம் சாத்தியமாகும் என்று சர்வே செய்து, ‘பா.ஜ.க வேஸ்ட்...
அ.தி.மு.க-தான் பெஸ்ட்’ என்று முடிவெடுத்துவிட்டாராம். இந்த நேரம் பார்த்து தேவேந்திர குல வேளாளர் சமூக விவசாயிகள் இருவரை இழிவுபடுத்தும் வகையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் கிளம்ப, இதைச் சாக்கிட்டு பா.ஜ.க-வை அடித்தாட ஆரம்பித்துவிட்டாராம் கிருஷ்ணசாமி. ‘திருச்சி வந்த பிரதமரைச் சந்திக்க அழைப்பு வந்தும், அதையும் நிராகரித்து பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதைச் சொல்லாமல் சொல்லிவிட்டார் கிருஷ்ணசாமி’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கடுப்பான கமலாலயத் தலைவர், தனது வார் ரூம் மூலமாக கிருஷ்ணசாமியை ‘அட்டாக்’ செய்யும்படி உத்தரவிட்டிருக் கிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக