புதன், 27 டிசம்பர், 2023

மலையக தமிழரா இந்திய தமிழரா? அடையாள சிக்கலின் பின்னணியில் இந்திய ரோ RAW அமைப்பு?

 பெருமாள் கணேசன் : இந்திய தமிழர்கள் இலங்கைக்கு பதிவில் வந்தது 1817 களில் அவர்களை முதன்முதல் பணிக்கமர்த்தப்பட்டது கொழும்பில். இன்றும் அவர்களின் சந்ததி நீள்கிறது மலையில் செறிவாக வாழ்வது ஒரு அதிகாரம் என சிலர் தலைகீழாக ஆடுகிறார்கள் இன அடையாளச் சொல்லை அழிக்க. யாரோடு கூட்டு எனில் பூர்வீகத்தமிழருக்கே அதிகாரம் கொடுக்க மறுக்கும் இனவாதிகளுடன்

Manju Ganesh Thevar : தமிழர்கள் பன்னெடுங்காலமாக நாவல்தான் என்கிற இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர்.பாண்டிய,சேர சிங்கள மன்னர்களுடன்,நட்பும் மண உறவும் உண்டு. பிற்கால சோழர்கள் காலத்தில் இலங்கையி்ல் உண்டு. மலையகத் தமிழர்கள்,கிழக்கிந்திய கம்பனி இலங்கையை கைப்பற்றிய பிறகு,தமிழர்களை மலைப்பகுதிகளில் குடியமர்த்தி வனங்களை,எஸ்டேட்டுகளாக மாற்றினர்.மகாராணி விக்டோரிய காலத்தில் காலனி ஆட்சியில் இலங்கை சென்னை மாகாணத்தின் தொடர்ச்சியாகத்தான் இலங்கையை பிரிட்டிஷ் அரசு நிர்வகித்து.
சங்க காலம் தொட்டு தமிழர்கள் இலங்கையில் ஆட்சி,நிர்வாகம்,வணிகம் செய்துள்ளனர்.

Sundar Sundaralingam : I am agreeing with your point. People should move out of the estate and live independently, if they want let them work in the estate



Perumal Ganeshan  : Sundar Sundaralingam But some so called leaders pretend to protect the rights by changing the identity as Malayaga thamilar which would not be accepted as it is a cunning concept that does not match since Indian origins are everywhere in the country having their proud identity as Indians origine Tamils
I hope this new screwed identity would fade up in 30 or 40 years and the culture would not be Tamil for this isolated people in the hills
but Sinhala as they will be melted what has already occurred in Negombo ,Colombo Ratnapura Galle Matara as they are isolated of the Tamils and no school cultural interactions and exposure.
 this is a program that would simply ignores people living in North , East and West that are from Hills and directly from India even before the arrival to hills as workers.
They want to disconnect the Tamils' rich culture and customs of India to make these people culturally inferior to Majority poeple.This is secret plan.

Shadagopan Ramiah  :  Sundar Sundaralingam இன்று 3 லட்சத்தி 80 ஆயிரம் பேர்கள் மட்டும்தான் தோட்டத்திற்குள் வாழ்கிறார்கள். ஏனையவர்கள் தோட்டத்துக்கு வெளியே வந்து விட்டார்கள் . அவர்கள் தொடர்ந்தும் பெருந்தோட்ட தமிழர்கள் இல்லை ...

Shadagopan Ramiah : நாங்கள் 18 லட்சம் பேர் மலை நாட்டில் மலையகத்து தமிழர்களாக வாழ்கிறோம். இந்தியர்கள் இன்று தம்மை கூறிக் கொள்பவர்களுக்கு இலங்கையில் எந்த உரிமையும் கிடையாது
அவர்கள் கிளிநொச்சியிலிருந்து தலைகீழாக ஆடிக்கொண்டிருப்பதில் எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை.
இந்தியர் என்று சொல்லிக்கொண்டு இந்தியாவுக்கு வேவு பார்ப்பதும் இலங்கையில் காணி உரிமை கோறுவதும் தேச துரோக குற்றம்..

Perumal Ganeshan : Shadagopan Ramiah கண்ணியமா பேசவேணும்
யார் வேவுபார்ப்பது?
 உங்களுக்கு கவலை இல்லைங்கிறது எங்களுக்கு தெரியும் .
நான் 10 ஏக்கர் திலத்துக்கு சொந்தக்காரன்
இங்கு யாருக்கும் தலை சொறிஞ்சிகிட்டு இருக்கல
காணி வீடுன்னு இந்த நாட்டின் உரிமையோடான குடிமகன்
காசு வாங்கிகிட்டு சமூகத்தை பிழையான வழியில் போகச்சொல்லும் புல்லுருவி இல்ல
இங்க கிளிநொச்சில இருப்பவர்கள்.
நீங்கதான் அதை செய்றீங்க
கருத்தை கருத்தால் மோதுங்க.அதுக்கு வக்கில்ல அடுத்தவனின் சொந்த விடயங்களை இழுக்கிறீங்க
எனக்கு நில உரிமை இல்லாதொழிக்க நீங்கள் யார்?
கள்ளத்தோணியா வந்து இந்த நாட்டு பிரசையாகியவர்கள் கெளரவமா வாழ்றாங்கள்.
நாங்கள் அது சிறப்பான வாழ்வும் தான்
ஆனா கழுத்தில் எஜமானனின் பட்டி அணிந்திருக்கும் அடிமைகளல்ல சுதந்திரமாக உள்ளவர்கள் எவரின் கையையும் எதிர்பார்க்கல ஒன்று என்னோடு கண்ணியமான வார்த்தைகளை வைச்சுக்கொள்ள வேணும் திரு சடகோபன் ...

Jeevan Sha  : Perumal Ganeshan இந்திய தமிழர் இந்திய தமிழராக இருந்து விட்டுப் போகட்டும்
யார் வேண்டாமென்று சொன்னது?  நாங்கள் மலையகத்தமிழர்கள் சுமார் 7%மாக இந்தநாட்டில் வாழ்கிறோம் எங்களுக்கான அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள எமக்கு உரிமையுள்ளது
சலுகைக்கும் பணத்துக்கும் சோரம் போன சிறு கும்பல் தங்களுக்கு தேவையான இந்திய அடையாளத்தை திணிப்பதை மலையகத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
கிளிநொச்சியிலும் மிக அதிகமானவர்கள் தங்களை மலையகத்தமிழர்கள் என்று தான் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள்
இன்று மட்டுமல்ல புலிகளின் காலத்திலும் தங்களை மலையகத்தமிழர்கள் என்று தான் அடையாளப்படுத்திக்கொண்டார்கள்
இங்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் கருத்துக்களை விட இலட்சக்கணக்கான மக்களின் விருப்பு முக்கியமானது சிறு குழுவினர் இந்தியர்களாக இருந்துவிட்டுப்போவதில் யாருக்கும் பிரச்சினை இல்லை

Perumal Ganeshan : Jeevan Sha நீங்கள் திணிக்கிறீர்களா நாங்கள் திணிக்கிறோமா சலுகைகளுக்கும் பணத்துக்கும் சோரம்போனது நீங்களா நாங்களா?
 அதைவிட இப்படி மற்றவர்களின் மனதை புண்படுத்தி உங்கள் கபட நாடகத்தை நிறைவேற்ற வேண்டியதில்லை.
 நாங்கள் இந்திய வம்சாவளியை தொடர்ந்து பேணுவோம்
ஈனப்பிறவிகளாக மற்றவர்மீது அவதூறு சொல்லி திரியவேண்டாம்
சடகோபன் சொன்னார் இந்தியாவுக்கு வேவு பார்ப்பதாக இது தேவையா?
 ஒரு கருத்தை மற்றவர் ஏற்காவிட்டால் அவர்களை அபாண்டமாக பழி சொல்வது,
 எங்களோடு தொடர்பை துண்டிக்கச் சொல்வது,
 பணத்துக்கும் சலுகைக்கும் சோரம்போனவர்கள் என்பது,
 இவை நாங்கள் எண்ணிப்பார்க்காத அவதூறுகள்.
ஒன்றை மனதில் வைக்கவும் கண்ணியமாக தொடர்பாடல் செய்யவும்
நான் ஒருவரையும் பழிசொல்லி கருத்துக்களை சிதைக் கவில்லை
கருத்துக்கள் மட்டும் வைங்கள் அல்லது விடுங்கள் வக்கில்லாமல் நீர் பொய்ப்பிரசாரம் செய்யாதீர்
ஜீவன்சா நாங்கள் தனமானத்தோடும் எங்கு வாழ்ந்தாலும் எங்கள் அடையாளத்தை காத்தும் வரும் வரும் மறவர்கள்
உங்களைப்போல பக்கத்து வீட்டானுக்கு பயந்து உண்மை அடையாளத்தை மறைக்கும் கோளைகள் அல்ல. வாயை ஒழுங்கா வைச்சுக்கொள்ளும் தனி மோதல்களை ஏற்படுத்தாதிரும்

Jeevan Sha : Perumal Ganeshan பேசத்தெரியாது நீங்கள் ஈனப்பிரவியா?நாங்களா?
ஆசிரியர் சமூகத்தை உருவாக்கும் சிற்பி என்பார்கள்
ஆனால் இவ்வளவு கிழிறங்கி பேசக்கூடியவர் என்று தெரிந்திருந்தால் உங்களோடு கருத்தாடலுக்கே வந்திருக்கமாட்டேன்
திருடனுக்கு பார்ப்பவர்களை எல்லாம் திருடனாகத்தெரியுமாம்
சமூகத்தை காட்டி பணம் வாங்கிய கூட்டத்திற்கு மற்றவர்களின் மீதான பார்வையும் அப்படித்தான் இருக்கும் இன்றுடன் உங்கள் நட்பில் இருந்து விலகிச் செல்கிறேன்
என்னுடைய பெற்றோரும் ஆசிரியர்களும் என் சமூகமும் என்னை நாகரிகமாக பேசுவதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்
அவர்களே அடித்தால் திருப்பி அடிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். நன்றி

Shadagopan Ramiah :Perumal Ganeshan நான் வேவு பார்ப்பவர்கள் என்று சொன்னது,
 நாங்கள் இந்திய வமசாவளி கூட்டத்தினர் என்று கூறிக்கொண்டு அதனை திரும்பத் திரும்ப சொல்லி மலையக தமிழ் மக்களை " ரோ " என்ற அமைப்பிடம் பணம் வாங்கிக் கொண்டு அடகு வைப்பவர்களை!
இந்த நாட்டில் எல்லா உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு நாங்கள் இந்தியர்கள் என்று மார்க்கெட்டுவது தேசப்பற்றற்ற செயல்

Perumal Ganeshan :  Shadagopan Ramiah இதை நீங்கள் எனக்கு எழுதி இருக்க கூடாது நான் உங்கள் அணியைப்பறி கேவலமாக எதுவும். இதுவரை எழுத வில்லை
பலர் பலவற்றைக் கூறி இருக்கிறார்கள் உங்கள் அணி பற்றி அவை என் கருத்தாடலுக்கு அவசியமற்றவை எனவே தனித்தாக்குதலை வலிய நான் இழுக்க வில்லை
நாம் பொருதுவது தனிப்பகையாக வரவேண்டியதல்ல
என்னோடு பேசவேணாம் என்றார் ஒருவர்
சீன்னப் பிள்ளையாக அவரோடு இனி பேச மாட்டேன்
அவர் எனக்கு மதிப்புடையவராக இருந்தவர் ஜீவன்சா மீண்டும் சோரம்போவது என்று அற்பத்தனமாக எழுதுகிறார் இவை கருத்தியல் வறுமை


Nallusamy Ammasie : நான் இந்திய வம்சாவளி தமிழ மகன்.

Perumal Ganeshan : சிறுகும்பல் இந்தியாவுக்கு சோரம்போனவர்களாம் ஒரு செறிவாக வாழ்வதால் இவ்வளவு திமிர்அப்படி எண்டால் பெரும்பான்மை வாதத்தினடிப்படையில் சிங்கள மக்கள் உங்களை ஒதுக்கிவைப்பதும் சரிதானே உங்கள் ஒரே சமூகத்தின் அபிலாசைகளை புறந்தள்ள எடுக்கும் முயற்சியின் அடிப்படையே ஒரு பெரும்பான்மை அல்லது செறிவு

வரதன் கிருஸ்ணா : அப்போ " கண்டியின் கடைசி மன்னன் ராஜசிங்கனும் இந்திய வம்சாவழி என்பதால் அவரையும் சேர்த்துக்கொள்வோமா "

Shadagopan Ramiah : வரதன் கிருஸ்ணா இலங்கையின் முதலாவது தமிழ் மன்னன் விஜயன் என்பவனும் இந்திய வம்சாவளி தான் அவனையும் சேர்த்துக் கொள்வோம்

Perumal Ganeshan  : திரு சடகோபன் நீங்கள் லோயர்வேலையை கொலைகாரனை காப்பாற்ற வைச்சுக்கங்க இது உள்ளதுக்குள் எமக்கு இயல்பாக உள்ள அடையாளம் நீங்கள் வீட்டில் சிங்களம் பேசத்தொடங்கிவிட்டவர்களை மீட்கமுடியாத வக்கற்றவர்கள் பெற் றதாயை இல்லை என்பது உங்களுக்கு பெருமை.


Shadagopan Ramiah : Perumal Ganeshan நான் ஒரு கிரிமினல் லோயர் இல்லை அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் நான் ஒரு (சிவில் ) குடியியல் சட்டத்தரணி. சட்டத்தரணிகள் கொலைகாரர்களுக்காக வாதாடுவதெல்லாம் தென்னிந்திய சினிமா படங்களுக்கு பொருந்தும் அப்படி செய்வது நடைமுறை சாத்தியமில்லை எங்கள் வீட்டில் யாரும் சிங்களம் பேச மாட்டார்கள் . நான் ஐந்து சிங்கள நூலை தமிழுக்கு மொழி பெயர்த்து இருக்கிறேன். அவை அனைத்துமே சிங்களவர்கள் எழுதிய மலையக தமிழர் பற்றிய வரலாற்று ஆவணங்கள் . அவற்றில் ஒன்றைக் கூட நீங்க படித்திருக்க மாட்டீர்கள் என்பது உங்களது கருத்துக்களில் இருந்து விளங்குகிறது.
அந்த நூல்களில் எல்லாம் அவர்கள் எந்த அளவுக்கு இந்தியர்களை வெறுக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக கண்டியின் கடைசி மன்னன் விக்ரமின் ராஜசிங்கன் எந்த அளவுக்கு சிங்களவர்கள் மீது கொடுங்கோன்மை செலுத்தினான் என்பதிலிருந்து இந்த வன்மம் முனைப்பு அடைகிறது. இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. எமது தாயகம் இந்தியா இல்லை . அன்னை தமிழகம்.

Perumal Ganeshan : அடிசக்க அந்த வெள்ளை எழுதிய புத்தகத்துக்கு நீங்கள் உங்கட பேர்வைச்சு நித்தியானந்தன் சேரோட முறுகினீங்க அதை நான் முதலே வாசிச்சிட்டன் திரு தேவராஜ் முன்னாலமைச்சர் எழுதிய புத்தகங்களை திரு சரவணன் எழுதிய புத்தகங்களை ஒன்றையும் நீங்கள் வாசிச்சிருந்தா இதில் உள்ள அறம் மறம் எல்லாம் புரிய திருக்கும். நீங்கள் வீரகேசரீல தொடங்கின காலம் தொடக்கம் எல்லாம் தெரியும் தேவராஜ் உங்களுக்கு உதவியது பிறகு .... இது எமது கருத்திற்கு அப்பாற்பட்டவை நான் உங்கள் புத்தகங்களை வாசிக்க வேணும் என்று நீங்கள் எப்படி கூறலாம் ? மற்றது சிங்கள மக்கள் வெறுக்கத்தொடங்கியது அனகாரிக தரம்பாலாவைச்ச வேட்டுக்களில் சிங்கள மக்கள் வெறுப்பதுக்காக உங்கள் மொழியை மாற்றிக் கொண்டாலே தீர்வுதானே.?

Sithambaram Drmogan
நாங்கள் n.g.o.வை நம்பியோ கொழும்பு வத்தளையை நம்பியோ அல்லது இந்தியாவுக்கு காவடித்தூக்கும் அரசியலுக்காக சோரம் போனவர்கள் அல்ல
இந்தியா எம்மை கண்டுகொள்ளாத பல சந்தர்ப்பங்கள் உண்டு.
யுத்தக்காலத்தில் மலையக அரசியல்வாதிகளை கொழும்பை வத்தளையை வயிற்றுப் பிழைப்புக்காக வைத்திருப்பவர்களும் உதவவில்லை
இனிமேலும் நாம் யாரையும் எதிர்பார்த்து வாழவில்லை
வடக்கு எங்கள் வாழ்வாதாரம் அதனை மரணிக்கும் வரை ஈழத்தமிழர்களுடன் இனைந்து பாதுகாப்போம்.இந்தியத்தமிழ் எமது வரலாற்று அடையாளம்.எங்களுக்கு எவரும் அரசியல் கற்பிக்கப் தேவையில்லை எம்மை நாமே தீர்மானிப்போம்.

Perumal Ganeshan : Sithambaram Drmogan சுபர்

கருத்துகள் இல்லை: