சனி, 30 டிசம்பர், 2023

ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்து வடிவேலுக்கு திரைபடங்களில் வாய்ப்புக்கொடுக்கக்கூடாது...

May be an image of 1 person and smiling
கார்த்திக் ராமசாமி  :   மாமன்னன் படத்தில் நடித்ததால் விஜயகாந்தாக வடிவேல் ஆகிவிட முடியாததுதான்!
ஆனால் அதற்காக மானங்கெட்டு மண்டியிடலும் ஆகக்கூடாது என்கிற சுயமரியாதை இருப்பதையும் இழந்து விடக்கூடாது என்று உறுதியாக வடிவேல் இருப்பதில் என்ன தவறு கண்டீர்?
சக நடிகராக இருந்தால் எல்லாவற்றிற்கும் சென்றுதான் ஆகவேண்டும் என்கிற சட்டமேதும் இருக்கிறதா? சொல்லுங்கள்!
2011-2021 காலகட்டத்தில் விஜயகாந்தை விமர்சித்தமைக்காக!
திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக வடிவேலுவை பழிதீர்க்க  ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்து வடிவேலுக்கு திரைபடங்களில் நடிக்க வாய்ப்புக்கொடுக்கக்கூடாது!
இம்மியளவுகூட திரையில் வடிவேலின் முகம் தெரியக்கூடாது என கங்கணம் கட்டி!
வடிவேலின் திரைவாழ்க்கையை மட்டுமல்ல!
அவருக்கு மனவேதனையை! பொருளாதார இழப்பை தந்ததையெல்லாம் இந்த மடக்கூட்டங்கள் வசதியாக மறந்துவிட்டதேனோ?

அத்தகைய காலங்களில் வடிவேல் மற்றும் வடிவேலின் குடும்பங்கள் எவ்வளவு மனச்சுமையை
 வலியை சுமந்திருக்கும்?
 இதற்கெல்லாம் யார் காரணமாக இருந்தது என்பதையெல்லாம் நேரத்திற்கு தகுந்தாற்போல மறந்தோ மறைத்தோ வருகிற ஈனர்களிடம் எதிர்பார்க்க முடியாததுதான்!
வடிவேலுக்கு இத்தகைய நெருக்கடியை தந்த ஜெயலலிதா தரப்புகளின் கொடூரத்தை கண்டிக்க வடிவேலோடு நடித்த எந்த சக நடிகர்களுமே கண்டித்தார்களா?
குரல் கொடுத்தார்களா? திரையுலகம் சங்கம் ஏதும் கண்டித்ததா?
ஜெயலலிதாவுக்கு அஞ்சியும் விஜயகாந்தை பகைக்கக்கூடாது எனக்கருதியும் வடிவேலை 10ஆண்டுகாலம் ஒதுக்கி வைத்ததை ஏன் நினைத்துப்பார்க்கவில்லை?

சக நடிகர்கள் இறந்த எந்த நிகழ்வுகளுக்கும் வடிவேல் செல்லவில்லை என்பதுதான் பிரதான குற்றச்சாட்டு! இறந்த நடிகர்களாகட்டும்! இருப்பவர்களாகட்டும்! அன்றைக்கு வடிவேலுக்கு ஏற்பட்ட நிலைமைக்கு ஆறுதல் சொல்லக்கூட திருவாய் துடிக்க வில்லையே! கால்கள் நகரவில்லையே? இதெல்லாம் சாதாரணமானதா? மடப்பயலுகளா?

எதை எதோடு ஒப்பீடு செய்வது?
10வருஷ திரைவாழ்க்கை நஷ்டம்! யாரால்? எதனால்? என்பதையும் பட்டியலிடுங்கள் முட்டாள்களே!

ஒருவருடைய இறப்புக்கு போவதும் போகாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையும் கூட.
 இதிலே நீங்கள் யார் வடிவேலுவை கண்டிக்க?
விஜயகாந்த் நல்ல மனிதர்தான்!
அதற்காக எல்லோருமே அங்கே செல்லத்தான் வேண்டுமென்கிற சட்டமேதும் உள்ளதா?
எழுத எதுவுமின்றி விஜயகாந்த் மரணத்தை கருவாக்கி வடிவேலை திட்டுவது மனித நாகரீகம் அற்ற செயல்!

முதலில் உன்னுடைய பகையாளி உன் வீட்டு சாவுக்கு வருவார்களா?
 என்பதை சிந்தித்து பார்?
மறைந்ததிற்கு அஞ்சலி செலுத்தி விட்டோம்!
அதற்காக அவன் வரவிவில்லை! இவன் வரவில்லை என மூளைக்குள் இருந்து கண்ணாடியில் வீசுவதெல்லாம்! பதிலடிகளையும் பலமாகவே எதிர்கொள்ள நேரிடும்!
வடிவேலை நொட்டாமல் விளையாடுங்கள்!

கருத்துகள் இல்லை: