புதன், 13 டிசம்பர், 2023

ஊர்காவற்றுறை: ஆலயத்தில் நகைகள் பொற்காசுகளை திருடிய பூசாரி கைது!

ilakkiyainfo.com : ஊர்காவற்றுறை: ஆலயத்தில் இருந்த நகைகள் மற்றும் பொற்காசுகளை திருடிய பூசாரி கைது!
ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீவகம் .ஊர்காவற்றுறை சுருவில் ஐயனார் கோவில் என அழைக்கப்படும்,  ஸ்ரீ பூர்ணா புஸ்கலாதேவி சமேத ஸ்ரீ அரிகரபுத்திர  ஐயனார் ஆலய மூல விக்கிரமான ஐயனார் விக்கிரம் , பரிவார மூர்த்திகளான பிள்ளையார் , முருகன் – வள்ளி தெய்வானை , நவக்கிரங்கள் , வைரவர் , நந்தி – பலி பீடம் , கொடி தம்ப பிள்ளையார் , சண்டேஸ்வரர் உள்ளிட்ட விக்கிரகங்களின் கீழ் இருந்த யந்திர தகடுகளை ஆலய பூசகர் திருடி விற்று வந்தார் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பூசகர் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதியே ஆலயத்திற்கு பூசாராக நியமிக்கப்பட்டார் என்றும் , தினமும் பூஜை வழிபாடுகளை செய்து வந்த போதிலும் , விக்கிரகங்களின் கீழ் வைக்கப்படும் யந்திர தகடுகளை , சந்தேகம் ஏற்படாதவாறு , விக்கிரகங்களை இருப்பிடத்தில் இருந்து கிளப்பி அவற்றினை திருடி வந்துள்ளார் எனவும் , அவ்வாறு திருடப்பட்ட யந்திரதடுகள் சுமார் 10 பவுண் எனவும் ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட பூசாரி போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். 



கருத்துகள் இல்லை: