புதன், 13 டிசம்பர், 2023

பாஜகவின் 3 மாநில வெற்றிகள் ..மாநிலங்களின் தனித்தன்மைக்கு நெருக்கடி? ஒன்றிய கோட்பாட்டுக்கு சவால்?

tamil.oneindia.com - Shyamsundar I ;  டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது.
மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.
மேலும் சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபரா வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் கையில் இருந்த 33 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளது.

3 மாநிலங்களில் வெற்றி: இதில் 3 மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 3 மாநிலங்களில் வென்றதும் பாஜக முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு பாஜகவில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல் மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது. யாதவ் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய பாஜக அதிரடி காட்டி உள்ளது. முக்கியமாக சிட்டிங் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஓரம் கட்டப்பட்டு உள்ளார். அதேபோல் சத்தீஸ்கர் மாநில புதிய முதல்வராக பழங்குடியினத் தலைவர் விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

முதல்வர் வேட்பாளர்கள்: இதில் 3 மாநிலங்களிலும் முதல்வராக டெல்லி பாஜக மேலிடம் யாரை தேர்வு செய்யும் என்ற கேள்வி நிலவி வந்தது. மாநிலங்களில் பாஜகவின் முகமாக இருக்கும் நபர்களை ஒதுக்கிவிட்டு புதிய முகங்களை பாஜக கொண்டு வரும் முடிவை பாஜக எடுத்துள்ளது. மாநில அளவில் பாஜகவிற்கு என்று முகங்கள் உருவாவதை மோடியோ, டெல்லி மேலிடமோ விரும்பியதே இல்லை. உதாரணமாக கர்நாடாகாவில் பாஜகவின் முகமாக எடியூரப்பா இருந்தார்.

அவரை ஒதுக்கிவிட்டு பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார் . அந்த வகையில்தான் தற்போது ராஜஸ்தான் தேர்தலில் வென்ற நிலையில் அம்மாநில முகமான வசுந்தரா ராஜேவை டெல்லி மேலிடம் ஒதுக்கி உள்ளது. அதற்கு பதிலாக ராஜஸ்தானில் புதிய முகமான முதல் முறை எம்.எல்.ஏவான பஜன்லால் சர்மா முதல்வர் ஆகி உள்ளார்.

மத்திய பிரதேசம்: இன்னொரு பக்கம் மத்திய பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சவுகான் மாநில முகமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். தனக்கே போட்டியாக சிவராஜ் சிங் சவுகான் வரலாம் என்பதால் அவரை ஓரம்கட்ட மோடி பிளான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பாராத விதமாக சீனியர் லீடர்களை ஓரம் கட்டிவிட்டு மோகன் யாதவை முதல்வராக தேர்வு செய்தது.

சத்தீஸ்கர்: இது போக சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் டாக்டர் ராமன் சிங், அருண் சவ் துர்க். எம்பி விஜய் பாகேல் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் மற்றும் பாஜக பொதுச் செயலாளர் ஓபி சவுத்ரி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக இருந்தனர். அவர்கள் எல்லோரும் ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். தன்னை தவிர பாஜகவில் மாநில அளவில் வலுவான முகம் இருக்க கூடாது என்பதில் மோடி உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

கருத்துகள் இல்லை: