திங்கள், 4 டிசம்பர், 2023

1,37,000 தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு .. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மதுரை நீதிபதி


ராதா மனோகர்
  :  ஸ்ரீமா -  சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீமா இந்திரா காந்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா 6 இலட்சம் பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி இருக்கவேண்டும்
ஆனால் இந்தியா இதுவரை 4.6 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கி உள்ளது ’
நன்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
33 ஆண்டுகளாக அகதிகளாக இருந்து இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 70 வயது முதியவருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
"இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு லட்சம் பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டிய  கடமை உள்ளது
ஆனால்  இன்றுவரை 4,61,639 பேர்களுக்கு மட்டுமே  இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது"!

அண்மையில் மதுரையில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதுபற்றி குறிப்பிடுகையில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51வது பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் கையாள்வதில் உடன்படிக்கைக் கடமைகளுக்கு மதிப்பளிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்
இதன் படி இன்னும் 1,37,000 பேர்களுக்கு இந்தியா குடியுரிமையை வழங்க வேண்டும்
.
இந்தியக் குடியுரிமை கோரி டி கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை பிறப்பிக்கும் போதே நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் அகதிகள் என்று அழைக்கப்பட்ட 70 வயது முதியவர், கணேசனின் அந்தஸ்தை இந்திய அரசு அங்கீகரிக்கும்படி உத்தரவிட்டார்  நீதிபதி சுவாமிநாதன்

பிற்குறிப்பு    :  நவம்பர் 9, 1988 இலங்கை மலையக மக்களுக்கு ஒரு  வெற்றி நாள்.
மலையக மக்களின் குடியுரிமை பிரச்சனைக்கு முழுமையான தீர்வு வந்தது
ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனவின் அரசு  "நாடற்ற நபர்களுக்கு (சிறப்பு
விதிகள்) குடியுரிமை வழங்குதல் சட்டம்" என்ற தலைப்பில்  ஏழு விதிகள்
கொண்ட மசோதாவை நிறைவேற்றியது,
இந்த சட்டத்தின் மூலம் இந்த  தேதியில் இருந்து சட்டப்பூர்வமாக இலங்கையில்
வசிக்கும்  அத்தனை  நாடற்ற இந்திய வம்சாவளியினருக்கும்   இலங்கை
குடியுரிமையை வழங்குவதாக்  அறிவித்தது.

முன்பு எழுதப்பட்ட  ஒப்பந்தம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தமுள்ள
469,000 பேரில் 233,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது.

அதிகாரவர்க்கத்தின் மீது தொண்டமான் கொண்டுவந்த தொடர்ச்சியான
அழுத்தங்களாலும், நிர்வாகத்தின் சிறப்பான முயற்சியாலும் இந்த
எண்ணிக்கையிலான மக்களுக்கும்  கூட குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்திய வம்சாவளியினரின்  பதிவு ஆணையர் துறையை மறுசீரமைத்து மேலும்
பணியாளர்களை நியமித்தார். அவர் நிர்வாக மற்றும் நேர்காணல் நடைமுறைகளை
மறுசீரமைத்தார்.

இ தொ கவினர் நேரடியாகவே தோட்டங்களுக்கு   சென்று
 விண்ணப்பதாரர்களை விசாரணைக்கு முகம் கொடுக்கச் செய்தனர். பல சிரமங்கள் இருந்தன.
அவற்றுள் மிகப் பெரியது விண்ணப்பதாரர்களைக் கண்டறிவதில் உள்ள பிரச்சினையாகும்,

ஏனெனில், இந்த விண்ணப்பங்கள் கால் நூற்றாண்டுக்கு முன்னர் செய்யப்பட்டன,
மேலும் விண்ணப்பதாரர்களில் சிலர் இறந்துவிட்டனர், மற்றவர்கள் தோட்டங்களை
மாற்றியுள்ளனர் அல்லது வடக்கில் வவுனியா போன்ற நாட்டின் பிற பகுதிகளுக்கு
இடம்பெயர்ந்துள்ளனர். .

ஒரு சந்தர்ப்பத்தில், களுத்துறையில் உள்ள ஒரு தோட்டத்தில், 100 க்கும்
மேற்பட்ட குடும்பங்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இலங்கை அரசு குடியுரிமை வழங்குவதை தாமதப்படுத்துவதாக கூறி திரு தொண்டமான்
ஜூன் 1 முதல் மூன்று நாள் பிரார்த்தனை பிரச்சாரத்தை நடத்த முடிவு
செய்தது.
பிரார்த்தனை என்பது ஒரு வேலை நிறுத்தம் என்பதாகும் ..
வேலை நிறுத்தம் செய்யவதற்கு தடை இருந்தது . எனவே பிரார்த்தனை என்ற
ஆயுதத்தை திரு தொண்டமான் கையிலெடுத்தார் .
உலக அரங்கில் ஏற்கனவே செல்வாக்கை இழந்து கொண்டிருந்த இலங்கை அரசு இந்த
பிரார்த்தனை போராட்டத்தால் மேலும் அதிருப்தியை ஈட்டி கொண்டிருந்தது.

மறுபுறத்தில் வடக்கு கிழக்கில் நடந்து கொண்டிருந்த போரானது மலையகத்து
இளைஞர்களையும் கவருவதாக இலங்கை அரசு பயப்பட தொடங்கியது   
அதில் கொஞ்சம்  உண்மையும் இருந்தது
இதன் காரணமாகவும் மலையக மக்களை இலங்கை அரசு இனியும் ஏமாற்றி கொண்டிருந்தால்
நிலைமை மோசமாகும் என்பது அரசுக்கு தெரிந்தது.

தமிழ் போராட்ட இயக்கங்கள் தேயிலையில் நஞ்சு கலந்திருப்பதாக வதந்தி பரவியது
பல நாடுகள் இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதற்கு அச்சம் தெரிவித்தன.

இந்நிலையில் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு
ஜனாதிபதி ஜயவர்தன, லலித் அத்துலத்முதலி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவை
நியமித்தார்.
உபகுழுவில் தொண்டமான் மற்றும் ஹமீட் ஆகியோர் உறுப்பினர்களாக
இருந்தனர்.
தொண்டமான் பிரார்த்தனை பிரச்சாரத்தை கைவிட்டு ஜூன் 1 ஆம் தேதி
ஜனாதிபதி ஜெயவர்த்தனவை சந்தித்து, நிலுவையில் உள்ள மற்ற பிரச்சனைகளை
தீர்த்து வைக்க ஒப்புக்கொண்டார்.

இலங்கையை பொறுத்தவரை மலையக மக்களின் குடியுரிமை முற்றாக தீர்ந்து விட்டது
ஆனால்  இந்தியா ஒப்பந்தத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட எண்ணிக்கையை இன்னும் பூர்த்தி செய்யவில்லை.

முன்பு முன்னாள் சட்ட அமைச்சர் சுப்பிரமணியம் சுவாமி தமிழகத்தில் இருக்கும் எல்லா இலங்கை தமிழர்களுக்கும் இந்திய குடியுரிமை கொடுத்துவிடுவோம் என்று திரு சந்திரஹாசனிடம் கூறினார்
அதற்கு திரு சந்திரஹாசன் சம்மதிக்கவில்லை
அவர்களுக்கு இலங்கையில் பல சொத்துக்கள் உள்ளன
மேலும் அவர்கள் நிலைமை சீரானதும் இலங்கைக்கு போகவே விரும்புகிறார்கள் என்று தனது விருப்பத்தையே மக்களின் விருப்பமாக கூறி அந்த நல்ல வாய்ப்பை உதறி தள்ளினார்
அன்று தானாக தேடிவந்த வாய்ப்பை தனது அரசியல் அபிலாசைக்காக தூக்கி எறிந்தார் அவர்.

இது பற்றி கூறுவதற்கு இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன.
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட காரணங்கள் சூழ்நிலைகள் பற்றிய
பல செய்திகளை பொதுவெளிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளில் ஒன்றுதான் இது   
மீது கட்டுரைகள் விரைவில் வெளிவரும்

கருத்துகள் இல்லை: