சனி, 1 ஏப்ரல், 2023

ராமேஸ்வரம் தலைமன்னார் .. ராமேஸ்வரம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்துக்கள் விரைவில் அமைச்சர் ஏ வ.வேலு சட்டமன்றத்தில்

 மின்னம்பலம் : இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 10ஆவது நாளான இன்று (ஏப்ரல் 1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானிய கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அத்துறை அமைச்சர் எ.வ.வேலு.
அதில், இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க, ராமேசுவரம் – தலைமன்னார் (50கிமீ), ராமேசுவரம் – காங்கேசந்துறை(100 கிமீ) ஆகிய வழித்தடங்களில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றார்.


“ராமேஸ்வரம் சிறுதுறைமுக பகுதியில் கப்பலணையும் மேடை, பயணிகள் தங்கும் இடம், சுங்கம் மற்றும் குடிமை பிரிவு சோதனை மையங்கள் ஆகிய கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றும் அறிவித்தார்.
பிரியா

கருத்துகள் இல்லை: