ராதா மனோகர் : எனது ஹரியான்வி நண்பர் பற்றி முன்பொருமுறை பதிவிட்டிருக்கிறேன் .
அதன் தொடர்ச்சி இது.
நான் முதலில் அவரை சந்தித்தபோது அவர் தனது தாய் மொழி ஹிந்தி என்று சொல்லியிருந்தார்
இந்தியாவில் எந்த மாநிலம் என்று கேட்டபோது ஹரியானா என்றார்.
அதன் பின் தங்களின் உண்மையான தாய் மொழி ஹிந்திதானா என்று மீண்டும் கேட்டேன்.
அதற்கும் ஆமாம் என்று கூறவே ஹரியானாவில் மாநில மொழி எது என்று கேட்டேன்
ஹரியான்வி என்று அவர் கூறவே அந்த மொழி உங்களுக்கு தெரியாதா என்று மீண்டும் நான் கொக்கி போட்டேன்.
அதை உடனே மறுத்து அதுதான் தந்து மொழி என்றும் வீட்டில் அதுதான் பேசுவோம் என்றும் கூறினாரார்.
இது உரையாடல் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன
தற்போது அவரின் இரு உறவினர்கள் கனடாவுக்கு அரசியல் அடைக்கலம் கோரி வந்துள்ளார்கள் (ஏராளமான தெற்காசியர்கள் தற்போது அரசியல் அடைக்கலம் கோரி கனடாவுக்கு வந்தவண்ணம் உள்ளார்கள்)
அந்த உறவினர்களோடு அவர் ஏதோ ஒரு புரியாத மொழியில் மட்டுமே பேசுகிறார்
எனக்கு ஓரளவு ஹிந்தி புரியும்
இவர்கள் பேசும் மொழி எனக்கு சுத்தமாக புரியவில்லை
இது என்ன மொழி என்று கேட்டபோது இதுதான் எமது ஹரியான்வி மொழி என்றார்.
இதெற்கும் ஹிந்திக்கும்கூட எந்த தொடர்பும் இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லையே என்றேன்.
ஆமாம் கிராமத்தவர்களுக்கு ஹிந்தி தெரியாது ஹரியான்வி மட்டும்தான் தெரியும் என்றார்.
இதை கூறும்பொழு ஒரு அவரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்ததை அவரின் அசட்டு சிரிப்பு வெளிச்சம் போட்டு காட்டியது.
தனது தாய்மொழியை பேசுவதை தரக்குறைவாக கருதும் படி அவருக்கு வகுப்பெடுத்திருக்கிறார்கள் ஹிந்தி வெறியர்கள் .
ஹிந்தி தெரிந்திருப்பது அப்படி என்ன விஞ்ஞான வளர்ச்சியும் கலாசார மேம்பாடும் மற்றும் இதர கல்யாண குணங்களும் கொண்ட மகா மொழியா?
ஒரு அரசியல் ஆதிக்கம் மொழியை கருவியாக கொண்டு மாநில மொழிகளை அடித்து துவம்சம் பண்ணிக்கொண்டு வந்திருக்கிறது?
இந்த நண்பர் தனக்கு ஆங்கிலம் பிரெஞ்சு ( வசிப்பது கனடாவின் பிரெஞ்சு மாநிலம்) தெரியாததை இட்டு எந்த கவலையும் கொள்ளவில்லை . ஆனால் ஹிந்தி தெரியாது என்றால் அது வெட்கப்பட வேண்டிய விடயம் என்று கருதுகிறார்
அந்த அளவுக்கு தாழ்வு மனப்பான்மையை ஹிந்தி பேசாத மாநில மக்களின் உள்மனதில் விதைத்து விட்டிருக்கிறார்கள் சங்கிகள்.
இதில் ஹிந்தியை தாய் மொழியாக கொள்ளாத,
ஹிந்தி பேசும் சந்தர்ப்பவாதிகள் மற்றும் ஹிந்தி உளவியல் அடிமைகளின் சத்தம்தான் மிக அதிகம். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக