tamil.asianetnews.com - manimegalai : இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு பிரபலமானவர், சென்னை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி,
பிரதிக்ஷா. நான்காம் வகுப்பு படித்து வந்த பிரதிக்ஷா, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 70 ரீல்சுகள் வெளியிட்டு பிரபலமானவர்.
இந்த குழந்தையின் ஆர்வத்தை அறிந்த அக்கம் - பக்கத்தினர் தான், ஊக்குவித்து
இது போன்ற ரீல்ஸ்களை செய்யவைத்தனர். பின்னர் தன்னுடைய ரீலிசுகளுக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.
9 வயதிலேயே, திரைப்பட நகைச்சுவை காட்சிகளுக்கு, அதே போன்ற முக பாவனையுடன் வசனம் பேசுவது, பாடல்களுக்கு நடனமாடுவது, என தன்னுடைய அபார திறமையால் அனைவரையும் கவர்ந்தார் பிரதிக்ஷா.
இந்நிலையில் செவ்வாய்கிழமை (நேற்று) இரவு 8 மணியளவில், பிரதிக்ஷா தனது பக்கத்து தெருவில் உள்ள தாத்தா - பாட்டி வீட்டின் முன்பு, தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரின் பெற்றோர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கற்பகம், இரவில் விளையாடியதற்காக பிரதிக்ஷாவை திட்டி, வீட்டிற்கு சென்று படிக்க கூறியுள்ளனர்.
தோழிகளுடன் விளையாடி கொண்டிருக்கும் போது, அனைவர் முன்பும் தன்னை திட்டியதை எண்ணி ஆத்திரம் அடைந்த பிரதிக்ஷா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் சிறுமியிடம் வீட்டின் சாவியை கொடுத்து அனுப்பியுள்ளனர். அவரின் பெற்றோர் இருவரும், அருகே எதோ வேலை விஷயமாக சென்று விட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அப்போது சிறுமியின் பெற்றோர் பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. பீதியடைந்த கிருஷ்ணமூர்த்தி படுக்கையறை ஜன்னலை உடைத்து உள்ளே பார்த்துள்ளார்.
அப்போது சிறுமி தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த கிருஷ்ணமூர்த்தி, படுக்கையறையின் கதவை உடைத்து, சிறுமியை மீட்டு, உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். டாக்டர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரதிக்ஷா மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
shocking 9 years old reels queen pratiksha suicide
மேலும், 9 வயது சிறுமி எப்படி தற்கொலை செய்து கொள்வார் என சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமி பிரதிக்ஷா படுக்கையறையில் உள்ள சிறிய ஸ்டூலை வைத்து, ஏறி கம்பியில் ஒரு துணியில் சுருக்கு போட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. வெளியே சென்ற பெற்றோர் உடனடியாக வீட்டுக்கு வந்திருந்தால், சிறுமியை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து வந்ததால் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
நண்பர்களுடன் விளையாடியதற்காக தந்தை - தாய் கண்டித்து படிக்க கூறியதால் மனமுடைந்து சிறுமி பிரதிக்ஷா, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறுஏதேனும் காரணத்திற்க்காக பெற்றோர் திட்டினார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறு வயதில் பெற்றோர் திட்டுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதை நம் நலனுக்காக தான் சொல்கிறார்கள் என்பதை, பிள்ளைகளும், பிள்ளைகளை எப்படி கையாள்வது என பெற்றோர்களும் தெரிந்து கொள்ளவேண்டுயது மிகவும் முக்கியமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக