திங்கள், 12 டிசம்பர், 2022

மேயர் ப்ரியா காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது- ஜெயக்குமார்

Kandasamy Mariyappan ·நான் வலதுசாரிகளை விரும்புவதற்கு ஒரு காரணம் உண்டு.!
நாம் எதை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறோமோ அதனை அவர்கள் நமக்காக செய்து விடுவார்கள்.!
80களுக்கு பிறகு பெரியாரை மறந்துவிட்ட நமக்கு பெரியாரை நினைவுபடுத்தி, இன்றைய இளைஞர்களையும் பெரியாரை படிக்க வைத்த பெருமை வலதூசாரிகள்.!
அதே போன்று, இளம் வயதிலேயே மேயராக பதவியேற்று, எப்படி மக்கள் பணியை செய்ய போகிறார் என்று எண்ணும்பொழுது...
வலதுசாரி நண்பர்கள் அவரது பணியை எளிதாக்கிவிட்டனர்.!
திருமதி. பிரியாவே இந்த புகழை (Limelight) எண்ணி பார்த்திருக்க மாட்டார்.! 

மாலைமலர் : மாமல்லபுரம்: மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம், உய்யாலி குப்பம், கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆலிக்குப்பம் போன்ற பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீன்பிடி சாதனங்கள், படகுகள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில் பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். உய்யாலிகுப்பம் கிராமத்தில் சேதத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் இந்தப் பகுதி கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டது என்று மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.



1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Jayakumar himself is a tire licker, he talks about self respect.