ராதா மனோகர் : அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் - நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த நிகழ்வை கருதுகிறேன்.
தெற்காசிய அரசியல் பொதுவெளியில் திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் உலக அரசியல் கோட்பாடு சரித்திரத்தில் ஒரு அழுத்தமான பொன்னேடு ஆகும்.
மக்கள் நலன் சார்ந்த கோட்பாடு ஒரு அரசியல் கட்சியாக பரிணாம வளர்ச்சி அடைவதே மிக பெரிய சாதனையாகும்.
தெற்காசியாவில் ஜனநாயக விழுமியங்களை முன்னெடுத்த இயக்கங்களாகட்டுடம் மார்க்சிய விழுமியங்களை முன்னேடுத்த இயக்கங்களாகட்டும் திராவிட கோட்பாட்டு இயக்கம் பெற்ற வெற்றியை பெறவில்லை.
இந்த பின்னணியை புறந்தள்ளி விட்டு திராவிட இயக்கத்தின் இன்றைய வளர்ச்சியை பற்றி பேசமுடியாது.
கோட்பாட்டு அரசியலை முன்னெடுத்த ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக பரிணமித்து இமாலய வெற்றியையும் பெற்றது என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு காவிய சாதனையாகும்.
தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒரு கட்சி சித்தாந்த கோட்பாட்டையும் கூடுமானவரை கைவிடாமல் .
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திராவிட கோட்பாட்டை சமூக மட்டத்தில் எடுத்து சென்ற ஒரு பெருமை மிக வரலாற்று சாதனை கண்முன்னே தெரியும் ஒரு அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.
எம்ஜியார் வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோதும் சரி எமெர்ஜென்சி அடக்கு முறையின் போதும் சரி திமுகவை கட்டி காத்தது யார் என்பதெல்லாம் உலகம் அறிந்தது.
திமுகவின் அசைக்க முடியாத பல தூண்கள் எல்லாம் திமுகவை விட்டு விலகிய நிகழ்வுகளையும் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
இன்று குடும்ப அரசியல் என்று விமர்சனம் செய்யும் போது,
திமுகவின் அந்த இக்கட்டான காலக்கட்டங்களில் திமுகவை கட்டி காத்தவர்கள் யார் என்ற வரலாற்றையும் கொஞ்சம் எண்ணி பார்க்கவேண்டும் .
அந்த அனுபவம் சாதாரணமானதல்ல ..
கட்சியின் நலன் கருதி யாருக்கு பொறுப்புக்கள் வழங்கவேண்டும் என்பது அந்த கட்சியின் உள்ளும் புறமுமாக பயணிக்கும் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் மிக நன்றாக தெரியும்.
ஒரு அரசியல் கட்சியில் அல்லது ஒரு இயக்கத்தில் தவறுகள் நடக்கலாம் .
ஆனால் ஒரு சமூக இயக்கமாகவும் அரசியல் கட்சியாகவும் இரட்டை சவாரி செய்யும் அமைப்புக்கு உள்ள சிக்கல்களை ஏனைய காட்சிகளை விமர்சிக்கும் பாங்கில் விமர்சிக்க முடியாது
திமுகவின் வரலாறு பெரியது . மாண்புடையது
இன்னும் சரியாக சொல்லப்போனால் திமுகவின் சித்தாந்த எதிரிகள் இதை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லா அரசியல் கட்சிகளையும் போல திமுக வெறும் தேர்தல்களை மட்டும் சந்தித்து கொண்டிருக்கவில்லை.
ஆயிரம் ஆண்டுகளாக புரையோடி போயிருக்கும் சமூக அவலங்களை சரியான கோணத்தில் எதிர்கொண்டு துடைத்து எறிந்து கொண்டிருக்கும் திராவிட படையணிதான் திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
அதன் வரலாறு இந்த உண்மைக்கு சாட்சியாக இருக்கிறது.
திமுகவை அன்று போல் இன்றும் முழு இந்திய ஒன்றியமும் உற்று நோக்கி கொண்டிருக்கிறது
ஆரிய சித்தாந்தவாதிகள் மட்டுமல்ல . அந்த அடக்கு முறைகளில் இருந்து சமூகவிடுதலை பெற துடிக்கும் மாநிலங்களுக்கும் மக்களும் கூட தமிழ் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு கலங்கரை விளக்கமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்
இந்த கலங்கரை விளக்கத்திற்கு தொடர்ந்து ஒளியேற்றும் அடுத்த கட்ட தலைவராக திரு உதயநிதி ஸ்டாலின் உருவாகி கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்
திரு உதயநிதி அவர்களை வெறும் அமைச்சராக நான் பார்க்கவில்லை,
காலம் தேர்ந்தெடுத்த திராவிட இளைய தலைவர் அவர் .
திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களே உங்களை மலைபோல் நம்பி இருக்கிறது திராவிட இயக்கமும் திராவிட கோட்பாடும் ..
திராவிடத்தின் அடுத்த கட்ட வெற்றிகளை ஈட்டிட வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக