வியாழன், 15 டிசம்பர், 2022

விடுதியில் பாலியல் தொந்தரவு: கம்பு, கட்டைகள் கொண்டு வார்டனை சரமாறியாக தாக்கிய மாணவிகள்...!

 தினத்தந்தி  :  பெங்களூரு,  கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் காட்டேரி என்ற கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றிவரும் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அவ்வபோது மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் ஆத்திரத்தில் கம்பு, கட்டைகள் உள்ளிட்டவைகளால் கொண்டுஅவரை சரமாறியாக தாக்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசாரை மாணவிகள் உள்ளே விட மறுத்தனர். விடுதியின் கதவை பூட்டிக்கொண்ட மாணவிகள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டனை அடித்து துவைத்து எடுத்தனர். நீண்ட நேரம் போராடி வார்டனை மீட்ட போலீசார் பாலியல் தொந்தரவு குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் தங்களை ஆபாச வீடியோக்களை பார்க்க வைத்தாகவும், தகாத முறையில் தொட வற்புறுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், மாணவிகளின் இடமாற்றச் சான்றிதழில் மோசமான குணாதிசயங்களைக் குறிப்பிட்டு விடுவதாக எங்களை மிரட்டியதாக அவர் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: