tamil.samayam.com : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகாவதி அணையை சேர்ந்த பத்மா என்ற பெண் கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பத்மாவை காணவில்லை என்று அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த சிலதினங்களுக்கு பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பத்மாவின் உடல் கொச்சி பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்த பத்மாவின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த போது அந்த செல்போன் முகவரிடம் இருப்பது தெரியவந்தது.
அந்த முகவரை கைது போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி பின்னணி தெரிய வந்தது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியில் உள்ள லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதிகள் செல்வம் பெருக நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு முகவரிடம் தொடர்பு கொண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
doctor couple accused - கைதான தம்பதி
இந்த முகவர் கடந்த செப்.27-ம் தேதி கொச்சி கடவந்திரா பகுதியில் இருந்து பத்மாவை கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் காலடியை சேர்ந்த பெண்ணும் காணவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் காலடியை சேர்ந்த ரோஸாலி மாயமான பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த நரபலியானது ஆரன்முலா காவல் நிலைய எல்லையில் நடைபெற்றதாக கேரள மாநிலத்தின் தென்மண்டல ஐஜி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட முகவர் மற்றும் தம்பதிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். செல்வம் செழிப்பதற்காக அப்பாவி பெண்களை கடத்தி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக