பிந்திய செய்தி : 20 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஏஜென்சி செய்திகள் கூறுகின்றன
மாலைமலர் : லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
சீன எல்லையில் மோதல்- இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு இந்தியா-சீனா எல்லைப்பகுதி லடாக்: கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி
இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன. தொடர்ந்து படைப்பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சீன தரப்புடன் தொடர்ச்சியான உயர் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறியிருந்தார்.
பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், லடாக் எல்லைப்பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனப் படைகள் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமைதியை ஏற்படுத்த அப்பகுதியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக