விகடன் :இலந்தக்கரையில் சிரியா நாட்டு தங்க நாணயம்
கீழடி அகழாய்வின் தொடர்ச்சியான அகரத்தில் கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி யில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
கீழடி (அகரம்) கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கின. ஆனால் மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கினஅதனைத் தொடர்ந்து மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் மனித எலும்புகளும் கிடைத்தன.
இந்நிலையில் அகரத்தில் கி.பி- 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதனால் கீழடி 6-ம் கட்ட தொல்லியல் ஆய்வில் 4 இடங்களிலும் முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, " அகரத்தில் ஒரு தங்க நாணயம் கிடைத்துள்ளது. இந்த நாணயம் 1 செ.மீ அளவீடு கொண்டது. 300 மி.கி எடையைக் கொண்டுள்ளது. இது கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின்பக்கம் 12 புள்ளிகள் அதன்கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது. இக்காசு வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளது" என்றனர்
மேலும் இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் பேசுகையில், `` கீழடி 2300 வருடங்களுக்கு முற்பட்டது. இங்கு பெரிதாக தங்க நாணயங்கள் கிடைத்ததில்லை. தற்போது கீழடியின் தொடர்ச்சியான அகரத்தில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கிடைத்துள்ளது, மகிழ்ச்சியான விஷயம்.
இதேபோல் இலந்தக்கரையில் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா நாணயம் கிடைத்துள்ளது. இப்படி மொத்தம் 3 சிறப்புமிக்க நாணயங்கள் காளையார்கோயிலை அடுத்த இலந்தக்கரையில் கிடைத்துள்ளன. எனவே கீழடியைப் போல் இலந்தக்கரையிலும் விரிவான அகழாய்வை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும்" என்றார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக