மின்னம்பலம் :உலக
முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஒன்றான
ஃபேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை நேற்று (நவம்பர் 4) வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஃபேஸ்புக்கில் பல்லாயிரக்கணக்கான போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 210 கோடி பயனாளிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் விரும்பத்தகாத வகையில் உள்ளது.
இதில், 10 சதவிகித கணக்குகள் போலியானவை. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும். அதன்படி,பார்க்கும்போது 210 கோடி பயனாளிகளில் 13 சதவிகிதம் பேர் அதாவது 27 கோடி பேர் போலி கணக்குகளை வைத்துள்ளனர்.
போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. போலி செய்திகளை தடுத்து நிறுத்த, போலி கணக்குகளை தடுக்க, விரும்பத்தகாத கருத்துக்களை நீக்க நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக