திங்கள், 6 நவம்பர், 2017

நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !

வினவு :நீர் வழிதடங்கள் அனைத்தும். முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்துவருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.
ட- கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
பன்னாட்டு கம்பெனிகள், ஷாப்பிங் மால்கள், பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் ஆகிய வளர்ச்சியின் அடையாளங்களாக சொல்லப்படும் இவைதான், தமிழகம் முழுவதும் நீர்வழி பாதைகளையும், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவு தண்ணீர் வெளியேற வழியில்லாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
நிரம்பி வழியும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி
அப்படி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை நாராயணபுரம் அண்ணாநகர் மேற்கு பகுதிக்கு உட்பட்டு மொத்தம், 10 தெருக்களில் 6,7,8,9 ஆகிய தெருக்களில் முழங்கால் அளவு முதல் இடுப்பு அளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மேற்கண்ட பகுதியில் நிவாரணப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை விளக்கும் விதமாகவும் மக்களிடம் பேசப்பட்டது.
அப்பகுதி மக்கள் “மூன்று நாட்களாக மழை கொட்டியது, எங்களை அரசு – கட்சிக்காரங்க யாரும் எட்டி பார்க்கவில்லை. நீங்கள் வந்து பார்த்ததே ஆறுதலாக உள்ளது” என்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்ய, ஆபீஸ் மேடம் (office madam) – 8778814966, AE – 9445190788 ஆகிய அரசு அதிகாரிகளின் எண்களுக்குத் தொடர்பு கொண்ட போது, போனை அணைத்துவிட்டனர் (Switch off). மேலும் சுகாதார கண்கானிப்பாளர் (Health inspector)  9445190074 எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, உரிய ஏற்பாடுகளைச் செய்வோம், ஒரு மணி நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு (4.11.2017 மாலை, 6:45) கூறினார் சம்பந்தப்பட்ட அதிகாரி. மீண்டும் தொடர்பு கொண்ட போது, இவருடைய தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.
கள நிலவரம் இவ்வாறு இருக்க, மழை நிவாரண வேலைகளுக்கு துறைவாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு எதிராக அரசு நடந்து வருகிறது என்பது தான் உண்மையாகும்.
கடந்த 2015 -ம் ஆண்டைப் போல தொடர்ச்சியாக கனமழை பொழியாமல், சற்று இடைவெளி விட்டு பெய்த மழையால், தண்ணீர் வெளியேற இயற்கை வாய்ப்பளித்துள்ளது. ஆனாலும் நீர் வழிதடங்கள் அனைத்தும் முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.
வட கிழக்கு பருவ மழை பெய்வது என்பது இயற்கை! ஆனால் எடப்பாடி அரசு இன்னமும் நீடிப்பது இயற்கைக்கே எதிரானது என்பதுதான் கள நிலைமைகள் உணர்த்தும் உண்மை. இந்த உண்மையினை மக்களிடம் கொண்டு செல்வோம்…
தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்

மழை காரணமாக நவ – 7 சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கு கூட்டம் தள்ளிவைப்பு
நண்பர்களே,
சென்னையில் நவ 7 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவிருந்த ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை தீவிரமடைந்து வருவதாலும், குறிப்பாக சென்னையில் அதனால் மக்களுக்கும் பொதுப்போக்குவரத்துக்கும் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து வருவதனாலும், நவம்பர் 7 அன்று மாலை, சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கத்தில் நடைபெறவிருந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது.
பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துகள் இல்லை: