வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

நடிகர் அல்வா வாசு காலமானார் .... 900 படங்களுக்கு மேல் நடித்தவர் ...

 தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நலக் குறைவால் காலமானார் மதுரை: தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரானார். `அமைதிப்படை', ரஜினிகாந்தின் `அருணாச்சலம்', `சிவாஜி', நடிகர் சத்யராஜ் உள்பட பல நடிகர்களின் படங்களில் இவர் நடித்த காட்சிகள் பிரபலம்.
குறிப்பாக வடிவேலு உடன் இவர் நடித்துள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை எப்போதும் சிரிக்க வைக்கக் கூடியது. சில மாதங்களுக்கு முன்பு அல்வா வாசு கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சையால் பலன் கிடைக்கவில்லை. அவர் உயிரை காப்பாற்றுவது கடினம். எனவே அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறியதையடுத்து, அல்வா வாசு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், உடல்நலம் கடும் மோசமானதால் இன்று அவர் காலமானார். நடிகர் அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர். மாலைமலர்

கருத்துகள் இல்லை: