திங்கள், 20 பிப்ரவரி, 2017

சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வரலாறு .. ஒய்வு பெற்றபின் ஜெயாவின் அடிமையாக பதவி உயர்வு பெற்றவர் ..

R.M. Paulraj: சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இந்த ஜமாலுதீன் யார்?
இவர் 2012இல் ஓய்வு பெற்ற IAS அதிகாரி. ஜெயலலிதா அவருக்கு தொடர்ந்து பணி நீட்டிப்பு வழங்கியதால் 5 ஆண்டுகளாக‌ பதவியில் நீடிக்கிறார். 2014இல் ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு நீதிபதி குன்ஹாவால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அவர் எம்.எல்.ஏ பதவியிலிருந்து நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதை முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் ஜமாலுதீன் மாதக் கணக்கில் இழுத்தடித்தார். ஆனால் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேல் தன் பதவியை ராஜினாமா செய்தபோது, அந்த தொகுதி காலியாக இருப்பதாக இரண்டே நாளில் ஜமாலுதீன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தார். இப்படிப்பட்ட ஜமாலுதீனிடம் எப்படிப்பட்ட அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?< ஜெயலலிதாவால் பணி நீட்டிப்பும் அதிகாரமும் பெற்று அனுபவித்து வரும் ஓய்வுபெற்ற IAS மற்றும் IPS அதிகாரிகள் ஒரு பெரும் படையாகவே உள்ளனர். அதிமுக நிர்வாகிகளை விட இவர்களே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் அதிக விசுவாசத்துடன் நடந்துகொள்ளும் அடிமைகள். இவர்கள் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படும் வரையில் நியாயமான நிர்வாகத்தை அரசிடம் எதிர்பார்க்க இயலாது.
அதிகார ஒட்டுண்ணிகள்.

கருத்துகள் இல்லை: